Take and Run (2021,Kyrgyzstan) - Short Film Intro By Tamil | பெண்களை கடத்தி மனைவியாக்கி கொள்ளும் சடங்கு

கிர்கிஸ்தான் நாட்டில் இருக்கும் ஒரு சம்ரிதாய கலாச்சார மரபு பற்றி ? புரியும்படி சொன்னால் கடத்தல் கல்யாண சடங்கை பற்றி தெரியுமா  ? அப்போது குதிரையில் தற்போதய நவீன உலகில் கார்களில் ///  | Oscar Nominated Short Live-Action மேற்படிப்பு படித்து தான் விரும்பிய நிலைக்கு வர , கிராமத்தில் இருந்து நகர் புறத்திற்கு தேர்வெழுத வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கை . ஒரு நாளில் எப்படி மாறுகிறது என்பதனை இந்த குறும்படத்தில் உண்மைக்கு நிகராக பதிவு செய்துள்ளனர் . 




உங்களுக்கு தெரியுமா இந்த வரலாறு ? 

பெண்களை கடத்தி மனைவியாக்கி கொள்ளும் சடங்கு . தான் விரும்பிய ஒரு பெண்ணை அவளுக்கு விருப்பமின்றி கடத்தி அவள் அனுமதியின்றி திருமணம் செய்யும் வழக்கம் கிர்கிஸ்தான் நாட்டில் உள்ளது . 12 வயதிற்குற்பட்ட அல்லது , கடந்த சிறுமிகள் மற்றும் பெண்களை கட்டாயமாக கடத்திக்கொண்டு போய் திருமணம் செய்து , ஓர் முதல் இரவு கடந்து, உறவினர்களால் அவள் திருமணமாகாத கன்னித்தன்மையுள்ள (வர்ஜின்) என்பதனை பெண் உறுப்பில் துணியை வைத்து துடைத்து கண்டறிந்து , என் மகனுக்கான நல்ல தேர்வினை கண்டுவிட்டேன், இல்லையேல் அவளை கழுதை மேல் வைத்து ஊர்வலம் அழைத்து செல்லவேணும் என பெருமிதமடைந்து அவளை கட்டாய திருமணம் செய்த கணவனோடு வாழச்சொல்லுகிறார்கள் இதான் அவர்களின் ஒருவித மரபாம்  . 


குறிப்பாக அங்கே பலரும் 90% கல்வி பெற்ற பெண்கள் . கிர்கிஸ்தான் நாட்டில் என்னதான் கட்டாய கல்யாணம் சட்டப்படி தடைசெய்ய பட்டு இருந்தாலும் இன்றளவும் பல்வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் . 2013 சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட்டும் அது நடந்துகொண்டே இருப்பது அதிர்ச்சி தான் . இதற்கு பெண் வீட்டார்களும் ஆண்டவன் போட்ட முடிச்சு! உனக்கு இவன் தான் . என இதனை ஏற்றுக்கொண்டு அவர்களோடு பிழைக்க சொல்கிறார்கள் . நான் உன்னை நல்ல முறையில் வளர்த்துள்ளேன் . என் வளர்ப்பை கெடுத்து விடாதே என தாயே பெண்ணிடம் சொல்லி விடுகிறார் பிறகு அவனோடே வாழ சொல்லுகிறார்கள் . சொல்லப்போனால் இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதே அரிது என இணைய தகவல்கள் சொல்கிறது . கலாச்சார மரபு என்ற பெயரில் பெண்களின் மீதும் நிகழ்த்தப்படும் வன்முறை பற்றியும் , முன் பின் தெரியாத ஒருவனுக்கு மணமுடிக்கும் பெண்ணை பற்றியும் தான் இதில் குறும்படமாக்கியுள்ளார்கள் . 

Directed by Maria Brendle 38 Mins

இதுபோல சம்பவங்கள் . இன்றளவும் ஆசியா மற்றும் பெரும்பாலான ஆப்ரிக்க பகுதிகளிலும் நடந்து கொண்டு இருக்கிறது A young Kyrgyz woman is kidnapped and forced to marry. மற்றும் Women in Kyrgyzstan என கூகுளை புரட்டுங்கள் article , videos , documentary என பல தகவல்கள் இதனை பற்றி கிடைக்கும் . இப்படி சமீபத்தில் ஒரு பெண்ணை கடத்தி கொலை செய்துள்ளனர் . கடத்திய அதே காரில் சடலம் கண்டறியப்பட்டது , பலர் போராட்டங்கள் நடத்தி விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தனர் பிபிசி தளத்தில் அதைப்பற்றியும் பாருங்கள் . இந்த காட்டாய விருப்பமிலா திருமணம் பெண்கள் மீதும் நிகழ்த்தும் வன்முறை குறித்து வெளிவந்த குறும்படத்தை அவசியம் தேடிப்பிடித்து பாருங்கள் . 

இந்தக்குறும்படம் தற்போது ஆஸ்காரில் நாமினேஷன் ஆகியுள்ளது . வெற்றிபெரும் என நினைத்தேன் ஆனால் வேறொரு புரட்சிகர ஆங்கில குறும்படம் அதனை வென்றது , ஆஸ்கார் என்றாலே அவர்களின் தேர்வு அத்தியாசமாகத்தான் இருக்கும் என ஊர் அறிந்ததே . இதையே போல அனிமேஷன் சிறந்த படமொன்றை விட்டு வேறொன்றிற்கு கொடுத்தார்கள் . 


எங்கே கிடைக்கும் இந்தப்படம் ?? Where To Watch 

Post a Comment

Previous Post Next Post