ஒரு Artist திரைப்படத்திற்கு முக்கிய காரணியே ஒளிப்பதிவும் , பின்னணி இசையும். மற்றும் Art + படத்தொகுப்பும் தான். அதற்கு பிறகு தான் மற்ற சமாச்சாரங்கள் என்பது என் எண்ணம். கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆஸ்கார் *பிற மொழி திரைப்படங்கள் பிரிவில், தேர்வாகி நாமினேஷன் ஆகிய அனைத்து படங்களும் என்னளவில் சிறந்த படங்களே. சிறப்பான தேர்வு 👌. ஐந்து படங்களும் கிட்ட தட்ட அவுட்ஸ்டாண்ட்ங் Movies, Really Worth 👌. இந்த திரைப்படமும் தரம்.
"Don't Look Away Everything true is Beautiful ❤ "
படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஒவ்வொரு ப்ரேம்களிலும் காட்சிகளின் மூலம் சிறப்பாக நகர்த்தி இருக்கிறார்கள்.பெரும்பாலான காட்சிகளில் டீப் போக்கஸ் முறையில் கையாளப்பட்ட விதமும் காட்சிப்படுத்திய காட்சிகளும் மிக சிறப்பாக இருந்தது. தனிபட்ட முறையில் எனக்கு பல Frame கள் ரொம்பவே பிடித்திருந்தது.குறிப்பிட்ட நான் விரும்பிய சில Frameகளை பிரதி எடுத்து வைத்துக்கொண்டேன். ஆரம்பத்தில் தொடங்கி கொஞ்சம் காட்சிகள் முடிந்து சிறு சிறு சம்பவங்களும் அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும். என்னுள்ளே மிகவும் நெருக்கமாக்கியது. திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் பொழுதே என்ன மாதிரியான படம் என்பதனை கொஞ்சம் யூகிக்க முடியும். ஆதலால் கதை என்ன என்பதனை தேடாமல் படத்தை பார்த்தால் நிச்சயமாக மாறுபட்ட அனுபவமாக இருக்கும் குறிப்பாக ஆர்ட்டிஸ்ட் , Photography , World War சம்மந்தப்பட்ட படங்களை பார்ப்போருக்கு இதுவும் பிடிக்கும் .
படத்தின் ஒளிப்பதிவையும் எடிட்டிங்கையும் தாண்டி மிகவும் கவர செய்தது இசை தான். Original Sound Track Spotify மற்றும் Youtubeல் உள்ளது கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள். மிதக்க ஆரம்பித்து விடுவீர்கள்.அப்படி ஒரு ரசனை 👍👍. என்னை மிகவும் கவர்ந்த நாயகி Saskia Rosendahl (Elisabeth May) பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவளுடைய தனித்துவமான காந்த கண்களும் , அழகான இதழ்களும், வசீகரிக்கும் உடலமைப்பும் , என்னை ஒட்டுமொத்தமாகவே கவர்ந்து விடுகிறாள். படம் முடிந்த பிறகும் நினைவில் இருக்க செய்கிறாள். ஒரு சில படங்களை பார்க்கும் போது மட்டுமே கதாபாத்திரங்களின் முகங்கள் திரையில் தோன்றியதிலிருந்து முடிவு வரை முழுக்கவனமும் அவரை நோக்கியே செலுத்த வைக்கும். அப்படி ரசித்து பார்த்தேன். அவளுடைய மற்ற படங்களை தேடி பிடித்து பார்க்க உள்ளேன்.
Never Look Away - Werk ohne Autor (2018,Germany) / German / Florian Henckel von Donnersmarck
பல திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு விருதுகளையும் வென்றுள்ளது . இதில் இரண்டு காட்சிகள் மிகவும் உங்களை கவரும். Rotation Camera Shot சினிமாட்டிக் ல் அசத்தி இருப்பார்கள். I Saw The Devil படத்தில் ஒரு காருக்குள் கேமரா சுத்து சுத்துன்னு சுத்துமே அது போல இங்கு இரண்டு இடங்களில் வரும். அதன் ஊடே வருக்கூடிய பின்னணி இசையில் கரைந்து போவீர்கள் . பல காட்சிகளில் கேமரா கோணங்கள் நகர்வு என அட்டகாசமாக இருந்தது. ஆஸ்காரில் ஒளிப்பதிவுக்கு நாமினேஷன் ஆனது. ஆனால் அதே வருடம் வந்த Roma மற்றும் Cold War திரைப்படங்களின் ஒளிப்பதிவும் மிக சிறப்பாக இருந்ததால். வெற்றி பெறவில்லை.
மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடிய படம் என்பதால் தவிர்த்து விடாதீர்கள். வாய்ப்புள்ளவர்கள் அவசியம் பாருங்கள். இதுபோன்ற படங்களில் எதையுமே தெரிந்துகொள்ளாமல் பார்ப்பதில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது . The Soundtrack is Simply Awesome 💝 தற்போது இந்தியாவில் எந்த ஸ்ட்ரீமிங் சர்வீஸிலும் இல்லை, வேண்டுமானால் US( Vpn ) - Amazon Prime உள்ளது. நன்றி
Post a Comment