Goddamned Asura (2021, Taiwan) - Film Inro By Tamil | தைவான் நாட்டு ஹைப்பர்லிங்க் படம்

இரவு நேரம் உணவை சாப்பிட வந்திருக்கும் சிலர் , திடீர்ன்னு  மக்கள் கூட்டம் அலறல் சத்தம் .  அங்குள்ளவர்கள்  பரபரவென  அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள் . கூட்டத்தில் ஒருவன்  துப்பாக்கியை வைத்து ஒவ்வொருவராக பொட்டு பொட்டுனு  சுட்டுக்கொண்டே செல்கிறான் . அதனை ஒரு ஓரமாக நின்று ஒருவன் மொபைலில்  படம்பிடித்துக் கொண்டு இருக்கிறான்  . கண் அசந்த நேரத்தில் மொபைலில் படம் பிடித்துக்கொண்டு இருந்தவனையும் சுட அப்படியே கீழே விழுந்து இறந்து   சாய்கிறான் .  இது வெறும் முதல் ஐந்துநிமிட காட்சிதான் அதற்கு பிறகு இந்த படம் பல கோணத்தில் நகர்கிறது . 

Goddamned Asura





எனக்கு இந்த லிங்கிங் கான்செப்ட் படங்கள் என்றாலே ஆர்வம் . பல குழப்பங்கள் இருந்தாலும் முடிவில் அனைவரும் சந்திக்கும் அந்த ஒற்றைப்புள்ளி , அல்லது எதாவது ஒரு ஏற்றுக்கொள்ளும்படியான காரணத்தினால் அதனை ரசிக்க வைத்து விடுவார்கள் . இங்கே ஒரு ஆறு முக்கிய காதாபாத்திரங்கள் அவர்கள் ஒன்றுக்கு ஒன்று எப்படி தொடர்பு செய்தார்கள் . அவர்களின் பங்கு என்ன ? எதற்காக இதெல்லாம் என ஒவ்வொரு சேப்டரிலும் சிறிது சிறிதாக விளங்கும் . மொத்தம் 3 சேப்டர் , அதில் மூன்றாவது சுவாரசியம் . முதல் இரண்டும் கொஞ்சம் பொறுமை . 

அடுத்ததடுத்து நகரும் பொழுது தான் நம்மால் புரிந்துகொள்ள முடியும் . பிறகு அவர்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்க்கும் செய்த நியாயம் புரியம் . ஒரு சில விஷயங்கள் முழுமை  பெறாமலும் போனதாக உணர்வோம் . Bluray DVD வாங்கினால் வெட்டப்பட்ட காட்சிகளையும் சேர்த்தி பார்க்க முடியும். 


My View திரைப்பட பார்வை :

இதுவரை நான் பார்த்த தாய்வான் நாட்டு படங்களோடு இதனை தொடர்பு படுத்தி பார்த்தல் முற்றிலும் மாறுபட்ட ஒரு ஸ்க்ரீன் பிளே . செய்தி தாள்களில் வெளியான சில செய்திகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம்தான் இது . மூன்று சேப்டராக பிரித்து அதில் ஹைப்பர்லிங்க் கான்செப்ட் சேர்த்து , முன் பின் கதை சொல்லல், ஆங்காங்கே காமிக் வடிவிலும்  சொல்லல்  முறை , பிறகு டைரி படம் போல எழுதியது நடப்பது , நடந்ததை எழுதியது , rashomon , விருமாண்டி போல வெவ்வேறு கதாபாத்திரங்களில் பார்வையில் , Game nd  ரியாலிட்டி என பல்வேறு ஐடியாக்களை பயன்படுத்தி  ஒண்ணேமுக்கால்மணி நேரம் எடுத்திருப்பது சிறப்பு .  இதுபோன்ற சிக்கலான படங்களை உருவாக்குவதில் பெயர்போனவர் இந்த இயக்குனர் என்று சொல்கிறார்கள் .  அவர் சில குறும்படங்களையும் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் 4 படங்களையும் இயக்கி உள்ளார் . 

மேலே சொன்னதில் ஒருவிசயத்தை மட்டுமே உருப்படியாக எடுத்து செய்வது கொஞ்சம் சிரமமான காரியம் . கொஞ்சம் தட்டினாலும் சுதப்பிவிடக்கூடிய நிலைமை உண்டு . அப்படி இருக்கும் பட்சத்தில் மனிதனின் எண்ணங்கள் , அவனின் யோசனை என பல கோணத்தில் இதனை தேர்வு செய்துள்ளார்கள் . இந்த படத்தை தேர்வு செய்வதற்கு முன்பு மொத்தம் 11 படங்களை தைவான் குழு பட்டியல் வைத்து இருந்தது . முடிவில் இது தேர்வு செய்யப்பட்டது . 

இதனை நான் ஒவ்வொரு பற்றியும் மேலோட்டமாகவோ அல்லது விரிவாகவோ சொன்னால் நீங்கள் படம் பார்க்கும்  நேரம் வீண் தான் .. ஒரு நேர்கோட்டில் ஒரே நூலை பிடித்துக்கொண்டு முடிவு வரை செல்லும் கதை என்றால் இதுதான் இப்படித்தான் என முடித்து விடலாம் . ஆகாயல் இதன் முன்னோட்டம் உங்களுக்கு உதவியாக இருக்கும் . அதனை இணைத்துள்ளேன் . 

இதே நம்மூரில் இப்படி ஒரு படம் வந்து இருந்தால் இந்த காட்சி தேவை இல்லை இதனை வெட்டி இருக்கலாம் என இயக்குனருக்கு ஐடியா சொல்ல கிளம்பி விடுவார்கள் சினிமா பிரியர்கள் . இந்த படத்தில் எல்லா காட்சிக்கும் எதாவது ஒரு சிறிய தொடர்பை வைத்துள்ளார்கள் அதற்காகவே ஒருமுறை பார்க்கலாம். குறிப்பு : இது ஆகசிறந்த படமில்லை  . 

முடிவாக : 



Imdb , போஸ்டர் , மற்ற இதர தளங்களில் ஹாரர் என்ற வார்த்தையை கண்டு ஏமாந்து போகாதீர்கள் , துளியளவும் ஹாரர் இல்லை  . இது ஒரு க்ரைம் ட்ராமா மிஸ்டரி என்று வேணா சொல்லலாம். ஆங்காங்கே மென் சோக காதலும் உண்டு  .  இது ஒரு ஆகச்சிறந்த படமாகவும் சொல்ல முடியவில்லை , அதே நேரத்தில் சுமாரான படம் என்றும் சொல்ல முடியவில்லை . ஆனால் நேரத்தை வீண் செய்து , குறிப்பாக  நேரமிருக்கும் பட்சத்த்தில் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம் . 

இயக்குனரைப் பற்றி :

இயக்குனருக்கு இது நான்காவது திரைப்படம் . இதனை பார்த்த பிறகு மற்ற படங்களையும்  பார்க்க உள்ளேன் . எப்படி அவருக்கு இந்த படத்தை இப்படி உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கும் என தேடினால் இது எல்லாம் நிகழ்ந்த , செய்தி தாள்களில் வெளியான சில சம்பவங்களின் கோர்வை கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதை என்கிறார் . 

திரைப்பட தகவல்கள் Details :
Goddamned Asura 2021 ‘該死的阿修羅’ Directed by Yi-an Lou



விருதுகள் Festival & Awards : 

சமீபத்தில் இந்த திரைப்படத்தினை 95 ஆவது ஆஸ்காருக்கு தைவான் நாட்டு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள் . கடைசியாக அவர்கள் அனுப்பிய மூன்று படங்களுமே நன்றாக இருந்திருக்கிறது . அதிலும் The Sun அருமை .  மற்றும் தைவான் நாட்டில் நடக்கும்  Taipei Film Festival, Golden Horse போன்ற திரைப்பட விழாக்களில் முக்கியமான அத்தனை விருதுகளையும் வாங்கியும் நாமினேஷன் பட்டியலிலும் வந்துள்ளார்கள் . மற்ற படங்களை பொறுத்து ஆஸ்காரில் ஷார்ட் லிஸ்ட் ஆகிறதா என பொறுத்திருந்து பாப்போம் . 

ட்ரைலர் Trailer :




எங்கே காணலாம், Where To Watch : 


இந்த திரைப்படத்தின் Bluray Disc Offcial ஆக வெளிவந்துள்ளது . மேலும் தைவான் நாட்டு OTT தளமான catchplay விலும்  காணலாம் .

Post a Comment

Previous Post Next Post