Borgman (2013,Netherlands) - Film Intro By Tamil | மாந்திரீக நகரத்து நாடோடிகளா இந்த போர்க்மேன் கூட்டம்

சமீத்தில் டச்சு திரைப்படமான போர்க்மேன் (2013) பார்த்தேன் பார்க்க நகரத்து நாடோடி போலவும் தந்திரங்கள் நிறைந்த வீடற்ற மனிதனின் கதையாக தோன்றியது . ரொம்பவும் சஸ்பென்ஸான ஆரம்பமே ஒரு நல்ல திரைப்படத்தை பாக்க போறோம் என்ற நம்பிக்கையை தந்தது . நிலத்திற்கு அடியில் வசிக்கும் ஒரு சிலரை சுட்டு தள்ள ஒரு குரூப் கிளம்புகின்றனர். அங்க இருக்க Borgman அவனோட கூட்டாளிகள் ஒவ்வொருத்தருக்கா தகவல் கொடுத்துகிட்டே போறார் . 



அங்க இருந்து நேரா ஒரு வீட்டுக்கு போய் உங்க மனைவியை எனக்கு தெரியும் நான் இங்க தங்கிக்கிறேன் ன்னு சொல்றார் . இதுக்கு மேல என்ன ஆகி இருக்கும் . திடீர்ன்னு ஒருவீட்டுக்கு போய், அவங்க புருஷன் கிட்ட இப்படி சொன்னா எப்படி இருக்கும்  ? அதுக்கப்புறம் நடக்கறது பூராமே சஸ்பென்ஸ் தான் .இதுக்கு முன்னாடி இப்படிப்பட்ட படத்தை நீங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் . 


குறிப்பு : முன்னோட்டத்தை பார்த்துவிட்டு தொடருங்கள் இறுதியில் அந்த இயக்குனருடரான ஒரு பேட்டி YouTube ல் கிடைத்தது அதையும் அவசியம் படம் பார்த்துவிட்டு பாருங்கள் . 

 Borgman (2013,Netherlands) / Dutch / Alex van Warmerdam 

பலரும் பாராட்டிய கொரியன் திரைப்படமான Parasite படம் பார்க்கும் போது , இங்கே நடக்கும் சில காட்சிகளும் அதுவும் ஒத்துப்போயின , ஆனால் இரண்டு வெவ்வேறு கதைகள் , இரண்டையும் தொடர்பு படுத்த வேண்டாம் .. ஒரு இயக்குனரின் திறமை என்னவென்றால் குறிப்பிட்ட கதாபத்திரத்தை பற்றிய தேடலை உருவாக்குவது தான் . அந்த நாயகனின் முன்கதை என்ன? பின் கதை என்ன ? ஏன் இப்படி நடக்கிறான் ,எப்படி அவனால் இது எல்லாம் செய்ய முடிகிறது . என பிளாஷ் பேக் எல்லாம் போட்டு ஒப்பேத்தி ஓட்டும் படங்களை பார்க்க பெரிதாக ஆர்வம் இருக்காது. 


இதுபோன்ற காட்சிகள் காதாபாத்திரத்தை குறித்த அதிக விவரங்களைத் தரும் என்றாலும் அதைப் பார்க்க நான் ஆர்வமாக இருக்க மாட்டேன் என்பதுதான் உண்மை . போர்க்மேன் கதாபாத்திரத்தின் மர்மத்தை நான் முழுவதுமாக விரும்பினேன் , அவன்தான் வில்லன், அவன்தான் ஹீரோ, அவன்தான் கடவுள் , அவன்தான்  எல்லாம் . நல்லவேளையாக இந்த இயக்குனர், நாயகன் வந்த இடத்தைப் பற்றிய முழு பின்னணியையும் , ஏன் இப்படி செய்தான் ,  எவ்வாறு இது அதனால் முடிகிறது என்பதனையும் நமக்கு  கொடுக்கவில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 


போர்க்மேன் கூட்டம் செய்வதில் சில விவரிக்கப்படாத காட்சிகள் ஆடியன்ஸ் போக்கிற்க்கே விட்டு இருப்பார் இயக்குனர் . உதாரணத்துக்கு இந்த மனிதர்கள் இதற்காகவே வடிவமைத்திருந்தார்களா ன்னு , அல்ல தந்திர விசித்திரர்களா? பேய்களா ? ஏலியன்ஸா ? என பல கேள்விகளை அடுக்கலாம் . ஒரு கட்டத்தில் போர்க்மேன் என்பதே ஒரு கனவு தானோ ? என்று நினைத்தேன் . அல்ல விருப்பத்திற்கு எதிராக ஒருவரின் வாழ்க்கையில் எவ்வாறு நுழைவது போன்றதா ? ன்னு குழப்ப நிலை தான் . ஆனாலும் சுவாரசிய நிறைந்த ஒரு படம் . எடிட்டிங்கும் சினிமாட்டோகிராபியும் நன்றாக இருந்தது . 


அந்த வீட்டில் வேலை செய்யும் கதாபாத்திரதை ரசித்து பார்த்துக்கொண்டேன் . போர்க்மேன் ஒரு மாஸ்டர், அவன் எளிதில் அத்தனையும்  கையாளுபவராக இருந்தார், ஆனால் அவரும் அவரது நண்பர்களும் அதை எவ்வாறு செய்ய முடியும் என்பதை உண்மையில் காட்டவில்லை.இவர்களை பார்த்தால் வழக்கமான கொலையாளிகளைப் போல தெரியமாட்டார்கள் ஆனால் கனக்கச்சிதமாக வேலையை முடிப்பார்கள் . எப்படி கொலை செய்து மறைப்பது அதற்கும் சுவாரஸ்யமான வழி என காட்சிக்கு காட்சி அசத்தி இருக்கிறார்கள் . 


நவீன செல்போன் நெட்வொர்க்கிங் வீடற்ற காட்டிற்குள் நிலத்தடி குடியிருப்பு சில நேரங்களில் மருந்துகள் / அறுவை சிகிச்சை ன்னு ரகரகமா இருக்கும் . Entirely unpredictable ஆகத்தான் தோன்றியது . ஒருவேளை உங்களால் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிந்தால் அது உங்களோட தனிப்பட்ட ஸ்பெஷல் . எனக்கு விருப்பமான படங்கள் தொகுப்பில் இதனை இணைக்க காரணமே கடந்த ஆண்டுகளில் பார்த்த மிகவும் குழப்பமான படங்களில் இதுவும் ஒன்று . Sounds like and Interesting one . 


பொறுமையும் ஆர்வமும் இருந்தால் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் இந்த படம் உங்களுக்கும் பிடிக்கலாம் . ஒரு வேண்டுகோள் நீங்கள் மகிழ்ச்சியான அல்லது மகிழ்ச்சியற்ற முடிவை அந்த படத்தில் எதிர்பாக்காதீர்கள் . அரிதாக ஒரு கலவையான அல்லது குழப்பமான முடிவைப் பெறுவீர்கள். 😉 ஏற்கனவே இந்த படத்தை பார்த்து இருந்தால் , நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன் கருத்தை பதிவு செய்யுங்கள் . இனி வரும் காலங்களில் எதாவது மொழியில் ரீமேக் ஆகலாம் , அல்லது இன்ஸ்பயர் செய்து படங்கள் வரலாம் .


இந்த திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் முக்கிய விருதுக்கான  நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றது , ஆஸ்காருக்கும் சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட அனுப்பி வைக்கப்பட்டது . தற்போது இந்தியாவில் எந்த OTT யிலும் இல்லை என நினைக்கிறன் , கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும் . நன்றி 

Post a Comment

Previous Post Next Post