As the Gods Will (2014,Japan) - Film Intro By Tamil | Squid Game பிரியர்களா உங்களுக்குத்தான் இந்தப்படம் | World Movies Museum

ஸ்குவிட் கேம் பிரியர்களா நீங்கள் ? அப்படியென்றால் 2014 ஆம் ஆண்டு வந்த இந்த ஜப்பான் நாட்டு திரைப்படத்தை தவறவிட்டு விடாதீர்கள் . குறிப்பாக Takashi Miike ரசிகர்கள் என்றால் உங்களுக்கான படமே . இளகிய மனம் மென்சோக படங்கள் பார்ப்போர் அப்படியே விலகிக்கொள்ளம் உங்களுக்கான படமில்லை . பள்ளிக்காலங்களில் எதோ 60 , 70 வயது வரை வாழ்ந்துவிட்டோம் வாழ்வே போர் அடிக்கிறது , இந்த சுவாரஸ்யமில்லாத வாழ்க்கை பிடிக்கவில்லை என தனிமை விரும்பிகள் சிலரை எப்படியும் பாத்திருப்போம் அதுபோல ஒருவர் தான் கதையின் நாகயகன் . 








அந்த நாயகனின் புலம்பல் அடுத்த சில மணி நேரத்தில் விபரீதமான சம்பவங்களை உருவாக்கி விடுகிறது . நாட்டில் ஒரே பரபரப்பு, வானத்தில்  சதுரமாக ஒன்று அந்தரத்தில் பறக்கிறது . நாயகனின் சுவாரஸ்யமில்லாத இந்த பள்ளி பருவ நாட்கள் ரத்தக் களரியாக உயிர் தப்பிக்கும் போராட்டமாக மாறி விடுகிறது . 


சிறுவயதில் நாம் விளையாடிய சில விளையாட்டுகளை மீண்டும் விளையாட போகிறோம் . 1, 2, 3 Stop அவுட்டே என ஒரு ஆட்டத்தை ஆடி இருப்போம் . இங்கே அப்படிதான் Dharumasanga Doll முதலாக தொடங்குகிறது . நீங்கள் ஒரு அடி நகர்ந்தாலோ அசைந்தாலோ உங்கள் தலை வெடித்து  ரத்தம் தெறிக்க இறந்துவிடுவீர்கள் .   அது சிறு சிறு குண்டுகளாக விழும் . இதில் நீங்கள் தப்பித்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் .  இதிலிருந்து நீங்கள் மீண்டா அடுத்த கேம் . இந்த சம்பவம் பல சூழ்நிலைகளில் வரும் , நான் பார்த்த ஒன்றை சொல்லுகிறேன் . 


கிராமங்களில் ஏன் இன்னும்  சில நகரங்களில் கூட  பங்காளி சண்டை வரும் . அதாவது பங்காளிகள் எல்லாம் சேர்ந்து ஒரு கோயிலை கட்டி இருப்பார்கள். அதற்க்கு பூசை கொடுக்க  பேச்சு வார்த்தை நடத்த சிறு மீட்டிங் ஐ ஏற்பாடு செய்வார்கள் . அதில் பெரிய தலை பங்காளியிடம் கருத்து கேட்டு சில முடிவுகளை எடுப்பார்கள் . அப்படி பேச்சுவாக்கில் யாருப்பா பூனைக்கு மணி கட்டுவது என பேச்சு எழும் .   பூனைக்கு மணி கட்டுவது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? என்ன என நாம் நினைத்திருப்போம் . உண்மையிலேயே எனக்கு பூனைக்கு மணி கட்டும் கதை பற்றி முன்பு தெரியவில்லை . பிறகுதான் தெரிந்துகொண்டேன் . அது ஒரு சுவாரசியமான கதை , அதை நீங்கள் கூகிள் செய்தாலே தெரிந்துகொள்ளலாம் .  சமீபத்தில் நான் சோமாலியா நாட்டு படமொன்றை  The Gravedigger's Wife 2021 பார்த்தேன் அதில் கூட அதை பற்றி வரும் , ஆக பூனைக்கு மணி கட்டும் கதை ஒரு உலக கதை ;)  எல்லோருக்குமான கதை , அதை இந்த ஜப்பான் இயக்குனர் எப்படி கையாண்டு இருக்கிறார் என்பதை பாருங்கள் . ஆமாம் பூனைக்கு ஒரு மணியை கட்டுவது  பெரிய விஷயம் தான் இப்போது நீங்கள் ஒரு எலி உங்களை வேட்டையாட ராட்சச பூனை ஒன்று சுத்திகொண்டு இருக்கிறது நீங்கள் அந்த பூனையின் கழுத்தில் மணியை கட்ட வேண்டும் . கட்டியவர்கள் உயிர் பிழைக்கலாம் . மற்றவர்கள் கதை அவ்வளவுதான் . 


அடுத்ததாக மரக்கட்டை பொம்மைகள் நான்கு உங்களை சுத்தி பாடிக்கொண்டே வரும் . பாட்டை நிறுத்தும் பொழுது உங்களுக்கு பின்னால் யார் என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும் சரியாக சொன்னால் நலம் . ஒருவேளை தவறானால் ???? இப்படி ஒன்றன் பின் ஒன்றாக பல சம்பவங்களை தாண்டி இறுதியில் கடவுளின் குழந்தைகளாக யார் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் . அதீத வன்முறை காட்சிகள் ஒரு பாண்டஸி உலகம் . பாட்டு என நகரும் மேலே சொன்னதை போல தான் உங்களுக்கு Squid Game சீரீஸ் பிடிக்கும் என்றால் நிச்சயம் பார்த்தே தீர வேண்டிய ஒன்று தான் இந்த படம் . பெருபாலான படங்கள் ஹார்ட் டிஸ்க் ல் நிரம்பி கிடக்க ஏற்கனவே பார்த்த படங்களில் சிலவற்றை நீக்கி கொண்டு இருந்தேன் . ஹாரர் Must Watch என்ற Folder ரில் வைத்திருந்தேன் . சோ அப்படி எதிர்பார்க்காமல் பார்த்த படம்தான் இந்த கடவுளின் விருப்பம் . இதே போல மற்றும் ஒரு ஜப்பான் நாட்டு Alice in Borderland 2020 ‧ Thriller ‧ 1 season சீரீஸ் ஒன்றை Netflix பார்க்க வைத்துள்ளேன் பார்க்கணும் .  



இந்தப்படம் எனக்கு பிடித்திருந்தது . தற்போது இந்தியாவில் எந்த OTT யிலும் இந்தப்படம் இல்லை ஆகையால் இணையத்தில் தேடி பிடித்து பார்த்திவிடுங்கள் . ஒருவேளை உங்களுக்கு தேடியும் கிடைக்காத பட்சத்தில் இந்த பதிவை ஷேர் செய்துவிட்டு ஒரு மெஸேஜ் ஐ எனக்கு டெலிக்ராமில் அனுப்புங்கள் உங்களுக்கு படத்தை அனுப்பி வைக்கிறேன் . 

நன்றி 

As the Gods Will 2014 ‘神さまの言うとおり’ Directed by Takashi Miike Director : Takashi Miike  Country : Japan Language : Japanese  Running Time : 117 Mins

Join Our Facebook Group :  Movies Museum Facebook Group/link/button 

Like And Follow Our Fb Page : Movies Museum Facebook Page/link/button

To get Regular Update In Instagram : Movies Museum Instagram/link/button

Twitter : Movies Museum Twitter/link/button

Letterboxd Profile : Movies Museum Letterboxd/link/button


எங்கே கிடைக்கும் இந்தப்படம் . Where to watch?




Post a Comment

Previous Post Next Post