மிக சாதரணமான பழிவாங்கும் வன்முறை திரைப்படம்தான் இது , 20 வருடத்திற்கு முன்பு தனது பெற்றோர்களை கொன்றவன் சிறையில் இருந்து வெளியே வருகிறான் என்ற தகவலை தெரிந்த நாயகன் அவனை பழிவாங்க நினைக்கிறான் . இதன் பின்புலம் என்ன ? என்ன ஆனது என்பதுதான் இந்தப்படம் .
கிடைக்கும் இடங்களில் தங்குவது , குப்பை தொட்டி உணவுகளை தின்பது , துருப்பிடித்த பழைய காரில் தூங்குவது என நாயகன் அவனிடம் இழப்பதற்கு வேறொன்றும் இல்லை என்ற நிலைமையில் இருக்கிறார் என நமக்கு காண்பிக்க படுகிறார் . ஆரம்பத்தில் ஆடம்பர வீட்டில் பாத் டப்பில் குளித்துக்கொண்டிருக்கும் நாயகன் யாரோ வருகின்ற சத்தம் கேட்டதும் அலறி அடித்துக்கொண்டு ஓடும் போதே தெரிந்துவிடுகிறது .
இதுபோன்ற கதைகள் ஒன்றும் நமக்கு புதிதல்ல ஆனால் , ஏற்கனவே பல வன்முறை , பழிவாங்கல் சம்மந்தப்பட்ட படங்களை பார்த்தோருக்கு இது ஒரு சாதாரண படம்தான் . சாமானியன் ஒருவனின் 20 வருட பழிவாங்கும் வெறி அதனை திரையில் கொண்டு வந்த விதம் உங்களில் சிலருக்கு பிடிக்கலாம் . சிலருக்கு பிடிக்காமல் போகலாம் . இயக்குனரின் Green Room என்ற படத்தை பார்த்த பிறகு இவரின் மற்ற படங்களை பார்த்தே தீர வேண்டும் என பல நாளுக்கு பிறகு நான் பார்த்த திரைப்படமிது .என்னளவில் எனக்கு இந்தப்படம் பிடித்திருந்தது , உடனே அப்போ நீங்கள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவரா ? இதுபோன்ற சம்பவங்களுக்கு ஆதரவு தருபவரா என கேற்காதீர்கள் . அந்தந்த சம்பவங்களை பொறுத்து அவனவன் நிலை மாறும் .
நமக்குள் இருக்கும் வெறி என்றாவது ஒருநாள் நிச்சயம் அது வெடிக்கும் . பழிவாங்கல் கதை தான் அதே ரத்தத்திற்கு ரத்தம் கான்செப்ட் தான் .. . சாணிக்காயிதம் படத்தில் சரியான நியாயம் கிடைக்காத காரணத்தினால் தனக்குள் அடங்காது இருக்கும் வெறி பழிவாங்க வேண்டும் என கிளம்ப என்ன ஆனது என்பதுதான் அந்தப்படம் . இதில் நியாயம் நீதி எல்லாம் பலர் கண்ணனுக்கு தெரியாது . பாதிக்கப்பட்டவனுக்கே வலியின் வேதனை முழுமையாக புரியும் . சும்மா கத்தியையும் சுத்தியையும் துப்பாக்கியும் வைத்து ரத்தத்தை பீய்ச்சு அடித்துவிட்டு துவம்சம் செய்வதெல்லாம் பல சினிமாக்களில் சாத்தியம் தான் . . அதே போல தான் இந்தப்படமும் .
பின்கதை பிளாஷ்பேக் போட்டு அறுத்து தள்ளாமல் , இதுதான் பிரச்னை என சாதாரண மாக அந்த காட்சியை கையாண்டு இருப்பார் இயக்குனர் . பாதிக்கப்பட்டவனுக்கு உரிய நீதி கிடைத்தாகவேண்டும் . அவன் இழப்பிற்கு அவன் செய்தது சரியே என்ற எண்ணம் பார்வையாளனுக்கு தோன்ற செய்வதில் தான் இயக்குனரின் திறமை இருக்கிறது வெகு சில படங்களே அப்படி தோன்ற செய்யும் . இது அப்படிப்பட்டவையாக இருக்கலாம் , அமேசான் பிரைமில் தற்போது காண கிடைக்கிறது .
நன்றி .
Post a Comment