99வது Academy Awards – Best International Feature Film பிரிவில் Dominican Republic-ன் அதிகாரப்பூர்வ Oscar submission ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Melodrama (2026)
இயக்கம்: Andrés Farías
நடிப்பு: Mercedes Morales, Jimmy Jean-Louis, Sarah Jorge León, Cyndie Lundy, Adriana Zayas நாடு: Dominican Republic
மொழிகள்: Spanish, Haitian Creole, French
வகை: Drama, Romance
நேரம்: 90 நிமிடங்கள்
இது Dominican filmmaker Andrés Farías-ன் இரண்டாவது feature film. அவரது முதல் திரைப்படமான Candela (2021), Biarritz Amérique Latine Film Festival-ல் Jury Prize வென்றிருந்தது. Melodrama-வின் கதை Sonia என்ற Dominican widow-வை மையமாகக் கொண்டது. கணவரின் மரணத்திற்குப் பிறகு, பல ஆண்டுகளாக வாழ்ந்த தனது குடும்ப வீட்டை விற்றுவிட்டு சிறிய apartment-க்கு குடிபெயர வேண்டிய நிலை அவருக்கு ஏற்படுகிறது. இந்த மாற்றத்தால் உருவாகும் தனிமை மற்றும் துக்கத்தின் மத்தியில், அருகிலுள்ள கட்டுமானப் பணியில் வேலை செய்யும் Haitian construction worker மற்றும் poet ஆன Aimé-வை Sonia சந்திக்கிறார். இருவருக்கும் இடையே எதிர்பாராத காதல் உருவாகிறது. ஆனால் Dominican Republic மற்றும் Haiti இடையிலான சமூக மற்றும் அரசியல் பதற்றம், race, class மற்றும் migration தொடர்பான prejudice ஆகியவை இந்த உறவுக்கு தடையாக மாறுகின்றன.
தனிப்பட்ட காதல் கதையின் வழியாக Dominican-Haitian உறவுகளையும் contemporary Dominican society-யையும் படம் அணுகுகிறது. Festival journey Melodrama, Havana Film Festival, Miami Film Festival மற்றும் Chicago Latino Film Festival உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. Miami Film Festival-ல் இதன் US Premiere நடைபெற்றது. 2026 Dominican Film Festival in New York-ல் படம் Best Film விருதையும், Andrés Farías Best Director விருதையும், Mercedes Morales Best Actress விருதையும் பெற்றது. Oscar selection Dominican Academy of Cinematographic Arts and Sciences (ACCINE RD) அமைப்பின் Film Selection Academic Committee மேற்கொண்ட தேர்வு செயல்முறையின் மூலம் Melodrama, 99வது Oscars-க்கான Dominican Republic-ன் official submission ஆக தேர்வு செய்யப்பட்டது. இதன் மூலம் Dominican Republic தனது 19வது International Feature Film submission-ஐ அனுப்புகிறது.
இதுவரை அந்த நாட்டின் எந்த திரைப்படமும் இந்த category-ல் Oscar nomination பெறவில்லை.
Dominican Republic-ன் Oscar journey-ல் இதற்கு முன்பு குறிப்பிடத்தக்க submissions-ஆக Carpinteros (2017), Miriam Miente (2018), La Fiera y la Fiesta (2019), Liborio (2021) மற்றும் Bantu Mama (2022) போன்ற திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது grief, love, race மற்றும் social divisions ஆகியவற்றை மையமாகக் கொண்ட Melodrama, Dominican Republic-க்கு முதல் Oscar nomination-ஐ பெற்றுத் தருமா?
99வது Academy Awards Best International Feature Film shortlist December 15 அன்று வெளியாகிறது.
#Oscars2027 #BestInternationalFeature #DominicanRepublic #Melodrama #AndresFarias #DominicanCinema #MiamiFilmFestival #WorldCinema #AcademyAwards #OscarSubmission27 #MoviesMuseum #7

Post a Comment