தமிழ்ல விசராணை பார்த்திருப்போம் எல்லாருமே, நல்ல படம் வெற்றிமாறன் இயக்கத்தில் லாக்கப் புத்தகத்தை தழுவி எடுக்கபட்டது பலரின் பாராட்டுகளை பெற்று இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பிவைக்க பட்டது . இந்த கொரியன் வெர்சன் விசாரணை பார்த்திருக்கிறீர்களா ? உடனே இரண்டும் ஒரே கதையா காப்பியா ன்னு வராதீங்க . கொரியாவில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் புனையப்பட்ட எழுத்தினை கொண்டு உருவான கதைதான் இது , . ஆமா உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்க பட்ட இப்படத்தின் கதை கிட்டத்தட்ட விசாரணை போலத்தான் , அதனால்தான் கொரியன் விசாரணை ன்னு சொன்னேன் .
Trailer : https://youtu.be/tYXPQraG0TY பாருங்க மிரட்டல்.
1985 ஆம் ஆண்டில், கிம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு முன்பாக சில ஆட்களால் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறார் . பிறகுதான் அரசாங்கத்தின் இரகசிய சேவை ஆட்களின் மூலம் கடத்தப்பட்டு இருக்கிறார் என தெரியவருகிறது , கடத்தப்பட்ட கிம் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு செயற்பாட்டாளர் மற்றும் ஜனநாயகத்திற்கான இளைஞர் கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் லீடர். இப்போது இரகசிய சேவையான K - CIA அவருக்குத் தெரிந்ததைக் கண்டுபிடிக்க விரும்புகிறது, எனவே அவர் தனது முழு வாழ்க்கையையும் அவர் தெரிந்த அத்தனை ரகசியத்தையும் எழுதி வைக்க வேண்டும்.
லீ என்ற காட்டு மிராண்டித்தனமான கொடுமை காரர் ஒருவர் இருக்கிறார். விசாரணையாளரும் சித்திரவதையாளருமான லீ, செய்யாத குற்றம் ஒன்றை ஒப்புக்கொள்ள வைக்க எதையும் செய்ய துணிகிறார் . விசாரணைகள் மற்றும் சித்திரவதைகளில் கடும் முரட்டுத்தனமாக இருந்தார் , இங்கே பாதிக்கப்பட்டவர்களை மரணத்திற்குத் தள்ளுவதில் தயங்கவில்லை அல்லது வருத்தப்படவில்லை.இந்த ஜனநாயக இளைஞன் கட்சியின் லீடரை செய்யாததுக்கெல்லாம் செஞ்சேன்னு சொல்லி வாக்குமூலம் எழுதி தரசொல்றது மட்டுமில்லாமல் மேற்கொண்டு இவன்கிட்ட இருந்து என்னமோ எதிர்பாக்றாங்க அது என்ன ??
ஒருசில செய்யா குற்றங்களை செய்ததாக ஒற்றுக்கொள்ள வைக்கையில் , கைதி இந்த வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார், ஏனெனில் அது உண்மையல்ல, அவருக்கு அதில் தொடர்பில்லை என்கிறார் , மேலும் அவர் தென் கொரியாவின் ஜனநாயக மயமாக்கலுக்காக போராட விரும்பினார் , எனக்கும் தவறான தகவலுக்கும் தொடர்பில்லை என்கிறார் .
ஆக முதல் சித்திரவதை முயற்சிகள் பலனளிக்காதபோது லீ - கிம் அவரது வாழ்க்கையில் கொஞ்சம் கூட யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு தொந்தரவு செய்ய ஆரம்பிக்கிறார் . மிகக் கொடூரமான நாள்கள் தொடங்குகின்றன. அடுத்தடுத்து அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாத பரிதாபகரமான நிலையில் நாயகன் இது கற்பனையான ஒன்றல்ல , ...
மூன்று நாட்கள் ஒரு இடைவெளி கூட இல்லாமல், சாப்பிடவோ தூங்கவோ அனுமதிக்காமல் கடுமையாக விசாரித்து எழுத சொல்லுகிறார்கள் . அவருக்கு சம்மந்தப்பட்ட தொடர்புகளின் பெயர்கள் மற்றும் வட கொரியாவுடன் ஒத்துழைத்த ஒரு வாக்குமூலத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் கிம் சிலவற்றை தெரியாது என்றே சொல்கிறார் மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் பல சித்திரவதைகளை அனுபவிக்கிறார் கிம் .
அப்புறம் தொடர்ந்து 22 நாள் வச்சி Torture குடுக்குறாங்க.. அதுவும் விதவிதமா கொடுமைகள் . எனக்கு தெரிஞ்சி கொரியன் படங்களில் கொடூரமான காட்சி இருக்கு ன்னு கேள்வி பட்ருக்கேன் துன்புறுத்தி துன்புறுத்தி நமக்குவாந்தி வர வெச்சுட்டாங்க .. ஏன் சொல்லுறேன்னா பின்னாடி வந்து உன்னால எனக்கு வாந்தி வந்துடுச்சி ன்னு சொல்லிவிட கூடாதுல அதான்... முடிவில்லாத வலியின் மன அழுத்தம்தான் கிம்முக்கு சிறைவாசத்தை நரகத்திற்கான பயணமாக மாற்றுகிறது. குறிப்பாக, ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு ஒரு அப்பாவி மனிதன் பலியாவது அநீதியாகும், பிறகு வலுக்கட்டாயமாக சிறையில் அடைக்கப்பட்டார்.
உண்மை சம்பவம் பார்க்க வேண்டிய படம் தான் 20 வருடத்திற்கு பிறகு நடக்கும் காட்சிகள் எல்லாம் ஆச்சரிப்பட வைக்கும் #கொரியன் விசாரணை எல்லாம் சொல்லிட்டேன் இதுக்கு மேல என்ன உங்க விருப்பம் . உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இங்கு காட்டப்பட்டுள்ள கொடுமையின் அளவு ஒரு சிலரின் கற்பனையில் உருவானவை .
திரைப்படத்தின் பெரும்பகுதி சித்திரவதைக் காட்சிகளைக் கொண்டுள்ளது, ஏராளமான சித்திரவதைக் காட்சிகள், ஒரு பொதுவான மனிதாபிமானம் உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு, காட்டப்படும் அநீதியைக் கண்டு கோபத்தில் நடுங்கச் செய்யும்.
இது பார்வையாளர்களுக்குள் அருவெறுப்பையும் அரசின் மீது கடுப்பையும் தரக்கூடும் . எல்லோருக்குமான படமில்லை இங்கே நடந்த சம்பவங்களை இதுபோல படங்களில் தொடர்பு படுத்தி மனதளவில் உங்களுக்கு தொந்தரவு தரக்கூடிய ஒரு திரைப்படம், எல்லாராலும் சமாளிக்க முடியாது என்பதால் என்னால் இதற்கு மேல் இதைப்பற்றிய எந்த ஒரு தெளிவையும் வழங்க முடியாது. வேண்டுவோர் மட்டுமே ட்ரைலர் பார்த்துவிட்டு முழு படத்தையும் பார்க்கவும் . தேடிப்பாருங்கள் படம் கிடைக்கும் . இல்லையேல் என்னிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம் . கீழுள்ள இணைப்பில்
எங்கே கிடைக்கும் இந்தப்படம் ?? Where To Watch
{getMega} $label={recent} $type={msimple}
Post a Comment