The Other Bank (2009,Georgia) - Film Intro By Tamil | தந்தையை தேடி ஆபத்தான பயணம்

சிறுவர்கள், சிறுமிகள் மற்றும்  குழந்தைகளின் பார்வையில் சொல்லப்பட்ட போர் கதைகள் , போருக்கு பிந்தைய பயணம்  எல்லாம் உணர்வுபூர்வமானவை .நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு வலுவான முறையில் கையாளப்பட்டு இருக்கும் . அடுத்த நிமிடம் வாழ்க்கையில் என்ன ஆக போகிறது என ஒன்றுமறியாத இந்த குழந்தைகளின் பார்வை நிச்சயம் உங்களை வியக்க வைக்கும் . இந்த திரைப்படத்தை தனது நாட்டிற்காக சமர்ப்பித்துள்ளார் இயக்குனர் . அவரின் முந்தைய படமும் மிக சிறப்பாக இருக்கும் . இந்த திரைப்படம் கவனிக்கத்தக்க பெர்லின் , ஐரோப்பியா , Warsaw , Goterberg என இன்னும் பல குறிப்பிடத்தகுந்த திரைப்படவிழாக்களில் பங்குகொண்டு விருதுகளையும் வென்றுள்ளது . 82 ஆவது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட அனுப்பி வைக்கப்பட்டது . ஆனால் நாமினேஷன் ஆகவில்லை . 




12 வயது சிறுவன் , பல வருடங்களாக தனது தந்தையை பார்க்கவில்லை . தான் கிடைக்கும் வேலைகளை செய்தும் சில சக வயது  கூட்டுக்காரர்களோடு சேர்ந்து போதை , சிறு  திருட்டு மற்றும் அவர்களுக்கான  உதவியும்  செய்கிறார்.  அதன் மூலம் தனக்கு கிடைத்த வருமானத்தை தனது தாயிடம் கொடுத்து இனி வேலைக்கு போக வேண்டாம் என சொல்கிறார் . தனது தாய் வேறொருவரிடம் அதீத நட்பில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார் . இந்த தொடர்பு அவருக்கு வருத்தத்தை தருகிறது .  தொடர்ந்து  தனது தாயின் நடவடிக்கைகளை கவனிக்கும் சிறுவன்  ஒருகட்டத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி அங்கிருந்து கிளம்பி தனது தந்தையை தேடி பயணத்தை மேல்கொள்கிறார் . 

தனது தந்தை உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாது , ஜார்ஜியா அப்காசியா உள்நாட்டு  போரின் போது நாட்டின் சார்பாக  அங்கே சண்டையிட அனுப்பிவைக்கப்பட்டு இருந்தார் , திரும்பி வரவே இல்லை .  ஆனால் அவர் நிச்சயம் அங்கே இருப்பார் என உயிரை கையில் பிடித்துக்கொண்டு துப்பாக்கி பிடியுடன் நிக்கும் எதிரி நாட்டு ராணுவத்தை கடந்து செல்ல வேண்டிய ஆபத்தான சூழல் . அப்படி  மலையை கடந்து , நாட்டின் எல்லையை கடந்து  அந்த பயணத்தை செய்கிறார் . வழி நெடுகிலும் அவன் சந்திக்கும் சில மனிதர்கள் , அவர்களின் பக்கங்கள் என ஒரே நேர்கோட்டில்  காண்கிறார்  . இறுதியில்  தந்தையை சென்றடைந்தாரா ? என்பதை மிக இயல்பாக காட்சிகளாகி இருக்கிறார் .  

திரைப்படங்களில் சிறுவர்களையும் , குழந்தைகளையும்  கையாளுவது கடினம் தான் . சமீபத்தில் பார்த்த tulpan என்ற கசக்கஸ்தான் நாட்டு படத்தில் ஒரு  குட்டி குழந்தை  கதாபாத்திரம் ஒன்று வரும் . ஒரு குச்சை கையில் வைத்துக்கொண்டு குதிரை ஓட்டுவது , மற்றவர்களை அடிப்பது , சிறுநீர் கழிப்பது , பாடுவது ஓடுவது ஆடுவது இதைத்தான் அந்த குழந்தை திரும்ப திரும்ப செய்யும் . இயக்குனர் கூட மேடையில் அந்த குழந்தை ஒரு விலங்கை போல நடந்துகொள்வான்  , அவ்வளவு எளிதில் கையாள முடியாது ஆனால் ஒரு சில மாதங்களுக்கு முன்பே அங்கு சென்று எல்லோரோட ஒன்றாக பலக விட்டு , அவருக்கே தெரியாமல் கேமாரவை வைத்து படம் பிடித்தால் தான் இயல்பாக இருக்கும் .  அப்படித்தான் பல காட்சிகளை எடுத்தோம் என குறிப்பிட்டு இருந்தார் . உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்த்தே தீர வேண்டிய ஒரு படம் தான் Tulpan அந்த படத்தை பற்றி நான் அறிமுகம் செய்ததை இங்கே படிக்கலாம் . 

நம்மூரை பொறுத்தவரை  எனோ தானோ என சிறுவர்களை பெரியதன பேச்செல்லாம் பேசவிட்டு , இங்கே அவர்களை கிரஞ்சு குழந்தை , புளுத்தி குழந்தை என கூப்பிடும் அளவுக்கு இயக்குனர்கள் அவர்களுக்கு வாழ்நாள் பாவத்தை செய்திருக்கிறார்கள்  , கூமுட்டை தனமான கேள்விகளை கேற்க வைக்கும் இயக்குனர்கள் மத்தியில் இதுபோன்ற திரைப்படங்களை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும். கூடுதலாக Capernaum இன்னும் பல படங்களையும் அவர்கள் பார்க்க வேண்டும் . எப்படி ஒரு குழந்தை கதாபாத்திரத்தை , எப்படி ஒரு சிறுவர் சிறுமியர் கதாபாத்திரத்தை கையாளுவது என்பதை அவர்கள் புரிந்து செயல்பட்டால் குழந்தைகள் குழந்தைகளாகவே ரசிக்கப்படுவார்கள் .  நிச்சயம் குழந்தைகள் சார்ந்த நல்ல திரைப்படங்கள் இங்கே வரவேண்டும் . இங்கே  எத்தனையோ கதைகள் இருக்கிறது , மாற்றம் வரும் என நம்புகிறேன் . 


ஒரே கலாச்சார பின்னணியும் பண்பாடும் கொண்டுள்ள ஜார்ஜியா - அப்காசிய, பல வருடங்களுக்கு முன்பே பல முரண்பாடுகளை கொண்டுள்ளது  . அவர்களுடைய  போர் பற்றி தெரிந்துகொண்டு இந்த படத்தை பார்க்கலாம் . georgian abkhazian war

The Other Bank 2009 ‘გაღმა ნაპირი’ Directed by Giorgi Ovashvili

தற்போது இந்தியாவில் இந்தப்படம் எந்த OTT யிலும் இல்லை , நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டு தேடினால் கிடைத்து விடும் , Youtube ல் கூட இருக்கிறது ஆனால் ஆங்கில துணையெழுத்து இல்லை . 



Post a Comment

Previous Post Next Post