After Lucia (2012, Mexico) - Film Intro By Tamil | கொடுமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அலெஜான்ட்ரா

நம் எல்லோரும் அலெஜான்ட்ரா வை முழுமையாக  உணர முடியும் ! 

உலகம் முழுவதிலும் பள்ளிப்படிப்பில் இருக்கும் ஒரு பொது சமூக பிரச்சனை என்னவென்றால் ஒருவரை ஒருவர் (Bullying) கொடுமை படுத்துதல் தான் . அது தொடங்கும் துவக்கப்புள்ளி சரியாக தெரியாவிட்டாலும் பள்ளிகளில் தான் பெரும்பாலோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் . இதனை பற்றி ஏற்கனவே பெல்ஜியம் நாட்டு படமான Playground , மற்றும் கசகஸ்தான் நாட்டு படமான Harmony Lesson போன்ற படங்களில் பார்த்து அது தொடர்பாக எழுதி இருந்தாலும் . இந்த மெக்ஸிகன் படம் கொடுத்த தாக்கம் வலிமையாக இருந்தது . 




ஒவ்வொருநாடுகளும் தனித்தனியேன இதற்கே சட்டதிட்டங்கள் வகுத்தாலும்  இன்றளவும் அது எதோ ஒரு விதத்தில் மனதளவிலோ உடலளவிலோ  அன்றாடம்  பாதிப்புக்குள்ளாக்குகிறது . இந்த திரைப்படம் அப்படிப்பட்ட ஒரு பிரச்னையை படமாக்கியுள்ளது . 17 வயது நிரம்பிய பள்ளிப்பருவத்தில் இருக்கும் அலெஜான்ட்ரா கடுமையான வன்முறை மற்றும் கொடுமைப்படுத்துதலுக்கு உள்ளாகிறார் . அவரை பற்றிய படம் தான் ஆப்ட்டர் லூசியா . 

கான்ஸ் திரைப்பட விழாவில் Un Certain regard ஐ வென்றுள்ளது , இந்த படத்தின் போஸ்டரை ஹிந்தி படம் Thappad ல் சுட்டிருப்பார்கள்  . மற்றபடி இரண்டுமே வெவ்வேற படங்கள் . 

கொடுமைப்படுத்துதல் என்றால் என்ன? விளக்குக என யாரும் கேட்டிட முடியாது , நிச்சயம் அதனை நாம் கடந்து வந்திருப்போம் . உதாரணத்திற்கு பணக்கார குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் அந்த ஊர் திருமண விழா ஒன்றில் 17 வயது சிறுமையை பாலியல் துன்புறுத்தல் செய்து விடுகிறான் . ஆனால் அந்த ஊரே அந்த சிறுவன் அப்படிப்பட்டவனல்ல நல்ல பைய்யன் என இந்த சிறுமியின் குடும்பத்திற்கு எதிராக திரும்பும் . அதைத்தான் ஸ்வீடன் நாட்டு படமான Flocken ன் கண்டு இருப்பீர்கள் . 

அப்படி அதிகார வர்க்கம் படைத்த ஒருவன் தன் அதிகாரத்தை கையில்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்திடலாம்  எவன் எப்படிப்போனால் எனக்கென்ன என ஒரு செயலை செய்திவிடுகிறான் . 

பள்ளி மாணவர்கள் ஒருவன் வசதிபடைத்த குடும்பத்தை சார்ந்தவன். ஒரு நாள் பார்ட்டியில் தனது  தன சக பள்ளி மாணவியான அலெஜான்ட்ரா வை ரூமிற்கு அழைத்துச்சென்று இருவரும் உறவில் இருப்பதை செல்போனில் படம் பிடித்து  இணையத்தில் ஏற்றி விடுகிறான் . அடுத்த நாள் பள்ளி முழுவதும் அந்த வீடியோ பரவுகிறது . இதுவரை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் இருந்த அலெஜான்ட்ரா விற்கு நீங்கள் யாருமே எதிர்பார்த்திருக்க முடியாத பல பல தொந்தரவுகளை கொடுக்கிறார்கள் . ஒருகட்டத்திற்கு மேல்  கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவி என்ன ஆனார் என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும் . 

அப்பாக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் , குறிப்பாக பெண்களை பெற்ற 
அப்பாக்கள் . 

ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட எதோ சில காரணங்களை மறக்க தான் தங்களை எப்போதுமே  பிசியாக வைத்துக்கொள்கிறார்கள் . அப்படி ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் தந்தையும் மகளும் எதையும் பெரிதாக பகிர்ந்து கொள்வது இல்லை . மனைவின் கார் விபத்திற்கு பிறகு இருவரும் மெக்சிகோ நகரத்திற்கு இடம்பெயர்கிறார்கள் , அங்கே பெரிய ஹோட்டல் ஒன்றில் தலைமை பொறுப்பில் செஃப் ஆக இருக்கிறார் தந்தை . மகளுக்கு புதிய பள்ளியில் சேர்க்க செல்லும் பொது அங்கே புதிதாக இணைபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் போதை மருந்து உட்கொண்டார்களா போன்ற சோதனைகள் செய்யப்படுகிறது . பரிசோதனையில் இவள்  புகைபிடித்திருப்பது தெரியவருகிறது .  தந்தை அறிவுரை சொல்லி பள்ளியில் ஒருவழியாக சேர்க்கிறார்கள் . 

புதிய ஊர் புதிய வேலை புதிய பள்ளி வாழ்க்கை நன்றாக தொடங்கும் சமயத்தில் அவளுக்கு நேரும் சில பிரச்சனைகள் . இதற்கு மேல் எதையும் விளக்கமாக சொல்ல விரும்பவில்லை , அவசியம் பாருங்கள் நீங்கள் யூகிக்கவே முடியாத அளவில் தான் திரைப்படம் இருக்கும் .. 




அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம் . 18+ . அலெஜான்ட்ரா வாக நடித்த பெண்ணின் நடிப்பு மிக சிறப்பு . 

நன்றி 

Post a Comment

Previous Post Next Post