Two Days, One Night (2014,Belgium) - Film Intro By Tamil | இரண்டு பகலும் ஒரு இரவும்

தீர்க்க முடியாத பிரச்சனைகள் என எதுவுமே இல்லை. எல்லா பிரச்னைக்கும் ஏதாவது ஒரு வகையில் தீர்வுகள் உண்டு. ஆனால் அதற்கான ஈடுபாடு , பொறுமையுடன் கூடிய நிதானம் மிக அவசியமானது. இங்கு பலரிடம் , ஏன் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் ஒரு பிரச்னையை எப்படி கையாளுவது என தெரியாமல் ஆறுதல் இல்லாமல், ஒரு நொடியில் தவறான முடிவுக்கு வந்து விடுகிறார்கள். அவர்களின் குடும்பத்திற்கே பெரிய இழப்பை தந்துவிட்டு சென்று விடுகிறார்கள். 



என்னுடைய ஆசிரியர் ஒருவர் பலருக்கு முன் உதரணமாக விளங்கியவர் . என் பள்ளி நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நினைவில் நீங்காமல் இன்றும் இருப்பார் என நம்புகிறேன். அவர் பலருக்கு தந்த மன உறுதி , சமூகத்தில் சந்தித்த அனுபங்கள், நுணுக்கமான தெளிவான பார்வை ,தன்னபிக்கை தரக்கூடிய பேச்சு, மற்றவர்களை பாராட்டுதல் போன்ற எண்ணம் , அவர்களின் லட்சியங்களை அறிந்து ஊக்குவித்தல் . என அவரை பற்றி நிறைய சொல்லல்லாம். ஆனால் தீடீரென ஒருநாள் அவர் வேலையை விட்டு சென்று விட்டார் இவர்தான் உங்களுடைய புதிய ஆசிரியர் என பள்ளி நிர்வாகம் சொல்லியது. 

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை , சக ஆசியர்களுக்குள் ஏதோ பிரச்னையாம் . அது இல்ல கடன் தொல்லையாம் . குணப்படுத்த முடியாத வியாதியாம் . என ஆளாளுக்கு ஒன்றை கிளப்பி விட்டார்கள். 4 நாள் கழித்து அவர் இறந்துவிட்டார் (தற்கொலை) என்ற தகவலை பள்ளி நிர்வாகம் தெரிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலியுடன் முடித்துக்கொண்டது. இதை தவிர வேறொன்றும் எனக்கு இன்றுவரை தெரியாது . மாணவர்களுக்கு முன்னுதாரனமாக விளங்கியவர் இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தார் என பலருக்கு குழப்பம் தான். 


இந்த படம் பார்த்துக்கொண்டு இருக்கையில் என்னுடைய நினைவில் அவர் வந்து சென்றார். மிஸ் யூ சார் . இந்த படத்தை பற்றிய ஒன்லைன் ஐ சொன்னால் இது எல்லாம் ஒரு படமா என நிச்சயம் கேலி செய்வீர்கள். அதோடு நின்றுவிட்டால் பரவாயில்லை கதை இல்லை, கரு இல்லை என சண்டைக்கு வருவீர்கள்.ஆனால் யதார்த்தமான பலரின் பக்கங்களை பதிவு செய்ய நம்முடைய சினிமாவிற்கு கொடுத்துவைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை . 

வழக்கமான ஒரே பேட்ட்டர்ன்களை முன்னிறுத்தி வரும் படங்களை பார்த்த நமக்கு, திடீரென ஒரு இண்டிப்பென்டன்ட் சினிமாவையோ? அல்லது மாற்று திரைப்படம் என பலரால் கேலிக்கு உள்ளாக்கப்படும் உலக சினிமா படத்தையோ! பார்த்தால் ஒன்னும் விளங்காது. ஏனென்றால் இதில் அதிரடியான சண்டை காட்சிகள் இல்லை, 5, 6 பாட்டுகள் இல்லை , இதழ் வருடும் காதல் இல்லை.அதே நேரத்தில் சமூக கருத்து சொல்லி ஊரை திருத்தும் படம் இல்லை. தார தாரயாய் கண்ணீர் விட வைக்கும் காட்சிகள் இல்லை , முக்கியமா காமெடி என்ற பெயரில் கொல்லும் படமில்லை என அடுக்கிக்கொண்டே போகலாம். 


சோ எனக்கு இதுபோன்ற படங்கள்தான் வேண்டும். நீ சொல்லும் படம் பார்க்க பிடிக்காது என்பவர்கள் மேற்கொண்டு தொடர வேணாம். 

இரண்டு நாள்கள் ஒரு இரவு. திரைப்படத்திற்கு வருவோம் திரைப்படத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் தன்னுடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கொஞ்சம் ஓய்வில் இருக்கிறார். உடலளவில் பாதிக்கப்பட்ட அவளுக்கு அதிர்ச்சிகரமான ஒரு செய்தி அவளை வேலையை விட்டு நீக்க அவளுடைய சோலார் பேனல் தொழிற்சாலை நிர்வாகம் அறிவிக்கிறது. அப்படி அவள் நீங்கும் பட்சத்தில் சக ஊழியர்கள் ஆன ஒவ்பொறுவருக்கும் EUR1000 போனஸ்ஆக வழங்கப்படும், இப்படி இருக்கும் சூழலில் நிர்வாகம் அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறது அதாவது இரண்டு நாள்களும் ஒரு இரவும். தான் அவளுடைய கடைசி நாள்கள் அதற்குள் சக ஊழியர்களான 16 பேரிடம் இவள் வேலையை தொடர ஆதரவு திரட்ட வேண்டும். யோசித்து பாருங்கள் இப்படி பட்ட சூழலில் நம் நிலை எப்படி இருக்கும் என. இறுதியில் என்ன ஆனது என்பதனை படத்தை பாருங்கள். ஒன்றரை மணி நேரம் நீங்களும் பயணிப்பீர்கள். நிறைய கேள்விகள் எழும், கேள்விக்கான பதிலை தேடுங்கள். Mubi ல் இரண்டு வாரத்திற்கு முன்பு பார்த்தேன். 

இயற்கை ஒளியும் , இயற்கை சத்தங்களும் தான் படத்திற்கு முக்கிய பலமே மிக சிறப்பான நடிப்பு அதோட யதார்த்த பயணமும் தான் இந்த படம் சினிமா துறை நண்பர்கள் கவனத்திற்கு அவசியம் நீங்கள் காணவேண்டிய படம் இது. குறிப்பாக கனவன்கள் ஆம் முக்கிய கதாபாத்திரத்த்திற்கு முழு உறுதுணையாகவும் ஊக்கமும் கொடுத்தவன் அவனே. மகளிர் தினத்தை முன்னிட்டு, நூற்றாண்டு கால தமிழ் சினிமாவில் பெண் . என்ற முழு நாள் நிகழ்வை கூகை திரைப்பட இயக்கம் முன்னெடுத்து சிறப்பு திரைப்படமாக இந்த படத்தினை திரையிட்டு கலந்துரையாடல் நடத்தியது.அதிதி பாலன் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டார். அந்த வீடியோ காட்சிகள் Youtube ல் Sruthi Tv or கூகை திரை சேனலில் இருக்கும் என நினைக்கிறேன். விரும்புவோர் அதனையும் பாருங்கள். 


ஆஹா ஓஹோ உலக மஹா காவியம் டா இது, என நான் சொல்லவில்ல ஆனால் பல திரைப்பட விழாக்களில் பங்கு கொண்டு, பல விருதுகளை வென்று ,சிறந்த திரைப்படமாக பெல்ஜியம் சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பி வைக்கப்பட்டது , ஆனால் Nomination ஆகவில்லை. சிறந்த நடிகை தேர்வில் முதல் முறையாக பெல்ஜியம் திரைப்படம் நாமினேஷன் ஆனது காரணம் Marion Corillard 👌 இயல்பான யதார்த்த நடிப்பு. ஒருவேளை இந்திய சினிமா கண்ணில் இந்த படம் பட்டு முறையாக ரீமேக்கினால் என்னுடைய விருப்பம் தாப்சி நடிக்க வேண்டும் என்பதே. விருப்பம் உள்ளவர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் . படித்ததற்கு நன்றி .

Post a Comment

Previous Post Next Post