உத்திரகாண்டின் சுவிட்சர்லாந்த் என்றழைக்கப்படும் முன்சாரி என்ற அழகான மலை கிராமத்தில் தொடங்குகிறது திரைப்படம் . வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் மிகவும் பசுமை நிறைந்த அழகான காட்சிகள் தரும் இந்த மலைக்கிராமம். இங்கிருந்தே இமயமலையை பார்த்து ரசிக்கலாம் . இதுபோன்ற காட்சிகளை பார்க்கும் பொழுது நாம் சுற்றுலா சென்றுவந்த நினைவுகள் வந்து செல்லும் , இது சுற்றுலா தளம் என்பதால் அங்கே மக்கள் அவ்வப்போது வந்து செல்வார்கள் . திரைப்படத்திற்கு வருவோம் .
ஆகாயத்தில் இருந்து அருவி கொட்டுவது போல காட்சியில் துவங்கிகிறது ஆரம்பம் . ஒரு பெண் வேகமாக ஓடி வருகிறாள் அவளை ஏமாற்றி விட்டு மற்றொரு வாலிபன் முந்திச்சென்று, வந்துள்ள பயணியிடம் பேசிக்கொண்டு இருக்கிறான் . அப்படி இப்படி என அவர்கள் தங்குவதற்கான பேரம் பேச துடங்குகிறார்கள் . அங்கு வந்துள்ள பயணிகளிடம் நீங்கள் தங்குவதற்கும் உண்ண உணவிற்கும் எங்கள் இடத்தை தருகிறோம் , குறைந்த தொகை என பேசிக்கொண்டு இருக்கிறாள் இந்த பெண் . போட்டிக்கு ஹோட்டல் வாடகைக்கு விடுபவரும் பேசிக்கொண்டு இருக்கிறார் . இறுதியில் இந்தியன் ஸ்டைல் டாய்லட் வேண்டாம் என்பதால் அவர்கள் ஹோட்டலை ஒதுக்கி இந்த மலை கிராமத்தில் அந்த பெண் வீட்டில் தங்க சம்மதிக்கிறார் . அதுவும் 500 ரூபாய்க்காக ..
கழுதை போல ஓடி ஓடி உழைக்கும் அந்த பெண்ணிற்கு நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருக்கும் சிறுவனும், பள்ளிக்கு செல்லும் சிறுமியும் உருப்படியில்லாத கணவன் மற்றும் கணவனின் சகோதரி என வீட்டில் இதனை பேர் உண்டு . இப்படி தனது கடின உழைப்பை செலுத்தி தனது மகனுக்கான பிரச்னையை சரி செய்ய வேண்டும் , பிறகு இந்த மலை கிராமத்திற்கு ஒரு சாலையை அமைத்திட வேண்டும் , அப்படி அமைந்தால் இங்கே எளிதில் எங்கும் சென்று வரலாம் , மகனை மருத்துவமனைக்கு உடனே அளித்து செல்லலாம் , இவ்வளவு நேரம் மெனக்கெட்டு நடந்துவரும் நேரத்தில் வேறு வேலைகள் செய்யலாம் என சிந்திக்கிறாள் . கூடுதலாக இங்கே நிறைய பயணிகளும் வந்து தங்குவார்கள் என சாலை விஷமாகவும் கொஞ்சம் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார் .
இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்தும் மகனுக்காக வாரம் இரண்டு மூன்று முறை மருத்துவ பரிசோதனை செய்தும் கொண்டிருக்கிறார் , கணவனோ இது நமது குடும்ப தெய்வம் நம் மீது கோபமாக இருக்கிறது அதனால் தான் என்னுடைய சகோதரியின் கணவன் இறந்தார் , மகனுக்கு கால் பிரச்னை இதற்கெல்லாம் நாம் பரிகாரம் செய்தே ஆகணும் என சாமியாரை நாடுகிறார் , அவரோ மத சடங்கு சம்பரிதாயமெல்லாம் பண்ணினால் உன் மகன் சரியாவான் என உத்தரவிடுகிறார் , இந்த சடங்கை செய்ய மனைவிக்கு விருப்பமில்லை அவள் சேமித்து வைத்த பணத்தை தர மறுக்கிறாள் . இந்தமுயற்சி என்ன ஆனது? சாலை அமைத்தார்களா ? மகனுக்கு சரியானதா என்பதுதான் இந்த திரைப்படம் .
உண்மையை சொல்லவேண்டும் என்றால் இது போல கதைகள் நிறைய கேள்விப்பட்டு இருப்போம் ரொம்ப போட்டு பினத்தாமல் 90 நிமிசத்திற்குள் படத்தை முடித்து நன்றாக இருந்தது , முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் நன்றாக நடித்தார்கள் .குடும்ப கதை போல என பாட்டெல்லாம் பாடவில்லை . குறிப்பாக கேமரா காட்சிகள் எல்லாம் அழகாக இருந்தது , சுயாதீன திரைப்பட விரும்பிகள் , மாற்று சினிமா விரும்பிகள் நேரமிருக்கும் பட்சத்தில் இந்த Sundance ல் திரையிடப்பட்ட இந்திய சினிமாவை நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம் .
இடையில் ஆங்காங்கே வானொலியில் ஒலிக்கும் செய்திகள் வந்தன , அதுதான் கொஞ்சம் ஹைலைட் ஒருலசிலவற்றை சொல்றேன் கேளுங்க , இந்தியா விரைவில் வல்லரசாகும் , முதலமைச்சர் நம் பகுதியை பார்வையிட வருகிறார் நிச்சயம் சாலை அமைக்கப்படும் . நாட்டில் எந்த கார்னரும் சாலை , எங்கும் மின்சாரம் இந்தியா ஒரு முன்னுதாரணம் , விண்வெளியில் வரலாற்று சாதனை செய்த இந்தியா என ஆங்காங்கே வானொலி செய்திகள் .
இயக்குனரின் முதல் முழு நீள திரைப்படமான இந்த படம் 2021 ல் Sundance Film Festival லில் World Premiere ஆக திரையிடப்பட்டது , இதற்கு முன்பு ஒரு குறும்படம் ஒன்றை இயக்கி இருக்கிறார் . ஏற்கனவே பார்த்த சில சினிமா பிரியர்கள் வெளிநாட்டவர்கள் இந்த மதம் பரிகாரம் பற்றிய படத்தை பார்ப்பது இதுவே முதல் முறை எனக்கு மிகவும் பிடித்தது என Letterboxd ல் ஐந்துக்கு நான்கு மூன்று என ரேட்டிங் கொடுத்து படத்தின் மீது மற்றவர்களுக்கு ஆர்வத்தை தூண்டி விட்டார்கள் , நம்மூர்களில் குடும்ப கதைகள் எத்தனை எத்தனையோ , அதுபோக சாமியார்களை பற்றி எடுத்து தள்ளலாம் அவ்வளவு கதை இருக்கிறது , இருந்தாலும் இதில் பெஸ்டிவலுக்கு அனுப்பும் அளவிற்கு கொஞ்சம் திரைமொழி என்பது அவசியம், இதில் கொஞ்சம் இருந்தது , வேண்டுவோர் தேடிப்பிடித்து பார்க்கவும் , OTT களில் தற்போது இல்லை , நான் எங்கு பார்த்தேன் என்பதை கேட்பதை தவிர்த்து தேடினால் கிடைக்கும் அடுத்த பதிவில் சந்திக்கலாம் .
Post a Comment