வெகு நாட்களுக்கு பிறகு ஒரு குறும்பட அறிமுகம். இயக்குனர் Alpha Diallo வின் செனெகல் நாட்டு திரைப்படம். 18 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம் பெர்லின் திரைப்பட விழா வில் திரையிடப்பட்டது. இதுதான் இயக்குனரின் முதல் குறும்படம் | அனைத்து நடிகர்களும் முதல் முறையாக நடித்தவர்கள் தான். ஒரு சிறிய கதை ஆனால் கேள்வி எழுப்பக்கூடியது.
வடக்கு செனெகலின் ஒரு சிறிய கிராமம். பெண்டா மற்றும் முஸ்தபா கணவன் மனைவி அவர்களது ஒரே மகன் 17 வயதே நிரம்பிய தெம்பா. டகார் நகரில் அளவுக்கு அதிகமான சில மாத்திரை மருந்துகளை உட்கொள்ளலால் உயிரி*ழக்*கிறான்.

அவனது உடல் அந்த கிராமத்திற்கு வருகிறது. மறுநாள் இறுதி சடங்கு நடைபெற உள்ளது. ஆனால் தந்தை க்கு கடும் கோபம் அவன் மேல் அதை தொடர்ந்து ஊரார் முன்னாள் ஒரு முடிவை எடுக்கிறார் “இவ்வாறு இறந்தவனின் ஆன்மா நிச்சயம் தூய்மையற்றதாக இருக்கும். அவனை என் குடும்ப கல்லறையில் அடக்கம் செய்ய முடியாது. என்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தாயின் அழுகை கட்டுப்படுத்த முடியாமல் அவள் தன்னுடைய அம்மாவை நோக்கி சென்று ஆறுதல் தேடுகிறாள்.
கணவனின் இந்த முடிவை ஏற்க மறுக்கிறாள் பெண்டா . மரபா? சமூகமா? நீயா ? நானா ? மகனா? அன்பா? என பல கேள்விகளுக்கு பிறகு மகன் அந்த மண்ணில் புதை*க்க பட்டனா இல்லையா என்பதே இந்த 18 நிமிடப் படம்
ஒரு குடும்ப துயரத்தை மட்டும் சொல்லவில்லை. அது ஒரு பெரிய சமூகக் கேள்வியை எழுப்புகிறது. ஒரு தவறால் மனிதன் முழுவதும் தூய்மையற்றவனா?
ஒவ்வொரு கிராம நகர மக்களுக்கும் சில நடைமுறைகள் இருக்கும். அவரர் குடும்ப முறைப்படி சில சடங்குகள் செய்து இறுதி மரியாதையை செலுத்துவார்கள். தெம்பாவிற்கு அங்கு என்ன பிரச்னை நடந்தது அவனுக்கு என்ன ஆச்சு எதனால் இந்த முடிவுக்கு வந்தான் ஏன் என்ன ? என எதுவுமே விளக்கமாக காட்டி இருக்க மாட்டார்கள். அவன் உடல் ஊருக்கு வந்து சேர்ந்த பிறகு நடக்கும் கதை அவ்வளவே.
இது தந்தையின் கோபமாக நமக்கு காட்டப்பட்டாலும் அது ஒரு சமூகத்தின் தீர்ப்பு போல தெரிந்தது இறுதி காட்சிகள் எடுத்த விதம் சிறப்பு.
உலக சினிமாக்களில் ஆண் ஆதிக்கத்தையும், மரபுகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும், எதிர்த்து எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அந்த வகையில் மனைவி என்ன முடிவு செய்தால் மகன் அவளுக்கும் சொந்தம் ஆனால் கணவனோ என் முடிவு தான் இறுதி என்கிறார். தனது மகனுக்கு அங்கே இடம் கிடைத்ததா ? நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த குறும்படம் இப்போதைக்கு திரைப்படவிழாக்களில் மட்டுமே பங்குகொண்டுள்ளது. பெர்லின் தளத்தில் ட்ரைலர் இணைப்பு மட்டுமே உள்ளது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் வரும் நாட்களில் காண கிடைத்தால் அவசியம் ஒரு முறை காணுங்கள் அவர்களின் நிலப்பரப்பு வாழ்க்கை அவர்களின் கதையை.
ஜப்பானிய படமொன்று நினைவிற்கு வந்தது மரணத்திற்குப் பிறகு மனிதர்களுக்கு இறுதி சடங்குகள் சிலவற்றை செய்யும் நாயகன் அவனை பற்றிய கதையாக அது நகரும் இங்கே குடும்ப பிண்ணனி அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாடு கண்ணியம் “Souls of Fouta” ஒரு இறுதி சடங்கு பற்றிய கதை அல்ல. அது மரணத்திற்குப் பிறகும் மனிதனுக்கு அந்த மண்ணில் புதைப்பதற்கு இவ்வளவு கண்ணியம் தேவையா? என்பதை கேற்பது .
ஆன்மாவின் தூய்மை முக்கியமா அன்பு முக்கியமா உங்களிடம் முடிவு நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள் .
நன்றி

Post a Comment