2023 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் 95 ஆவது ஆஸ்கார் திரைப்பட விழாவில் சர்வதேச சிறந்த திரைப்படங்கள் பிரிவில் போட்டியிட The Irish Film & Television Academy (IFTA) வினால் Colm Bairéad’s debut feature The Quiet Girl (An Cailín Ciúin) திரைப்படம் , தேர்வு செய்யப்பட்டு உள்ளது .
அயர்லாந்து சார்பாக 2007 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் . ஆங்காங்கே இடையில் அனுப்பாமலும் இருந்துள்ளார்கள் . இதுவரை மொத்தம் 8 படங்களை அனுப்பி இருக்கிறார்கள் . இது 9 ஆவது படம் . இந்த எட்டில் ஒரே ஒருமுறை மட்டும் ஷார்ட் லிஸ்ட் பட்டியலில் வந்துள்ளார்கள் . அதுவும் ஸ்பானிஷ் படம் .
ஆஸ்கார் சர்வதேச படங்கள் பிரிவில் முதலில் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் ஒரு படத்தை பெறுவார்கள் . கிட்ட தட்ட 90 நாடுகள் படங்கள் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள் . அதில் 15 படங்களை ஷார்ட்லிஸ்ட் செய்வார்கள் , முன்பு இது குறைவாக இருந்தது இப்போ 15 , பிறகு 5 படங்களை நாமினேஷன் செய்வார்கள் . அதில் இறுதியாக ஒரு படம் வெற்றி பெரும் . அயர்லாந்து நாட்டை பொறுத்தமட்டில் இதுவரை அனுப்பிய 8 ல் ஒருமுறை மட்டுமே ஷார்ட் லிஸ்ட் ஆகி உள்ளார்கள் , அதுவும் கூட்டு தயாரிப்பில் உருவான ஸ்பானிஷ் மொழிப்படம் . ஆக எந்தவொரு ஐரிஷ் படங்களும் நாமினினேஷன் ஆகியதில்லை .
சமீபத்தில் இந்த படத்தினை பார்த்த பலர் நிச்சயம் A Quiet Girl இறுதி வரை வரலாம் அதே நேரத்தில் மற்ற படங்களை பார்த்தபின் முடிவு மாறுபடலாம் என்கிறார்கள் .
நானும் போன மாதம் பார்த்தேன் மிகவும் என்னை கவர்ந்த ஒரு திரைப்படமாக இதனை குறிப்பிட்டு சொல்லலாம் . இதே போன்ற ஏற்கனவே சில படங்களை பார்த்தாலும் நமக்கு சலிப்பை தரவில்லை . அழகான காட்சியமைப்புகள் . எனக்கு இதே போல பின்லாந்து நாட்டு படமொன்று மிகவும் பிடித்தது Mother Of Mine (2005) இவை இரண்டை பற்றியும் என்னுடைய தனிப்பட்ட பார்வையை அறிமுகத்தையும் மேற்கொண்டு Movies Museum தில் படிக்கலாம் .
சமீபத்தில் நான் பார்த்த ஒரு சில ஐரிஷ் மொழி படங்கள் எல்லாம் நன்றாக இருந்தன . இன்னும் சிலவற்றை பார்க்க வேண்டும் .
இதுவரை #Ireland ஆஸ்காருக்கு அனுப்பிய படங்கள் = 9
2007 (80th) Kings | Irish, English | Tommy Collins Not nominated
2011 (84th) As If I Am Not There | Serbo-Croatian | Juanita Wilson | Not nominated
2014 (87th) The Gift | Irish Tommy Collins | Not nominated
2015 (88th) Viva | Spanish | Paddy Breathnach | Made shortlist[8]
2017 (90th) Song of Granite | Irish | Pat Collins | Not nominated
2019 (92nd) Gaza | Arabic | Garry Keane, Andrew McConnell | Not nominated
2020 (93rd) Arracht | Irish | Tom Sullivan | Not nominated
2021 (94th) Foscadh | Irish | Seán Breathnach | Not nominated
2022 (95th) The Quiet Girl | Irish | Colm Bairéad TBD
Post a Comment