எதிர்பாராத ஒரு நிகழ்வினை சந்திக்க நிகழும் போது அவர்களுக்குள் ஏற்படும் அந்த பிரச்சனைக்கு என்ன தான் ஆறுதல் கூறினாலும் அதிலிருந்து வெளிவருவது என்பது மிகவும் கடினமானதாகும் , அதே சமயத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக நிகழ்வுகள் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் எல்லாம் (PTSD) மன அளவில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை . இந்த திரைப்படம் முக்கியமான இரு பெண் காதாபாத்திரத்தை பற்றி பேசுகிறது . போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை பிரிவில் உதவி நிர்வாகியாகி பணிபுரிபவள் இயா , இயாவிற்கும் ஒரு கொடுமையான பிரச்னை உண்டு . ஆஸ்துமா போல , இரண்டு மூன்று நிமிடங்கள் மூச்சு திணறல். அவளை சுற்றி என்ன நடக்கும் என்பதே தெரியாத சூழல் தான் . அவளுடைய தோழி மாஷா போருக்கு பிறகு அவளும் PTSD பிரச்னைகளை சமாளித்து வருபவள் தான் . இருவரை பற்றிய கதைதான் இந்த படம் .
I feel the film is unique for me, like the direction, Colors frames, cinematography, sound, acting, and Nice Film.
திரைப்பட விழாக்களில் திரையிட்டு பலரின் பாராட்டுக்களை பெற்று கவனிக்கத்தக்க வகையில் வரும் சினிமாக்கள் எப்போதும் ஸ்பெஷல் தான் , அதிலும் பலர் பிலிம் பெஸ்டிவலில் பார்த்து விட்டு அவர்களின் கருத்தை பகிரும் பட்சத்தில் எப்படியாவது பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை கிளப்பி விட்டு விடும் . அப்படிதான் இந்த படமும் எனக்கு அறிமுகமானது .கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதையும் மற்ற விருதுகள் பலதையும் வென்றுள்ளது. அது இல்லாமல் சில திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது . படத்தை பார்த்துவிட்டு இயக்குனருடான கலந்துரையாடலை Youtube ல் காணுங்கள் .
இயா மற்றும் மாஷா வின் கதையை விருப்பமிருப்போர் முன்னோட்டம் பார்த்துவிட்டு அவசியம் பாருங்கள். மற்றவர்கள் தவிர்க்கலாம் . Slow But Amazing படத்தின் மொத்த தொழில்நுட்ப துறையும் தங்களால் முடிந்த அத்தனை சிறப்பான உழைப்பினையும் செலுத்தி இருக்கிறார்கள் . பச்சை சிகப்பு என ஆங்காகே வரும் நிறங்கள் எதோ ஒன்றை நம்மிடம் விட்டு செல்லும் . கேமரா ஒர்க் மிக சிறப்பு சொல்லப்போனால் அசத்தலான விசுவல் ட்ரீட் அதுவும் Women Cinematographer .முதலில் கருப்பு வெள்ளை திரைப்படமாக எடுக்க தீர்மானித்து பிறகு மாற்றப்பட்டது என்பது கூடுதல் தகவல் . படம் முடிந்த அடுத்த நிமிடமே இதில் நடித்த முக்கிய காதாபாத்திரமான இருவரின் மற்ற படங்களை பற்றிய தகவலை தேட தொடங்கிய எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது , இதுதான் இருவருக்குமே முதல் திரைப்படம் . இயக்குனருக்கு இரண்டாவது திரைப்படம் 27 வயதான இயக்குனரிடமிருந்து இப்படி ஒரு மேக்கிங் என்பது அட்டகாசமாக இருக்கிறது .
இரண்டாம் உலகப் போரில் ரஷ்ய பெண்களின் கதைகள் மற்றும் அவர்களுடனான இன்டெர்வியூ என தொகுக்கப்பட்ட புத்தகத்தை படித்த பிறகு இந்த திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இயக்குனருக்கு வந்ததாக Imdb தகவல் . 2020 ஆம் ஆண்டு ஆஸ்கார் போட்டிக்கு ரஷ்யா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது . உணர்ச்சி ,அன்பு , தேடல் , துணை , புன்னகை , வண்ணம் என பலவற்றால் நிரம்பியுள்ளது இந்த படம் . இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பெண்களை பற்றிய படங்கள் ரஷ்யா மற்றும் சோவியத்ல் மிகவும் குறைவு . இயக்குனருக்கு இந்த திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணமே ? ஸ்வெட்லானா அலெக்ஸீவிச் ன் தி வுமன்லி ஃபேஸ் ஆஃப் வார் என்ற நோபல் பரிசு வென்ற இந்த புத்தகம் தான் . வாய்ப்பு இருப்போர் இதனை தேடிப் பிடியுங்கள் .
Now On MUBI
Post a Comment