ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் தலைநகரத்தில் வசிக்கும் மூன்று பெண்களை பற்றிய கதைதான் இந்த திரைப்படம் . 92 ஆவது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட அவர்கள் நாட்டு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது , பிறகு தேர்வுக்குழுவால் இறுதி பட்டியலில் இடம்பெறாமல் நிராகரிக்கப்பட்டது , . Busan , Cairo , Venice , IFFI என பல முக்கிய திரைப்படவிழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது . ஹைப்பர்லிங்க் , அந்தாலஜி படங்களை பார்ப்போருக்கு இந்தப்படமும் பிடிக்கலாம் .
வெவ்வேறு சமூக பின்னணியை கொண்ட மூன்று பெண்கள் அவர்களுக்கு நேரும் பிரச்சனையை தாமாக எதிர்கொள்ளவேண்டிய சந்தர்ப்பத்தில் இருக்கிறார்கள் . அந்த சவாலை எப்படி எதிர்கொன்றார்கள் என்பதுதான் இந்தப்படம் . மூவருக்கும் உள்ள ஒற்றுமை அவர்கள் மூவரும் கர்பமாக இருக்கிறார்கள் .
ஹாவா : தி கிரேட் இந்தியன் கிட்சன் படம் பார்த்து இருப்பீர்கள் அதை போலவே ஆணாதிக்க பிடியில் இந்த சமூகத்தில் ஒரு பெண்ணின் கதையாக முதல் 30 நிமிடம் . கர்ப்பமாக இருக்கும் பெண் தனது கணவரின் தந்தை தாய்க்கு அத்தனை பணிவிடையும் செய்து , தினமும் வீட்டிற்கு வரும் உணவினர்களுக்கு கறி உணவு சமைத்து வைத்து ஒரு மெஷின் வாழ்க்ககையை நடத்துகிறார் . எதிர்பாரத ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிரச்னை அவள் நிலை என்ன என்பதே முதல் கதை .
மரியம் : செய்தி வாசிப்பாளராக இருக்கும் மரியம் தனது பொறுப்பற்ற கணவனால் தனிமைக்குள்ளாகும் சூழல் . ஒரு சவாலான சூழலில் அதனை தனியாக எப்படி எதிர்கொண்டார் என்பது இரண்டாவது .
ஆயிஷா : 18 வயது நிரம்பிய ஆயிஷாவுக்கு காதலித்து திருமணம் செய்ய விருப்பம் , ஆனால் அதற்கு இடையூறும் சிக்கல் , கைவிடப்படும் ஆயிஷா . இந்த சிக்கலில் இருந்து எப்படி மீண்டார் , அவர் எதிர்கொண்ட சவால் என்ன ? . இது மூன்றாவது .
இது மூன்றும் தனித்தனி ஷார்ட் பிலிம் போலத்தான் ஆனால் மூன்றையும் இணைத்தால் அது Hyperlink என்றானது . அப்படியென்றால் உங்களுக்கு தெரியாதா ?
ஒன்றிருக்கு ஒன்று தொடர்பில்லாத மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு கதாபாத்திரங்கள் ஒரே புள்ளியில் சந்திக்குமேயானால் அதனை Hyperlink திரைப்படங்கள் என்பார்கள் ,. இந்த முறையில் உலகத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன , பெரும்பாலும் த்ரில்லர் பாணியில் வருவபை , உலக சினிமாக்களில் இதையே ஆர்ட் Form ல் கையாண்டு இருப்பார்கள் . தமிழிலே கூட நிறைய படங்களை குறிப்பிட்டு சொல்லலாம் , வானம் , ஆயுத எழுத்து , மாநகரம் , வில் அம்பு , ஆரண்ய காண்டம் , சூப்பர் டீலக்ஸ் , இதில் பெரும் முயற்சியாக தசாவதாரம் படத்தை கூட சொல்லாம் .
ஆனால் இங்கே இந்த ஆப்கானிய திரைப்படம் வெகு சாதாரணமாக கையாளப்பட்டு இருக்கிறது . ஆக அரைமணி நேரமாக மூன்று கதைகளாக பிரிக்கப்பட்டு இறுதியில் ஒன்றாக இணைகிறது . என்னளவில் இந்த திரைப்படத்தின் முதல் கதையை தவிர மற்ற மூன்றும் அந்தளவிற்கு வெகுவாக நம்மிடம் ஒன்றவில்லை , ஆனால் கவனிக்கத்தக்கவை . முதல் கதையை மட்டும் தனிப்படமாக எடுத்திருந்தால் நிச்சயம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் , மற்ற இரண்டும் பார்க்கலாம் ஒருமுறை .
ஆனால் எகிப்து நாட்டு படமான Cairo 678 அந்த வகையில் அட்டகாசமாக படமாக்கி இருப்பார்கள் . ஒரு நகரத்தில் வசிக்கும் மூன்று வெவ்வேறு பெண்களின் தினசரி அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், ஆண்களின் மூலம் அவர்களுக்கு நேர்ந்த பிரச்னைகள் , அவர்களுக்கான நீதி என்ற கருத்தியலில் படமாக்கி இருப்பார்கள் . வெகு சிறப்பான படம் ,இந்த அட்டகாசமான படத்தை தவற விடாதீர்கள் இப்போதைக்கு Netflix ல் காண கிடைக்கிறது .
ஆப்கான் படத்தை காண விரும்புவர்களுக்கு அறிவிப்பு : , நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தால் நிச்சயமாக இலவசமாக இந்தப்படத்தை காணலாம் . SBS ON DEMAND ல் காணக்கிடைக்கிறது . இந்தியாவில் எந்த OTT யிலும் இல்லை , வருமா என்றால் தற்போது எனக்கு தெரியாது . இணையத்தில் தேடி பதிவிறக்கம் செய்வதும் கடினம் தான் , உங்களுக்கு VPN உபயோகிக்க தெரிந்தால் நீங்களும் AU கனெக்ட் செய்து பார்க்கலாம்
நன்றி விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கலாம் .
Post a Comment