பழங்குடி இனத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் காணாமல் போகிறார் , புகார் கொடுக்க சென்றால் இவருடைய பிறந்த சான்றிதழ் இருக்கிறதா ? இல்லை என்றவுடன் கம்பளைண்ட் கூட எடுக்காமல் தேடுகிறோம் என சொல்லிவிட்டு தந்தையை விரட்டி விடுகிறார்கள் . பிறகு அவருடைய பெயர் தான் பிரச்னை , இந்த பெயருக்கும் நக்சல் கூட்டத்திற்கு தொடர்பிருப்பதாக சொல்கிறார்கள் . 30 வயதான கோசாவிற்கு பதிலாக அதே 17 வயது சிறுவனான கோசாவை பிரச்சனைக்குள் சிக்க வைக்கிறார்கள் .
நாற்பது நாள்களில் 7 சிறுவர்கள் இதுபோல காணவில்லை என புகார்கள் உள்ளன . ஆனால் எதற்கும் சரியான தகவல்கள் இல்லை . கோசா காப்பாற்ற எடுக்கப்படும் முயற்சிகள் இதற்கான நீதிகள், அவருடைய குடும்பம் , பழங்குடி மக்களுக்காக வாதாடும் ஒரு பெண் வக்கீல் , செய்தியாளர் ஒருவர் எல்லாம் உண்மைக்கு நிகராக படமாக்கப்பட்டு இருக்கிறார்கள் . நேரமிருக்கும் பட்சத்தில் அவசியம் பார்க்கவும் . படத்தை பார்த்த பிறகு இந்த திரைப்படத்தின் Team உடனான 25 th IFFK . Q / A பார்க்கவும்
அன்றாட கூலியின் மூலமும் கிடைக்கின்ற வேலைகளை செய்வதன் மூலமும் வாழ்க்கையை நடத்தும் விளிம்பு நிலை மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை பற்றி சமீபத்தில் ஜெய் பீம் திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள் . அதுபோல இந்த மக்களெல்லாம் ஒவ்வ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் உயிரை கையில் பிடித்துகொன்டு வாழ வேண்டும் எதாவது ஒரு பொய் கேஸை போட்டு அவர்களை உள்ளே தள்ளிவிடுவார்களோ என .
இயக்குனருக்கு முதல் படமாம் . வலுவான காட்சிகளின் மூலம் திரைப்பட மெதுவாக நகர , நீதிமன்றத்தில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் யதார்த்தமாக முக்கியமாக நம்பும் படியாக இருந்தது . மராத்தியில் கோர்ட் திரைப்படத்திற்கு பிறகு இந்த நீதிமன்ற காட்சிகள் பிடித்தன . இந்த திரைப்படம் தற்போது இந்தியாவில் எந்த OTT யிலும் இல்லை . நீங்கள் வேறு பக்கம் தேடி பெறலாம் .
நன்றி
Post a Comment