Nefta Football Club (2018,France) -Short Film Intro By Tamil | நான் அல்ஜீரியா பார்டாரில் தான் சிறுநீர் கழிப்பேன் | World Movies Museum

இன்று மஜீத் மஜீதி இயக்கத்தில் Sun Children (2020) திரைப்படம் பார்த்தேன் . திரைப்படத்தின் முடிவு  எதோ ஒன்று மண்டைக்குள் உருட்டிக்கொண்டே இருக்கிறது .   வெளிவர ஒரு மாறுதலுக்காக ஏற்கனவே பார்த்த  என்னை வெகுவாக கவர்ந்த ஒரு குறும்படத்தை மீண்டும் பார்க்கிறேன் .  இந்த குறும்படத்திற்கும் Sun Children க்கும் ஒரு ஒற்றுமை உண்டு . அது இரண்டையும்  பார்த்தவர்களால்  உணர  முடியும் ❤ இரண்டுக்குமான ஒற்றுமை என்ன என்பதனை சொல்லிவிட்டால் அதிலுள்ள சுவாரஸ்யமே போய்விடும். என்பதனால் இரண்டையும் தேடிப் பிடித்து பாருங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் வீணாக்காது. 

 ******* Must Watch Short Film Lovers ******* 

Nefta Football Club


Trailer : https://vimeo.com/318188864 

Nominated for 1 Oscar. Another 24 wins & 10 nominations. 


Tunisia & Algeria இரண்டுக்கும் நடுவில் எல்லையில் தொடங்குகிறது கதை . இந்த இரு  நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்னை  உண்டு . முக்கிய கதாபாத்திரங்களான  அண்ணன் மற்றும்  தம்பி இருவரும் food ball விளையாடி முடித்ததும் வீட்டுக்கு சென்றுகொண்டு இருக்கிறார்கள். என்னோட ஆள் தான் பெஸ்ட் இல்லை மெஸ்ஸி தான் பெஸ்ட் ன்னு பேசிக்கொண்டே போகிறார்கள். தம்பிக்கு சிறுநீர்  அர்ஜெண்ட் ஆக வருகிறது . 

அண்ணனோ அப்போ மெஸ்ஸி பெஸ்ட் ன்னு சொல்லு நான் வண்டியை நிப்பாட்டுறேன் இல்லை என்றால் நிறுத்த மாட்டேன் என்கிறான். இதெல்லாம் அநியாயம் நீ என்னை பிளாக்மெயில் பண்ணுறாய் என சொல்கிறான் தம்பி . பிறகு ஒரு ஓரமாக நிப்பாட்டி இறக்கி விடுறான். அவனோ நான் அல்ஜீரியா பார்டாரில் தான் சிறுநீர் கழிப்பேன் என சொல்கிறான். நீ அங்கு சென்றால் நான் அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என அண்ணன்  கடுமையாக சொல்கிறான்  . 

பிறகு ஒருவழியா சிறுநீர் கழிக்கிறான் . அங்கிருந்து தான் ஒரு திருப்பம். நீங்கள் இதுவரை யூகித்து இருக்காத திருப்பம். அங்கிருந்து தொடங்கி இறுதி ஒருப்படி மேல் செய்து இருக்கிறார்கள். Unexpected Ending .. இயக்குனரின் குழந்தை பருவத்தை நினைவு கூறும் வகையில் ஒரு கற்பனை கதையை இயக்கி இருப்பாத சொல்கிறார். 

What a Creativity 👌👌 #Arabic #ShortFilm #NeftaFoodballClub #moviesmuseum #SunChildren

Post a Comment

Previous Post Next Post