May el-Toukhy இயக்கிய Kvinde Ukendt (Woman Unknown) திரைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ தேர்வாக அறிவித்துள்ளது. Denmark-ன் Oscar Committee, Marijana Jankovic இயக்கிய Hjem (Home) மற்றும் Amalie Næsby Fick இயக்கிய Dobbeltfejl (Double Fault) ஆகிய இரண்டு படங்களுடன் பரிசீலித்த பிறகு Woman Unknown-ஐ official Danish submission ஆகத் தேர்வு செய்தது. இந்த முடிவு 2026 செப்டம்பர் 25 அன்று அறிவிக்கப்பட்டது.
Woman Unknown இயக்கம்: May el-Toukhy International Title: Woman Unknown நாடுகள்: Denmark, Sweden, Latvia ஆண்டு: 2026 Runtime: 124 நிமிடங்கள் மொழி: Danish வகை: Historical Drama / Psychological Drama முக்கிய நடிகர்கள்: Mathilde Arcel Carsten Bjørnlund Thorbjørn Hedegaard Marina Bouras
கதை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான Denmark. Marie என்ற இளம் பெண், தன்னை வேலைக்கு அமர்த்திய பணக்கார வயதான widower Christian-ஐ திருமணம் செய்யத் தயாராகிறாள். ஆனால் அவளது கடந்த காலத்தில் இருந்த ஒரு உறவு மீண்டும் அவளது வாழ்க்கைக்குள் வருகிறது. போரின் போது ஒரு German soldier-உடன் இருந்த உறவு Marie-யின் எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்துகிறது. அவள் தனது கடந்த காலத்தை மறைத்து புதிய வாழ்க்கையை உருவாக்க முயற்சிக்கும் நிலையில், guilt, shame, morality மற்றும் சமூகத்தின் judgment ஆகியவை அவளைச் சுற்றி இறுக்கமாகத் தொடங்குகின்றன. ஒரு பெண்ணின் உடல், கடந்த காலம் மற்றும் தேர்வுகள் எவ்வாறு சமூகத்தின் கட்டுப்பாடு மற்றும் தீர்ப்பின் மையமாக மாறுகின்றன என்பதை May el-Toukhy இந்த historical drama வழியாக ஆராய்கிறார்.
Venice Film Festival 2026 Woman Unknown தனது World Premiere-ஐ 83rd Venice International Film Festival-ன் Venezia 83 Competition-ல் பெற்றது. 2026 செப்டம்பர் 6 அன்று Venice-ல் முதல் முறையாக திரையிடப்பட்ட படம், festival-ன் முக்கியமான Golden Lion விருதை வென்றது. இதனுடன் Mathilde Arcel, Best Actress-க்கான Volpi Cup-ஐ பெற்றார். இதனால் Woman Unknown ஒரே festival edition-ல் Golden Lion மற்றும் Best Actress விருதுகளைப் பெற்ற குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது.
May el-Toukhy மற்றும் Denmark May el-Toukhy Danish-Egyptian filmmaker. அவரது முக்கியமான முந்தைய படங்களில் En Soap (2006), The Long Story (2015) மற்றும் Dronningen (Queen of Hearts, 2019) ஆகியவை இடம்பெறுகின்றன. Dronningen, 2020 Academy Awards-க்கான Denmark-ன் official International Feature submission ஆக இருந்தது. ஆனால் அது final Oscar nomination பெறவில்லை. Woman Unknown மூலம் May el-Toukhy இரண்டாவது முறையாக Denmark-ன் Oscar submission-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Venice Golden Lion – ஒரு வரலாற்று சாதனை Woman Unknown-ன் Golden Lion வெற்றி Denmark-க்கு முக்கியமான Venice சாதனையாகும். May el-Toukhy, Golden Lion வென்ற முதல் Danish பெண் இயக்குநராக வரலாறு படைத்தார். மேலும், 71 ஆண்டுகளுக்குப் பிறகு Venice main competition-ல் Denmark-க்கு கிடைத்த முதல் Golden Lion வெற்றியாகவும் இது குறிப்பிடப்படுகிறது.
Denmark – Oscar History Woman Unknown, Denmark-ன் 2027 Oscars-க்கான official submission. Denmark இதுவரை: 16 nominations 4 wins Denmark-ன் Oscar வெற்றிகள்: Babette’s Feast – Gabriel Axel Pelle the Conqueror – Bille August In a Better World – Susanne Bier Another Round – Thomas Vinterberg Another Round, 2021 ceremony-ல் Denmark-க்கு நான்காவது International Feature Oscar வெற்றியைப் பெற்றுத்தந்தது. Denmark தொடர்ந்து International Feature category-ல் குறிப்பிடத்தக்க சாதனையை கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. Woman Unknown மற்றும் Oscars 2027 இந்தப் படத்தின் Oscar journey-ல் மிகவும் முக்கியமான விஷயம் அதன் Venice Golden Lion வெற்றி. 99th Academy Awards-க்கான புதிய விதிமுறைகளின்படி, Venice Film Festival-ல் Golden Lion for Best Film வெல்லும் non-English-language film, ஒரு நாட்டின் official submission இல்லாமலேயே International Feature Film category-க்கு தகுதி பெறுகிறது.
அதனால் Woman Unknown, Denmark தனது official submission ஆக அறிவிப்பதற்கு முன்பே festival qualification route மூலம் 2027 Oscars consideration-க்கு தகுதி பெற்றிருந்தது. இப்போது Denmark அதே படத்தையே தனது official national submission ஆகவும் தேர்வு செய்துள்ளது. இதன் காரணமாக Denmark-க்கு இருந்த ஒரு முக்கியமான புதிய வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது: Golden Lion மூலம் ஏற்கனவே தகுதி பெற்ற Woman Unknown-க்கு பதிலாக மற்றொரு Danish film official submission ஆகத் தேர்வு செய்யப்பட்டிருந்தால், Denmark-ன் இரண்டு films International Feature Film race-ல் இருக்க முடிந்திருக்கும். இந்த ஆண்டு இதே நிலை Romania-விலும் காணப்படுகிறது. Cannes 2026-ல் Palme d’Or வென்ற Cristian Mungiu-வின் Fjord ஏற்கனவே festival route மூலம் தகுதி பெற்றிருந்த நிலையில், Romania அதே Fjord-ஐ தனது official submission ஆகவும் தேர்வு செய்துள்ளது.
Academy விதிமுறை மாற்றத்தின் முக்கியத்துவம் 99th Oscars முதல் International Feature Film category-யில் இரண்டு qualification routes உள்ளன: 1. Academy-approved national selection committee மூலம் ஒரு country/region official submission தேர்வு செய்வது. 2. Berlin, Busan, Cannes, Sundance, Toronto அல்லது Venice ஆகிய ஆறு designated festivals-ல் Academy குறிப்பிட்ட qualifying award-ஐ வெல்வது. Venice-க்கு அந்த qualifying award Golden Lion. மேலும் இந்த ஆண்டு முதல் International Feature Film Oscar ஒரு country-க்கு அல்ல, film-க்கு வழங்கப்படும். Final nominee ஆக film-தான் credit செய்யப்படும்; வெற்றி பெற்றால் director, film-ன் creative team சார்பில் Oscar-ஐ ஏற்றுக்கொள்வார். இந்த புதிய விதிமுறை காரணமாக Woman Unknown போன்ற films, national submission இல்லாமலேயே Oscar race-ல் தொடர முடியும் என்பது 99th Oscars-ன் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாகும்.
இந்தியாவிலும் இதன் தாக்கம் ஏற்கனவே தெரிகிறது. India-வின் official submission Santosh Davakhar இயக்கிய Gondhal. அதே நேரத்தில், Theja Rio இயக்கிய Nagaland film Angh, Toronto International Film Festival-ன் Platform Award வென்றதால் தனியாக Oscars 2027 International Feature Film race-க்கு qualify ஆகியுள்ளது. இதனால் 2027 Oscars International Feature race-ல் India-க்கு தற்போது இரண்டு films உள்ளன.
#Oscars2027 #99thAcademyAwards #WomanUnknown #KvindeUkendt #MayElToukhy #Denmark #DanishCinema #InternationalFeatureFilm #WorldCinema #VeniceFilmFestival #Venezia83 #BiennaleCinema2026 #GoldenLion #VolpiCup #MoviesMuseum

Post a Comment