சினிமா விரும்பிகளின் பிரபலமான தளமான Letterboxd 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த Top 25 Highest Rated for first half of 2022 என்ற பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது . அந்த பட்டியல் மக்கள் கொடுத்த ரேட்டிங் அடிப்படையில் உருவானவை தான் . அதில் இடம்பெற்ற ஒரு படம்தான் இந்த அயர்லாந்து நாட்டு படம் . இப்படித்தான் இந்த திரைப்படம் எனக்கு அறிமுகமானது . நான்கிற்கு மேல் ரேட்டிங் வந்திருந்தது . ,மேற்கொண்டு அதனைப்பற்றி தேடும் பொழுதுதான் தெரிந்தது . இந்த ஆண்டில் அயர்லாந்து நாட்டு ப்ளாக்பஸ்டர் படமென்பது . நம்மூரில் ஒரு படம் ப்ளாக்பஸ்டர் ஆகிறது என்றால் அது முற்றிலும் எப்படி இருக்கும் என பெரும்பாலான உங்கள் அனைவர்க்கும் தெரிந்து இருக்கும் . ஆனால் இந்த படம் வேற மாதிரி ஒரு இயல்பான அனுபவம் தரக்கூடியது.
குழந்தைகள் அல்லது சிறுவர் சிறுமியர்கள் சம்மந்தப்பட்ட படங்களில் அவர்களை கையாளுவது பெரும் சிரமமான காரியம் . பார்க்கின்ற நமக்கு அதன் பின்புலமெல்லாம் தெரியாது . ஒரு சில படங்களை தவிர நம்மூரில் முந்திரிக்கொட்டை தனமான பேச்சாலும் அதிக பிரசிங்கி போல காட்சிப்படுத்துவதாலும் பாவம் அவர்களை meme கண்டென்ட்டுகளாக்கி விட்டார்கள் . Capernaum என்ற படத்தை கொண்டாடிய எத்தனையோ உலக சினிமா பிரியர்கள் அவர்களை அந்த குழந்தைகளை கட்டிப்பிடித்து அணைத்திட வேண்டும் என விரும்பினார்கள் . அதே போல உலக மொழிகளில் வெளிவரும் எத்தனையோ குழந்தைகள் சார்ந்த படங்களை பார்க்கையில் ஆச்சர்யப்பட செய்திருக்கிறார்கள் .
குழந்தைப்பருவம் என்பது மீண்டும் வாழ்வில் நடந்தே தீராத ஒன்று . அதை அன்றே அப்போதே அனுபவித்து விட வேண்டும் . குறிப்பிட்ட வயதை தாண்டிய பின்னர் . அடடா நான் எனது பள்ளியை மிஸ் செய்கிறேன் கல்லூரியை மிஸ் செய்கிறேன் . எனது பாட்டி ஊரை மிஸ் செய்கிறேன் . கிராமத்து வாழ்க்கையை மிஸ் செய்கிறேன் என பல ஏக்கங்கள் . சிலருக்கு எனக்கு இதெல்லாம் நடக்க கொடுத்து வைக்கவில்லை என வருத்தங்கள் . 90 குழந்தைகளுக்கு அந்த ஏக்கம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் .
அதுவே 80 குழந்தைகளை பற்றி யோசித்தது உண்டா ???
அப்படி 1980 களில் காலகட்டத்தில் தனது வீட்டிலிருந்து தூரத்து சொந்தமான ஒருவரின் வீட்டிற்கு 9 வயது சிறுமி செல்கிறார் . முதல் முறையாக அவள் பார்த்த அந்த கிராமத்து வாழ்க்கை , சந்தித்த மனிதர்கள், கண்ட காட்சிகள் , அவள் அங்கே செய்த வேலைகள் தான் இந்த திரைப்படம் . மேலோட்டமாக பார்க்கும் பொழுது இதெல்லாம் நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்து பழகியவைதான் என தோன்றலாம் . உங்களுக்கு அயர்லாந்தின் அன்றைய காலகட்ட நிகழ்வை பார்க்க விரும்பினால் நிச்சயம் இதனை பார்க்கலாம் .
அயர்லாந்து எழுத்தாளர் எழுதிய சிறுகதை ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்பட வடிவம் தான் இது . சமீபத்தில் நான் ஐந்தாறு ஐரிஷ் படங்களை பார்த்துள்ளேன் . அத்தனையும் அவர்களின் பசுமையான பரந்த நிலப்பரப்பில் நடக்கும் சாதரண கதையம்சங்கள் தான் , அன்றாடம் நீங்கள் கண்ட வாழ்வில் நடந்த சம்பவங்கள் . அதை அவர்கள் திரையில் வெகு இயல்பாக கொண்டு வந்துள்ளனர் . அந்தவகையில் நிச்சயம் இந்தப்படமும் நான் விரும்பிய உலக சினிமாக்கள் பட்டியலில் இருக்கும் .
முடிவாக
சிறுமியாக நடித்திருந்த Catherine Clinch அவ்வளவு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் . எல்லா காட்சிகளிலும் அழகு . ஒவ்வொரு காட்சிகளிலும் கேமராவின் பணி மிக சிறப்பாக கையாள பட்டு இருக்கிறது . ஆங்காங்கே ஒலிக்கும் பிண்ணனி இசையும் நன்றாக இருந்தது . 4K தரத்தில் அகன்ற திரையில் அல்லது டிவியில் பார்த்தல் காட்சிகள் இன்னும் அழகாக இருக்கும் .
நான் இதே தளத்தில் அறிமுகப்படுத்திய Mother of Mine (2005,Finland) என் மனதிற்கு மிக நெருக்கமான படமொன்றும் இருக்கிறது . ஆனால் அது போர் பின்னணியினால் பின்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டு தனது வளர்ப்பு குடும்பத்துடன் வாழ்ந்த சிறுவன் ஒருவரை பற்றியது . இதனை பார்க்கும் பொழுது இந்தப்படமும் நினைவிற்கு வந்தது .
இயக்குனரைப் பற்றி :
இயக்குனருக்கு இது முதல் படமாம். இதற்க்கு முன்பு சில ஷார்ட் பிலிம்ஸ் மற்றும் டிவி சீரீஸ் , டிவி திரைப்படம் , டாக்குமெண்டரி போன்றவற்றை இயக்கி இருக்கிறார் , ஆனால் திரையரங்கில் இதுதான் முதல் படம் . உலக சினிமா பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் . வரும் நாள்களில் கவனிக்கப்படுவார் ,
திரைப்பட தகவல்கள் Details :
விருதுகள் Festival & Awards :
முதல் முறையாக பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதினை வென்றுள்ளது . இந்த 2022 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்து ப்ளாக்பஸ்டர் லெவலில் வெற்றிபெற்று இருக்கிறது , வழக்கமாக கொஞ்சம் லேட் ஆக படத்தினை ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டி போட அனுப்பும் அயர்லாந்து காரர்கள், இந்த முறை முதல் ஆளாக இந்த படத்தை சமர்ப்பித்து இருக்கிறார்கள் . போட்டிபோடும் பிற படங்களை வைத்து இதனின் நாமினேஷனை தீர்மானிக்க முடியும் . தற்போது 95 ஆவது ஆஸ்காரில் இடம்பெற்று உள்ளது . பாப்போம் என்ன ஆகிறது என்று .
ட்ரைலர் Trailer :
திரைப்படத்தின் ட்ரைலர் காண :
எங்கே காணலாம் , Where To Watch :
இந்த திரைப்படம் தற்போது பெஸ்டிவல் Circle உள்ளது . வரக்கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் காணலாம் . இந்தியாவில் இருந்து காண தற்போது எந்த வாய்ப்பும் இல்லை மற்ற நாடுகளில் சில டிஜிட்டல் தளங்களில் வெளியாகி உள்ளது , அதனை நீங்கள் JustWatch ல் தேடி காணலாம் .
Post a Comment