99வது ஆஸ்கர்: Latvia-வின் அதிகாரப்பூர்வ தேர்வு Ulya (Uļa) | 99th Oscar Submission For Best International Feature Film

2026ஆம் ஆண்டு உருவான Ulya, 99வது Academy Awards-ன் Best International Feature Film பிரிவில் Latvia-வின் அதிகாரப்பூர்வ Oscar submission ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

Latvia-வின் National Film Centre அமைத்த தேசிய நிபுணர் குழு, Oscar selection-க்காக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு படங்களில் இருந்து Ulya-வை ஒருமனதாகத் தேர்வு செய்தது. மற்றொரு போட்டியாளர் Dzintars Dreibergs இயக்கிய Escape Net (Kultfilma).




Ulya 1960களின் இறுதியில் Soviet Latvia-வின் தொலைதூர கிராமப்புறப் பகுதியில் வாழும் Ulya என்ற இளம் பெண்ணை மையமாகக் கொண்ட கதை. Old Believer குடும்பத்தைச் சேர்ந்த Ulya, கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் உயரம் கொண்டவள். அவளது அசாதாரண உயரம் குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்துகிறது. அவளுக்கு இந்த உலகில் தனக்கான இடம் இருக்கிறதா என்ற கேள்வியும் தொடர்ந்து எழுகிறது. ஒரு நாள் அவளது class photograph basketball coaches-ன் கவனத்தை ஈர்க்கிறது. இதையடுத்து Ulya தலைநகர் Riga-வுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு பிரபலமான basketball அணியில் சேர்க்கப்படுகிறாள். ஆனால் basketball உலகிலும் அவளது உயரமே அவளை வரையறுக்கத் தொடங்குகிறது. இறுதியில், கிராம வாழ்க்கையோ basketball உலகமோ தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உணரும் Ulya, தனது அடையாளத்தைத் தானே ஏற்றுக்கொண்டு ஒரு முக்கியமான முடிவை எதிர்கொள்கிறாள்: 

மறைந்து வாழ்வதா அல்லது உலகின் சிறந்த basketball player ஆக முயற்சிப்பதா? Cannes 2026 Ulya தனது World Premiere-ஐ 79வது Cannes Film Festival-ன் Un Certain Regard பிரிவில் பெற்றது. Latvia, Poland, Estonia மற்றும் Lithuania ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பான இப்படம் Cannes-ன் முக்கியமான Official Selection பிரிவுகளில் ஒன்றான Un Certain Regard-ல் தேர்வு செய்யப்பட்டது. படத்தின் World Premiere மே 21, 2026 அன்று நடைபெற்றது. 

Viesturs Kairišs Viesturs Kairišs, Latvia-வின் முக்கியமான contemporary filmmakers-ல் ஒருவர். Ulya அவரது Oscar journey-யில் மூன்றாவது Latvia submission. 

The Chronicles of Melanie (Melānijas hronika) — 2016 → Latvia-வின் 2017 Oscar submission January (Janvāris) — 2022 → Latvia-வின் 2023 Oscar submission 
Ulya (Uļa) — 2026 → Latvia-வின் 2027 Oscar submission 




இதன் மூலம் Kairišs, Latvia சார்பில் மூன்று முறை International Feature Film Oscar race-ல் இடம்பெற்றுள்ளார். Latvia – Oscar History Ulya, Academy Awards-க்கான Latvia-வின் 18வது official submission ஆகும். Latvia-வின் Oscar வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக Gints Zilbalodis இயக்கிய Flow அமைந்தது. 2024ஆம் ஆண்டு Latvia சார்பில் தேர்வு செய்யப்பட்ட அந்த animation திரைப்படம் 2025 Academy Awards-ல் Best International Feature Film பிரிவில் nomination பெற்றது. Ulya மூலம் Latvia மீண்டும் Cannes recognition பெற்ற ஒரு contemporary auteur film-ஐ Oscar race-க்கு அனுப்புகிறது.

Cannes Un Certain Regard selection, unusual coming-of-age story, Latvian history மற்றும் legendary basketball player Ulyana Semyonova-வின் biography-யால் inspired ஆன கதைக்களம் ஆகியவை Ulya-வை இந்த ஆண்டு கவனிக்க வேண்டிய Baltic entries-ல் ஒன்றாக மாற்றுகின்றன.

 Ulya — Latvia-வின் 99வது Academy Awards பயணம். #Oscars2027 #Latvia #LatvianCinema #Ulya #Ula #ViestursKairiss #Cannes2026 #UnCertainRegard #InternationalFeatureFilm #AcademyAwards #OscarRace #WorldCinema #MoviesMuseum

Post a Comment

Previous Post Next Post