99th Academy Awards: Sri Lanka-வின் அதிகாரப்பூர்வ தேர்வாக Riverstone | 99th Oscar Submission for Best International feature Film from Srilanka

 Lalith Rathnayake இயக்கிய Riverstone திரைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ தேர்வாக அறிவித்துள்ளது. National Film Corporation (NFC) Chairman மற்றும் Sri Lanka National Oscars Selection Committee-ன் Chairman Sudath Mahaadivulwewa, 2026 செப்டம்பர் 28 அன்று நடைபெற்ற media briefing-ல் இந்தத் தேர்வை அறிவித்தார். இந்த ஆண்டு Sri Lanka, Academy-யால் அங்கீகரிக்கப்பட்ட புதிய national selection mechanism-ன் கீழ் தனது official Oscar entry-ஐ தேர்வு செய்துள்ளது. 





Riverstone இயக்கம்: Lalith Rathnayake நாடுகள்: Sri Lanka ஆண்டு: 2025 Runtime: சுமார் 120 நிமிடங்கள் மொழி: Sinhala வகை: Drama / Thriller முக்கிய நடிகர்கள்: Shyam Fernando Mahendra Perera Randika Gunathilaka Priyantha Sirikumara Ananda Kumara Unnehe தயாரிப்பாளர்கள்: Prabath Roshan, Nimanthi Porage திரைக்கதை: Lalith Rathnayake, Nilantha Perera ஒளிப்பதிவு: Prabath Roshan எடிட்டிங்: Thissa Surendra படத்தின் 

கதை Sri Lanka-வின் Knuckles மலைத்தொடரின் கடினமான மலைப்பாதைகளில் மூன்று போலீஸ் அதிகாரிகள் ஒரு இளம் கைதியை அவனது கிராமத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். ஆனால் இது ஒரு சாதாரண police escort அல்ல. அந்த கைதியை சட்டப்படி விசாரணைக்கு அழைத்துச் செல்வது போலத் தோன்றினாலும், அந்தப் பயணத்தின் உண்மையான நோக்கம் அவனை ஒரு போலியான “police encounter” மூலம் கொலை செய்வதாகும். பயணத்தின் போது மூன்று அதிகாரிகளும் தங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகள், பயம், அதிகாரம் மற்றும் மனசாட்சியுடன் போராடத் தொடங்குகிறார்கள். 

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கும் இடையிலான வேறுபாடு, சட்டத்தின் பெயரில் நடைபெறும் வன்முறை மற்றும் தனிநபரின் மனசாட்சி ஆகியவை படத்தின் மையமாகின்றன. Riverstone, ஒரு police thriller என்ற அளவைத் தாண்டி, state violence, abuse of power, morality மற்றும் மனிதர்களின் மனப்போராட்டம் குறித்து கேள்வி எழுப்பும் திரைப்படமாக அமைந்துள்ளது. 

Shanghai International Film Festival 2025 Riverstone தனது சர்வதேச festival journey-யில் 2025 Shanghai International Film Festival-ல் திரையிடப்பட்டது. அங்கு Asian New Talent Competition-ல் இரண்டு முக்கிய விருதுகளை வென்றது: Best Screenplay – Lalith Rathnayake & Nilantha Perera Best Cinematography – Prabath Roshan இந்த recognition, Riverstone-ஐ Sri Lankan cinema-வின் முக்கியமான புதிய international festival titles-ல் ஒன்றாக நிலைநிறுத்தியது. பின்னர் படம் Kolkata, Bangalore,Singapore, São Paulo உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. 

Singapore International Film Festival-ன் Asian Feature Film Competition-லும் இடம்பெற்றது. Lalith Rathnayake Lalith Rathnayake, Sri Lankan filmmaker மற்றும் screenwriter. திரைப்படம் மற்றும் television துறையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள அவர், ஆரம்பத்தில் theatre-ல் ஈடுபட்டு பின்னர் சுமார் பத்து ஆண்டுகள் cinema மற்றும் television-ல் assistant director ஆக பணியாற்றினார். அவரது directorial feature debut The Other Half (2019). The Other Half சர்வதேச அளவில் 50-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றதாக festival profiles குறிப்பிடுகின்றன. கல்வியின் மதிப்பு மற்றும் சமூகச் சூழலை மையமாகக் கொண்ட அந்தப் படத்திற்குப் பிறகு, Riverstone மூலம் state violence, power மற்றும் morality போன்ற மிகவும் அரசியல்-சமூகமான கருப்பொருளை அணுகுகிறார். 

Sri Lanka-வின் புதிய Oscar Selection Process இந்த ஆண்டு Sri Lanka-வின் Oscar selection process-ல் ஆறு திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவை: Vihanga Premaya (Peacock Lament) – Sanjeeva Pushpakumara Ayu – Chathra Weeraman Father – Chaminda Jayasuriya Anthony – Sukirthan Christhuraja & Jenosan Rajeswar Riverstone – Lalith Rathnayake Cricket Sadu – Dilshara Jayamanna இதில் ஐந்து Sinhala-language films மற்றும் ஒரு Tamil-language film இடம்பெற்றிருந்தன. Committee-யின் மதிப்பீட்டில் ஆறு படங்களில் நான்கு films Academy eligibility requirements-ஐ பூர்த்தி செய்தன. அதன்பின் Riverstone மற்றும் Father ஆகிய இரண்டு films final stage-க்கு சென்றன. இறுதியாக Riverstone, Sri Lanka-வின் official submission ஆக தேர்வு செய்யப்பட்டது. 




Sri Lanka – Oscar History Riverstone, Sri Lanka-வின் 3வது International Feature Film submission. Sri Lanka இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே Best Foreign Language/International Feature Film category-க்கு films அனுப்பியுள்ளது: Mansion by the Lake – Lester James Peries – 2003 The Road from Elephant Pass – Chandran Rutnam – 2009 இந்த இரண்டு படங்களும் final Oscar nomination பெறவில்லை. இதனால் Riverstone உட்பட Sri Lanka-வின் தற்போதைய record: 3 submissions 0 nominations 0 wins இது Sri Lanka-வின் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் புதிய official International Feature submission ஆகும்.

 #Oscars2027 #99thAcademyAwards #Riverstone #LalithRathnayake #SriLanka #SriLankanCinema #InternationalFeatureFilm #WorldCinema #AsianCinema #ShanghaiInternationalFilmFestival #ShanghaiFilmFestival #SriLankaCinema #MoviesMuseum  

Post a Comment

Previous Post Next Post