உக்ரேனியன் திரைப்படங்களில் மீது தனிப்பட்ட ஆர்வத்தையே தூண்டிவிட்ட சினிமா என்று கூட சொல்லலாம். பெங்களூர் திரைப்படவிழாவில் பார்த்த 37 படங்களில் என்னுடைய டாப் 10 இடத்தில் இந்த படத்தினையும் வைத்துவிட்டேன். இயக்குனருடய மற்ற படங்களை தேடினால் இதுவே அவருக்கு முதல் படம். இதற்கு முன்பு ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். அதன் இணைப்பை இறுதியில் தந்திருகிறேன் .
Must Watch This
Trailer Trailer : https://youtu.be/RPyCUrLqA4M
Watched At Bangalore International Film Festival 2020
உக்ரேனிய மக்கள் அவர்கள் கிராமங்கள் , நகரங்கள், நகைச்சுவை, உரையாடல்கள் , விலங்குகள் இன்னும் பல என பலவற்றை இதில் பார்க்கலாம். குறிப்பாக தாய் மற்றும் மகன் இருவரின் நடிப்பும் அபாரமாக இருந்தது. அகன்ற திரையில் அட்டகாசமான ஒளிப்பதிவும் நல்ல சத்தத்தில் பார்த்ததால் படம் ரொம்ப பிடித்துப்போனது. வாழ்க்கையில் இதுவரை மகிழ்ச்சியின் காற்றை சுவாசித்ததே இல்லை போன்ற எண்ணம் கொண்ட பல மனிதர்கள் இருக்கிறார்கள் . அதில் இந்த ஹீரோவும் ஒருவர். 25 வயது நிரம்பிய நல்ல உயரமான மனிதர் வாடிம்.
இவர் ஒரு இசையமைப்பாளர் . ஒலிகோப்புகளை சேகரிப்பவர் . ஆச்சர்யமான சத்தங்களை பதிவு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுபவர். தந்தை இல்லாமல் தன் தாயுடன் வசித்து வருகிறார் . தாயார் வெள்ளந்தியானவர் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடகள் மிக முக்கியமானவை மற்றும் சிறப்பானவை. அதிலும் அன்றாட வாழ்க்கை , உடலுறுவு , காதல் , இன்னும் பல நெருக்கமான பல உரையாடல்கள் எல்லாம் ஆச்சர்யமாக இருந்தது. வேடிக்கையான சம்பவங்கள் , நகைச்சுவை என எல்லாமே படம் முடிந்ததும் நினைவில் சுற்றிக்கொண்டு இருந்தன. முதல் வரியில் சொன்னது போல ,
பல பின்னடைவுகளை சந்தித்த வாடிம் எப்படியாவது , இந்த ஊரை விட்டு கன்னடாவிற்கு செல்ல வேண்டும் என முயற்ச்சித்து கொண்டு இருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு கிடைத்த வேலைதான் Transcarpathian பகுதியில் இருக்கும் விலங்குகளின் சத்தத்தை பதிவு செய்வது. அதில் குறிப்பாக மேற்கு உக்ரைனின் உள்ள ஒரு வகை ஈமு போன்ற பறவையின் சத்தத்தையும் அதே பறவையின் தனித்துவமான மற்றுமொரு சத்தத்தை பதிவு செய்து கொடுத்தால் டபுள் போனஸ் ஒன்றை பெறுவார். அதற்காக பயணம் மேற்கொள்கிறார். தாயாரும் உடன் செல்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
உலக சினிமா வழக்கில் சில வார்த்தைகளை சொல்லுவார்கள். புதிய அலை சினிமா , நவீன சினிமா , புரட்சிகர சினிமா அப்டியான படம் இது இல்லை . இது ஒரு சாதாரண படமே . எனக்கு பிடித்திருந்தது . ஆஹா ஓஹோ தலை சிறந்த சினிமாவோ என்று எண்ணாமல் ஒருமுறை பார்க்கலாம். என் டாப் 10 ல் இந்த படத்தினை குறிப்பிட்டு சொல்லலாம். எனக்கு பிடித்திருந்தது . உங்களுக்கு கிடைத்தால் தேடிப் பிடித்து பாருங்கள்.
இந்த படத்தை பார்த்த பிறகு 2019 ல் வந்த மற்ற உக்ரேனியன் சினிமாக்களை பார்த்தேன் Atlantis (2019) , Homeward (2019) நன்றாக தான் இருக்கிறது. மேலும் U311 Cherkasy (2019) , Videnna (2020) பார்க்க இருக்கிறேன்.
Director short Film Link https://youtu.be/xJB4C1Rg2Tk
/ Ukrainian, English / Antonio Lukich
Post a Comment