Birthday Boy (2022, Panama) - Film Intro By Tamil | Suffering is not an option

தன்னுடைய 45 ஆவது  பிறந்தநாளை தனது நெருங்கிய நண்பர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாட விரும்பும் நாயகன், அங்குள்ள  யாருமே எதிர்பார்த்திட ஒரு சம்பவத்தை செய்யப்போவதாக சொல்கிறார் . அது அங்குள்ளவர்களை மிகுந்த வருத்தத்திற்குள் தள்ளுகிறது . அப்படி அவர் என்ன சொல்லியிருப்பார் , அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த திரைப்படம் . 

Birthday Boy




95 ஆவது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட பனமா நாட்டு சார்பாக தேர்வாகி இருக்கிறது . ஒரு நாட்டின் திரைப்படத்தினை பார்ப்பதற்கு முன்பு அந்தப்படம் எதை பற்றி பேச போகிறது . அவர்களுடைய கலாச்சாரமென்ன குறைந்தது ட்ரைலர் பார்த்துவிட்டு மேலோட்டமாக தெரிந்தது கொண்டுதான் பார்ப்பது வழக்கம் . ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் முடிவு வரை பார்க்க வைத்துவிட்டது இந்தப்படம் . 

வரும் திரைப்படவிழாக்களில் இந்த படத்தினை  பார்த்துக்கொள்ளலாம் .  மேற்கொண்டு சிறிய Spoilers உடன் வேண்டுவோர் தொடரவும் . 

My View திரைப்பட பார்வை : 

எதற்கும் தீர்வுண்டு இவுலகில் என பலர் சொல்ல கேட்டிருப்போம் . ஆனால் ஒரு சில விஷயங்களுக்கு தீர்விருந்திருந்தும் பலனில்லை என சொல்வார்கள் . அப்படி அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு  அதனால் அவதிப்படுவது முடியாத காரணம் என சில முடிவுகளை அவ்வபோதே மக்கள்  எடுப்பர் , இது உலகில் வசிக்கும் பலரின் இயல்பு . 

அப்படி ALS (Amyotrophic Lateral Sclerosis) லினால் பாதிக்கப்பட்ட நாயகன் . இது நரம்பு தொடர்பான பிரச்சனை உயிரிழப்பை விரைவிலோ அல்லது சிறிது மாதங்கள் அல்லது வருடங்களில் நிகழ்த்துக்கூடிய ஒன்று . புகழ்பெற்ற Stephen Hawking இதனால் பாதிக்கப்பட்டு இருந்தார் . 

சோர்வு உடல் வலி , தசை வலி  , எலும்பு , நரம்பு வலி என பல்வேறு பிரச்னைகளில் ஆரம்ப நிலையை தொட்டிருக்கும் நாயகனுக்கு  மேற்கொண்டு நாள்களை இப்படி கடத்த விரும்பவில்லை  , உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கும் நபர் ஒருவர் நாளாக நாளாக மனா ரீதியாகவும் பாதிக்கப்படுவர் ,  தன்னால்  மற்றவர்களுக்கு எந்த சங்கடமும் வந்துவிட கூடாது என அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறார் . 

பிறந்தநாள் கொண்டாதில் நண்பர்கள் மத்தியில் அறிவிக்க அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் . 


யாராக இருந்தாலும் அதற்கு ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள் , அனுமதிக்கவும் மாட்டார்கள் . ஒரு சில நாடுகளில் தனது உயிரை மாய்த்துக்கொள்ள உதவியாக இருப்பார்கள் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது  சிறை தண்டனையும் உண்டு . ஒருசில நாடுகளில் ஆதரவும் உண்டு . அவரை மீட்க வீட்டில் உள்ள சில பொருட்களை மறைத்தும் வைக்கிறார்கள் . பிறந்தநாள் கொண்டாட்ட முடிவில் என்ன ஆனது என்பதுதான் முடிவு . 


முடிவாக : 
எதன் தாக்கத்தின் அடிப்பைடயில்  இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க இயக்குனர் முடிவு செய்திருப்பார் என முழுமையாக விளங்கவில்லை , ஆனால் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் இப்படி எதாவது ஒரு சம்பவம் ஒன்று நினைவில் இருக்கும் . நம்மை சிரிக்கவும் , மகிழவும் , அழுகவும் சிந்திக்கவும் செய்துள்ளார் . 

Wide Shot ல் ஒரு சில  காட்சிகள் அவ்வளவு அழகாக இருந்தது ., தனிமையான பீச் ஹவுஸ் , நண்பர்கள் பேசி விளையாடி கொண்டாட்டம் என ஒரு இயல்பான படமாகவே நகரும் . 

நிறைய பேசி தீர்க்க வேண்டிய ஒரு விஷயம் . அதனை ஒன்றரை மணி எற படத்தில் கையாண்டதது நல்லது . 18+ கவனத்தில் கொள்க . 

இயக்குனரைப் பற்றி :

இயக்குனருக்கு இது ஐந்தாவது திரைப்படம் . இதற்கு முன்பு அவர் ஏற்கனவே ஆஸ்கருக்கு பனாமா நாட்டு சார்பாக Everybody Changes படத்தினை அனுப்பி இருக்கிறார் .  நாமினேஷன் ஆகவில்லை . 

திரைப்பட தகவல்கள் Details :
Birthday Boy 2022 ‘Cumpleañero’ Directed by Arturo Montenegro



விருதுகள் Festival & Awards :
இப்போதைக்கு சில திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டுள்ளது . தகவல்கள் இணையத்தில் கிடைக்கவில்லை . 95 ஆவது ஆஸ்காருக்கு அனுப்பி இருக்கிறார்கள் . அவர்களுக்கு  வாழ்த்துக்கள் , கடந்தமுறை யாருமே எதிர்பார்த்திடாத ஒரு பனாமா நாட்டு படம் ஷார்ட்லிஸ்ட் ஆனது குறிப்பிடத்தக்கது . 

ட்ரைலர் Trailer :


எங்கே காணலாம் , Where To Watch : 
தற்போது இந்த திரைப்படத்தினை திரைப்பட விழாக்களிலும் , ஆன்லைன் திரைப்பட விழாவிலும் . காணலாம் எந்த ஒரு OTT யிலும் இல்லை . 

நன்றி  

Post a Comment

Previous Post Next Post