99வது ஆஸ்கர்: தைவானின் அதிகாரப்பூர்வ தேர்வு A Foggy Tale (大濛) | 99th Oscar Submission For Best International Feature Film

99வது Academy Awards – Best International Feature Film பிரிவில் தைவானின் அதிகாரப்பூர்வ Oscar submission ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

A Foggy Tale (2025) 
இயக்கம்: Chen Yu-hsun 
நாடு: Taiwan 
மொழிகள்: Taiwanese Hokkien, Mandarin 
வகை: Historical Drama 
நேரம்: 134 நிமிடங்கள் 






1950களின் Taiwan-ஐ பின்னணியாகக் கொண்ட இந்த திரைப்படம், தனது சகோதரர் அரசால் தூக்கிலிடப்பட்ட பிறகு அவரது உடலை மீட்டு முறையான இறுதிச்சடங்கு செய்ய பணம் திரட்ட முயலும் ஒரு இளம் பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது. தனிப்பட்ட இழப்பையும் குடும்பத் துயரத்தையும் மையமாகக் கொண்டு, அந்தக் காலகட்டத்தின் அரசியல் அடக்குமுறையையும் படம் பதிவு செய்கிறது. Festival மற்றும் Awards A Foggy Tale முதன்முதலில் 2025 Taipei Golden Horse Film Festival-ல் திரையிடப்பட்டது. 

பின்னர் Taiwan-ல் theatrical release பெற்றதுடன், 2026-ல் Jeonju International Film Festival உள்ளிட்ட சர்வதேச festival screenings-லும் இடம்பெற்றது. திரைப்படம் 2025 Golden Horse Awards-ல் முக்கியமான recognition பெற்றதுடன்,

Netflix-ல் 2026 May 27 முதல் digital streaming-க்கும் வந்துள்ளது. 

Taiwan – Oscar History Taiwan 1957 முதல் Best International Feature Film category-க்கு திரைப்படங்களை அனுப்பி வருகிறது. 1980களில் இருந்து Taiwan-ன் cinema உலகளவில் அதிக கவனம் பெறத் தொடங்கியது. Ang Lee-யின் Eat Drink Man Woman, Edward Yang-ன் A Brighter Summer Day, Tsai Ming-liang-ன் Vive L'Amour, Hou Hsiao-hsien-ன் A City of Sadness மற்றும் Chung Mong-hong-ன் The Great Buddha+ போன்ற படங்கள் Taiwan-ன் முக்கியமான international cinema legacy-யில் இடம்பெறுகின்றன. Ang Lee-யின் Crouching Tiger, Hidden Dragon (2000) Best International Feature Film Oscar-க்கு Taiwan சார்பில் தேர்வு செய்யப்பட்டு nomination பெற்றதுடன், நான்கு Academy Awards வென்றது. 

அதேபோல் Ang Lee-யின் Brokeback Mountain மற்றும் Life of Pi போன்ற படங்களும் Taiwan-born filmmaker-ன் சர்வதேச Oscar success-ஐ மேலும் வலுப்படுத்தின. இப்போது Chen Yu-hsun-ன் A Foggy Tale, Taiwan-ன் 99வது Oscars entry-ஆக உள்ளது. 1950களின் Taiwan-ன் அரசியல் வரலாற்றை மையமாகக் கொண்ட இந்த படம் 99வது Academy Awards shortlist-ல் இடம்பெறுமா?

 #Oscars2027 #BestInternationalFeature #Taiwan #AFoggyTale #大濛 #ChenYuhsun #TaiwaneseCinema #GoldenHorse #Netflix #WorldCinema #AcademyAwards #OscarSubmission27 #MoviesMuseum #8

Post a Comment

Previous Post Next Post