அதி தீவிரமான த்ரில்லர் பாணியில் வரவேண்டிய எத்தனையோ படங்களை தற்போது நகைச்சுவை கலந்து டார்க் காமெடி வகை படங்கள் என உலக அளவில் பல்வேறு மொழிகளில் வந்துகொண்டு இருக்கின்றன . உண்மையில் இதற்கு தனிப்பட்ட Fan Follow வும் பிரத்தியேகமான திரைப்பட விழாக்களும் உண்டு . அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்து சினிமா பிரியர்களின் கவனத்தை ஈர்த்த கசக்கஸ்தான் நாட்டு படமொன்று நேற்று பார்க்க முடிந்தது.
இதற்கு முன்பு இந்த நாட்டில் இருந்து வந்த Yellow Cat என்ற படமும் எனக்கு பிடித்திருந்தது . இந்த படத்தினை ரத்தம் தெறிக்க சுவாரசியமான கருப்பு நகைச்சுவை படமென்று தமிழில் அறிமுகத்தலாம் ;) . முதலில் ட்ரைலரை பாருங்கள் . அது பிடித்தால் மட்டுமே முழு படத்தையும் பார்க்கவும் .
தொடக்கத்திலே மனைவியின் நச்சரிப்பு சண்டை மற்றும் பல வசவுகளை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஒருவன் தன் நண்பர்களோடு கூட்டு சேர்ந்து பொழுதை கழிக்க மீன் பிடி பயணம் ஒன்றை ஏற்பாடு செய்கிறான். இதில் குறிப்பிட தகுந்த விஷயம் யாருக்கும் மீன் பிடிக்க தெரியாது. பிறகு ஒரு லோக்கல் டான் கும்பல் ஒரு காரணத்திற்காக அவர்களும் அதே பகுதியில் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த பயணத்தில் எதிர்பாராத சம்பங்கள் தொடர்ந்து நடக்க முடிவில் என்ன ஆனது என்பதே இந்த படம் .
சிரித்து சிரித்து வயிறெல்லாம் புண்ணாகி விட்டது என பொய் சொல்ல மாட்டேன் , ஆனால் வந்துகொண்டிருக்கும் காமெடி படங்களுக்கு இது எவ்வளவோ தேறும் , நேரம் அமையும் பட்சத்தில் ஜாலியாக நண்பர்களோடு சேர்ந்து ஒருமுறை பார்க்கலாம் . கர்பமாக இருக்கும் மனைவியை வீட்டில் விட்டுட்டு நண்பர்களளோடு ஜாலியாக மீன் பிடிக்க செல்லும் மூன்று நபர்கள் , மற்றுமொரு ரவுடி கும்பலாக நால்வர் . கூடுதலாக ஒற்றைக்கண் கொலைகாரன் ஒருவன் . ஜான் விக் பாணியில் சொன்னால் நாயை கொன்றதற்காக இந்த ஒற்றைக்கண் கொலைகாரனிடம் மாட்டிதவிக்கும் கதை , என சிறிய குழுவை வைத்துக்கொண்டு ஒரு படத்தை உலக திரைப்படவிழா வரை எடுத்து செல்கிறார்கள் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது .
இரண்டு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாட்டில் இருந்து இதுபோல படங்கள் எல்லாம் வருவது பெரிய விசியம் தான் . ஆங்காங்கே ஒலிக்கும் ஹிப் ஹாப் பாடல்கள் அருமை , இடையில் தமிழில் எங்கோ கேட்ட ஒரு இசை ஒன்று ஒலித்தது பிறகுதான் தெரிந்தது அது ஹிந்தியில் வந்த பாட்டு , Ae Oh Aa Zara Mudke , தமிழில் சூப்பர் டீலக்ஸ் ல் கூட வரும் இதே இசை .
எங்கே காணலாம் இந்தப்படத்தை ?
சரி , இந்த திரைப்படம் இந்தியாவில் எந்த OTT யிலும் தற்போது இல்லை , வருமா என்றால் தெரியாது . நான் TUBI US ல் இந்த படத்தினை பார்த்தேன் , நீங்களும் அதில் காணலாம் . மற்றபடி இணையத்திலும் தேடி Streamings ல் பெறலாம் .
நன்றி
Post a Comment