A Chiara (2021,Italy) - Film Intro By Tamil | தந்தையை தேடும் சியாரா

ஒரு அழகான குடும்பம் நாயகியின்  சகோதரி க்கு பிறந்தநாள் வருகிறது . அவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடி  18 வது பிறந்தநாள் விழா கொண்டத்தில்  தொடங்குகிறது கதை . நன்றாக நடந்த முடிந்தது அந்த பிறந்தநாள் விழா , ஆனால் எதோ ஒரு வித சம்பவம் ஒன்று அரங்கேற போகிறது என்பது பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுகிறது . தீடீரென அடுத்தநாள் அவர்கள் வீட்டில்  கார் வெடித்து விடுகிறது . அதற்கு பிறகு தந்தையை காணவில்லை . 



டிவி சேனல்களில் போதை கூட்டத்திற்கு தொடர்பிருப்பதாக அவரை காண்பிக்கிறார்கள் . எதோ ஒரு மாஃபியா கும்பலோடும் தொடர்பிருப்பதாக காண்பிக்கிறார்கள் . இது குறித்து அவள் தன்னுடைய அம்மாவிடம் கேள்வி எழுப்புகிறாள் ஆனால் சரியான பதில் இல்லை . தனது மூத்த சகோதரியுடனும் கேற்கிறாள் .  சியராவிற்கு எதோ ஒன்று மனதளவில்  உறுத்திக்கொண்டே இருக்கிறது . தனது தந்தையை தேட ஆரம்பிக்கிறாள் . உண்மையை தெரிந்துகொள்ள விரும்புகிறாள் . 15 வயது சிறுமியாக அவள் முயற்சி என்ன ஆனது என்பதே இந்தப்படம் . 


ஒரு சிறிய  கை கேமரா ஒன்றை உங்கள் முகத்திற்கு அருகில் வைத்துவிட்டு நீங்கள் கேமரா இருப்பதை மறந்துவிட வேண்டும். உங்களின் வாழ்க்கை இப்போது வேறு இதை நோக்கிய உங்களின் பயணம் இயல்பாக இருக்க வேண்டும் என காட்சிப்படுத்திய மாதிரி இருந்தது . ஆரம்பம் முதல் இறுதி வரை சியாராவின் முகம் நம்மில் பதிந்துவிடுகிறது . அவ்வளவு அழகான முகம் எளிமையான நடிப்பு . 


உண்மையை சொல்லவேண்டுமானால் இந்தப்படம் முடிவடைவதற்குள் நான் இரண்டு மூன்று முறை எழுந்து வெளியே சென்று வந்தேன் , ஒரு கட்டத்தில் கண் சொக்கி தூங்கி விட்டேன் . திரைப்படவிழாக்களிலே சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்த்திருக்கிறேன் , எவ்வளவு ஆக சிறந்த படமாக இருந்தாலும் சிலவற்றை தடுக்க நம்மால் முடியாது ஆகையால் மீண்டும் விட்டதில் இருந்து பார்த்தேன் .


நிச்சயமாகவே இயல்பான படம்தான் . ட்ரைலர் ஏற்படுத்திய தாக்கம் படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங்  தான்  . இருந்தாலும் வியக்க வைக்கும் அளவிற்கு பின்னணி காட்சிகளும் , ஆங்காங்கே தேவையான இடங்களில் மட்டும் வரும் ஒலி  சத்தங்களும் பின்ணணி இசையும்  . எடிட்டிங்கும் , ஒளிப்பதிவும் நன்றாக இருந்தது . கதை அவ்வளவு புதிதொன்றும் இல்லை . நமக்கு சாதாரணமாக தான் இருக்கும் .  குறிப்பாக நாயகியின் நடிப்பு அவ்வளவு அழகாக இருந்தது . இந்த முகமே  எத்தனை எத்தனையோ கதை சொல்கிறது வரும் காலங்களில் சில உலகசினிமாக்களில் இவரை காணலாம் என நினைக்கிறன் . 


இது ஒரு மிக சாதாரண எளிமையான படம்தான் என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன் . நான் இந்த படத்தின் போஸ்டரை பார்த்ததில் இருந்தே பார்த்துவிட வேண்டும் என்றிருந்தேன் இப்போது பார்த்தாகிவிட்டது  . ஆனால் இத்தனை  விருதுகள் வென்றிருக்கிறது என்பது மிக மிக ஆச்சர்யம் தான்  .  A Chiara 2021 Directed by Jonas Carpignano இயக்குனர் இதற்கு முன்பு குறும்படமாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார் . பல உலக திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு வென்றும் உள்ளார் . 


தற்போது இந்தியாவில் எந்த OTT யிலும் இல்லை ஆனால் கூடிய விரைவில் MUBI யில் வெளியாகலாம் நீங்கள் பார்க்க விரும்பினால் அதில் பார்க்கலாம் . 

நன்றி 

Post a Comment

Previous Post Next Post