நடந்து முடிந்த பெர்லின் திரைப்படவிழாவில் பங்குகொண்ட படங்களில் முதலில் பார்க்க கிடைத்தது இதுதான். முக்கிய பிரிவில் போட்டியிட்டு Ecumenical Jury Prize மற்றும் Berliner Morgenpost Readers’ Jury Award ஆகிய இரு விருதுகளை வென்ற திரைப்படம்
ஓ அப்படி என்றால் பரபர விறுவிறுப்பான அரசியல் சார்ந்த , ட்விஸ்ட் நிறைந்த படமோ? இல்லை.
யோசித்து பாருங்கள் நீங்கள் நன்றாக தூங்கிக்கொண்டு இருக்கும் பொது உங்கள் காதருகே வந்து ஒரு ஈ அல்லது கொசு, இங்குமங்குமாய் பறக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்ன செய்வீங்க??? ஆஃப்ஷன் ஒன்னு சன்னலை திறந்து அதை வெளியே தொரத்துவீங்க இல்லைன்னா எதையாவது எடுத்து ஒரு அடி வைப்போம் ல அப்படி ரெண்டுல எதை தேர்வு செஞ்சாங்க Olga அப்படிங்கறது தான் இங்க ஒரு தொடக்கப்புள்ளி. முடிவுலயும் இருக்கு.
அந்த உயரடுக்கு அபார்ட்மெண்ட் ல் வசிக்கும் Olga தனித்து வாழ்கிறார். ஆரம்பத்தில் தனது வீட்டுக்குள் பறக்கும் ஒரு ஈ-யை வெளியேற்ற முயற்சி செய்வதை பற்றி சொன்னேன் ல அதுக்கு இந்த படத்தை எடுத்த இயக்குனர் Fernando Eimbcke ஒரு பேட்டியில் சொல்கிறார் “ஒரு ஈ-யை வெளியே விட ஜன்னலை திறந்தால், அதற்குள் வேறொரு விஷயம் உள்ளே நுழையலாம்.” என்கிறார். முழு அர்த்தம் புரிய படம் பார்க்கணும்.
நகரத்தின் நடுவில் இருக்கும் அந்த அப்பார்ட்மெண்ட் . காலை நன்றாக வேலைசெய்த லிப்ட் மாலை ஆப் ஆகி விடும் , அக்கம்பக்கத்தில் ஒருத்தரும் பேசுக்கொள்வது இல்லை . அந்த கட்டிடத்துக்குள் olgaa வீட்டில் தனித்து வாழும் வாழ்க்கை. ஒரு சிறிய வெறுமை இருந்தாலும். அவளுக்கு அன்றாட Sudoku விளையாட்டும் டிவி யும் தான் அவளுடைய பொழுதுபோக்கு. அவளுக்கு சத்தம் பிடிக்காது மேலே யாரோ ஒரு மாதிரி நடந்தா கூட அந்த irritation பிடிக்காது.
அவள் ஒரு கட்டுப்பாட்டு வாழ்க்கையை வாழ்கிறார். அவளுக்கு Financial தேவை அதிகரிக்க சில மருத்துவ செலவுகள் காரணமாக ஒரே ஒரு பெட் ரூமை மட்டும் வாடகைக்கு விடுகிறாள். அவனும் ஒரு சாதாரண மனிதன் அந்த அறையை வாரத்திற்கு இவ்ளோ தொகை என்று பேசி எடுக்கிறார். அவருக்கு சில விதிமுறைகள் உள்ளது, இவரை தவிர வேர் யாருக்கும் அனுமதி இல்லை , ஆனால் அவர் Olga விடம் ஒரு விஷயம் மட்டும் மறைக்கிறார் அதென்ன? தனது ஒன்பது வயது மகனை. ரகசியமாக அந்த வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார். இவருடைய மனைவி மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சிறுவனுக்கு ஒரு சிறிய செல்பேசியை தந்துவிட்டு எதுவாக இருந்தாலும் என்னை அழைக்கவும் இங்கிருந்து வெளியே போகாதே என்கிறார். ஒருகட்டத்தில் வெளியே போன தந்தை ஆளை காணொம். ஆனால் சிறுவனோ இவர் இல்லாத நேரத்தில் தினமும் தனது அம்மா வை காண hospital-ல் நுழைவிற்கு செல்கிறான் அங்கே அவனை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். “Adults only.” யாராவது பெரியவர்கள் இருந்தால் மட்டுமே அனுமதி என்கிறார்கள் . அம்மாவிற்கு இந்த செருப்பை மட்டும் கொடுங்கள் என கதவு எண் எல்லாம் சொல்கிறான் அவனுக்கு அனுமதி இல்லை முடிவில் இவன் தனது அம்மாவை பார்த்தானா ? இடையில் அப்பாவை காணாவில்லை? செல் போன் திருடு போகிறது. olga வும் இவனை கண்டுபிடிக்கிறாள்.
அடுத்தென்ன என்பதே இந்த படம். நன்றாக இருந்தது. மெக்சிகோ சார்பாக சர்வதேச படங்கள் பிரிவில் போட்டியிட 99 ஆவது ஆஸ்காருக்கு அனுப்ப கூட வாய்ப்புள்ளது பார்ப்போம்.


Post a Comment