உலக சினிமா பிரியர்களுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டு இயக்குனர் லாவ் டியாசின் படங்களை பற்றி தெரிந்திருக்கும் , அவர் எடுத்த பெரும்பாலான படங்கள் நீளம் அதிகமாக இருக்கும் . நம்மூர்காரர்களுக்கு 3 மணி நேர படம் பார்ப்பதே பிடிக்காது , சீரீஸ் என்றால் சிலவற்ற பார்ப்பார்கள் , ஆகையால் உள்ளூர் சினிமா பிரியர்கள் தவிர்த்திடுங்கள் . A Lullaby to the Sorrowful Mystery என்ற படத்தை இதே நாளில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இரவு தொடங்கிய படம் விடியும் வரை Youtube ல் Premier செய்திருக்கிறார்கள்.. அதற்கு முன்பு பல திரைப்பட விழாக்களிலும் , ஆன்லைன் திரைப்பட விழாக்களிலும் பங்குகொண்டது . Chennai யிலும் திரைப்பட விழாவில் இடம்பெற்றது .
ஒரு குறிப்பிட்ட நேரம் தான் இணையத்தில் வைத்திருந்தார்கள் என நினைக்கிறேன். பிறகு இந்த படத்தினை பிரைவேட் லிஸ்ட் ல் போட்டுவிட்டார்கள் . பிரைவேட் லிஸ்ட் ல் உள்ள ஒரு படத்தை பார்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட தளத்தின் நபர் அத லிங்க் ஐ கொடுத்தால் மட்டுமே முடியும் . சிறப்பாக என்னிடம் அந்த லிங்க் இருக்கிறது அன்று பதிவிட்ட அந்த லிங்க் ஐ இரண்டு வருடத்திற்கு முன்பு முகநூலில் ஒரு பதிவில் பதிவிட்டு இருந்தேன் அது இப்பொது memories ல் கிடைத்திருக்கிறது . உங்களுக்காக கீழே இணைக்கிறேன் வேண்டுவோர் மட்டும் பார்த்து பயன்பெறுங்கள் .
பிலிப்பைன்ஸ் நாட்டின் புரட்சி விடுதலை போராட்டத்தை பற்றி பல்வேறு கட்டங்களில் பேசக்கூடிய இந்த திரைப்படத்தை பெர்லின் திரைப்படவிழாவில் திரையிட்டு Alfred Bauer Prize விருதை வென்றிருக்கிறார்கள். 485 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை Mubi யிலும் வெளியிட்டார்கள். முதல் ஒரு மணி நேரம் பார்த்தேன். பிறகு படம் Expire ஆகி விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதற்கடுத்த சமயத்தில் youtube ல் பார்த்தேன் .
படத்தை பற்றி இயக்குனர் கூறியது சினிமாவைப் பற்றிய ஆழ்ந்த தேடல்களின்போது படத்தின் நீளத்தை மட்டுமே ஒரு அளவுக்கோலாக வைத்து அணுகுவது சரியல்ல. அது சினிமா. கவிதையைப் போன்றது, இசையைப் போன்றது, ஓவியத்தைப் போன்றது, பெரிய அட்டையில் வரைந்தாலும், சிறிய அட்டையில் வரைந்தாலும் ஓவியம்-ஓவியம்தானே..? அதேபோல்தான் சினிமாவும், அதன் நீளத்தை ஒரு பொருட்டாக பார்க்கக் கூடாது’ என்று கூறுகிறார். மணிக்கணக்கில் சீரீஸ் பார்க்கும் நண்பர்களுக்கு 8 மணி நேர படமென்பது பெரிதாக தெரியாது. அதனால் விரும்புபவர்கள் பார்க்கலாம். தற்போது Youtube ல் உள்ளது. பிரைவேட் லிஸ்ட் தான் இருந்தாலும் இந்த லிங்க் மூலம் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம் . நன்றி
Post a Comment