99th Academy Awards: Sundance விருது மூலம் Oscar race-க்கு தகுதி பெற்ற Kosovo திரைப்படம் Shame and Money | 99th Oscar Submission

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99th Academy Awards-ன் International Feature Film பிரிவில், Kosovo-வைச் சேர்ந்த இயக்குநர் Visar Morina இயக்கிய Shame and Money திரைப்படம் புதிய festival qualification route மூலம் தகுதி பெற்றுள்ளது. 2026 Sundance Film Festival-ல் World Cinema Dramatic Competition பிரிவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், அங்கு World Cinema Dramatic Grand Jury Prize விருதை வென்றது. 99th Academy Awards-க்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறையின்படி, Sundance-ல் இந்தக் குறிப்பிட்ட விருதை வெல்லும் non-English-language திரைப்படங்கள், தங்கள் நாட்டின் official national submission ஆகத் தேர்வு செய்யப்படாமலேயே International Feature Film பிரிவுக்கு நேரடியாகத் தகுதி பெற முடியும். இதன் மூலம் Shame and Money, 99th Oscars International Feature Film race-ல் இடம்பெறும் முக்கியமான festival-qualified திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 



Shame and Money (Hatixhja dhe Shabani) இயக்கம்: Visar Morina நாடுகள்: Germany, Kosovo, Slovenia, Albania, North Macedonia, Belgium ஆண்டு: 2026 Runtime: 129 நிமிடங்கள் மொழி: Albanian வகை: Drama திரைக்கதை: Visar Morina, Doruntina Basha ஒளிப்பதிவு: Janis Mazuch இசை: Mario Batkovic எடிட்டிங்: Joëlle Alexis 

Kosovo-வின் கிராமப்புறப் பகுதியில் வசிக்கும் Shaban மற்றும் Hatixhe தம்பதியினர், தங்களுடைய மூன்று மகள்கள் மற்றும் குடும்பத்தினருடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரம் பண்ணையில் வளர்க்கப்படும் 12 பசுக்களைச் சார்ந்தது. ஒரு குடும்பப் பிரச்சினையின் காரணமாக Shaban-ன் சகோதரர் அவர்களுடைய பசுக்களைத் திருடிச் செல்கிறார். இதனால் குடும்பத்தின் ஒரே வருமான வழியும் முற்றிலும் அழிந்து போகிறது. வாழ்வாதாரத்தை இழந்த குடும்பம், வேலை தேடியும் தங்குவதற்கு இடம் தேடியும் Kosovo-வின் தலைநகரான Pristina-வுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அங்கு Hatixhe-யின் வசதியான வாழ்க்கை வாழும் சகோதரி மற்றும் அவரது கணவர் Alban அவர்களுக்கு உதவ முன்வருகின்றனர். ஆனால் அந்த உதவிக்குப் பின்னால் பல நிபந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. Shaban மற்றும் Hatixhe இருவரும் உணவகத்திலும் இரவு விடுதியிலும் துப்புரவுப் பணிகளைச் செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் Shaban தனது சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழக்காமல் இருக்க முயற்சி செய்கிறார். ஆனால் நகர வாழ்க்கையின் பொருளாதார அழுத்தம், வேலை கிடைக்காத நிலை, உறவினர்களின் அணுகுமுறை மற்றும் சமூகத்தின் வர்க்க வேறுபாடுகள் அவரைத் தொடர்ந்து நெருக்கடிக்குள் தள்ளுகின்றன. ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரப் போராட்டத்தின் வழியாக, பணம் மனிதனின் மதிப்பை எவ்வாறு தீர்மானிக்கிறது, வறுமையில் இருப்பவர்கள் ஏன் தங்களுடைய சுயமரியாதையைக்கூட விட்டுக்கொடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள் போன்ற கேள்விகளை இந்தப் படம் எழுப்புகிறது. 

Shame and Money என்பது ஒரு குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினையை மட்டும் பேசும் திரைப்படம் அல்ல. Hyper-capitalism, சமூக ஏற்றத்தாழ்வு, குடும்ப உறவுகள், வறுமை மற்றும் மனித மாண்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட சமூக யதார்த்தத் திரைப்படமாக அமைந்துள்ளது. 2026 Sundance Film Festival Shame and Money திரைப்படம் 2026 ஜனவரி 25 அன்று நடைபெற்ற Sundance Film Festival-ல் தனது World Premiere-ஐக் கண்டது. அங்கு World Cinema Dramatic Competition பிரிவில் இடம்பெற்ற இந்தப் படம், அதன் சமூக யதார்த்தமான கதை சொல்லல் மற்றும் குடும்பத்தின் பொருளாதாரப் போராட்டத்தை அணுகிய விதத்திற்காக கவனம் பெற்றது. இந்தப் பிரிவில் படத்திற்கு மிக முக்கியமான அங்கீகாரம் கிடைத்தது: World Cinema Dramatic Grand Jury Prize – Winner, 2026 இந்த விருதுதான் 99th Academy Awards-ன் புதிய festival qualification விதிப்படி படத்திற்கு International Feature Film பிரிவில் தகுதி பெற வழிவகுத்தது. 

Sundance-ல் கிடைத்த இந்த வெற்றிக்குப் பிறகு Shame and Money பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.





Visar Morina Visar Morina, Kosovo-வில் உள்ள Pristina நகரில் 1979-ஆம் ஆண்டு பிறந்த திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். தனது 15-வது வயதில் Germany-க்கு குடிபெயர்ந்தார். தற்போது Cologne நகரைத் தளமாகக் கொண்டு பணியாற்றி வருகிறார். திரைப்படம் மற்றும் நாடகத் துறையில் பணியாற்றிய பிறகு, Germany-யில் உள்ள Academy of Media Arts Cologne கல்வி நிறுவனத்தில் இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல் பயின்று 2010-ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். அவரது முதல் முழுநீளத் திரைப்படமான Babai (Father), 2015 Karlovy Vary International Film Festival-ல் திரையிடப்பட்டது. அந்தப் படத்திற்காக Visar Morina Best Director விருதைப் பெற்றார். மேலும் Babai, Kosovo-வின் சார்பில் Academy Awards-க்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்ட திரைப்படமாகவும் இருந்தது. 




அவரது இரண்டாவது திரைப்படமான Exile (2020), Sundance Film Festival-ன் World Cinema Dramatic Competition பிரிவில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தில் Sandra Hüller முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2026-ல் வெளியான Shame and Money, அவரது மூன்றாவது முழுநீளத் திரைப்படமாகும். இதன் மூலம் சமகால Kosovo சமூகத்தின் வாழ்க்கை, பொருளாதார அழுத்தம் மற்றும் மனித உறவுகளைத் தனது திரைப்படங்களின் வழியாக தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார். 

#Oscars2027 #99thAcademyAwards #ShameAndMoney #HatixhjaDheShabani #VisarMorina #KosovoCinema #Sundance2026 #WorldCinema #InternationalFeatureFilm #SundanceFilmFestival #EuropeanCinema #MoviesMuseum

Post a Comment

Previous Post Next Post