சமீபத்தில் நான் பார்த்த கிரீஸ் நாட்டு படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நினைவுகளை என்னிடம் விட்டு சென்றிருக்கிறது . "Magnetic Field " என்றொரு திரைப்படத்தை ஆஸ்காருக்கு அவர்கள் நாட்டு சார்பில் கடந்த ஆண்டு அனுப்பி இருந்தார்கள் . அதில் முன் பின் அறிமுகமில்லாத இரண்டு Stranger கள் சந்தித்துக்கொள்கிறார்கள் . தனது அத்தை இறந்த பிறகு அவரின் எலும்புகளையும் சாம்பலையும் அவர் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் புதைக்க முயற்சி செய்யும் ஒருவரும் அங்கே அவருக்கு உதவி செய்யும் ஒரு பெண்ணையும் சுற்றித்தான் அந்தப்படம் நகரும் .
அதுமாதிரி இங்கே 39 வயதான விமான பணிப்பெண் வனினா வழக்கம் போல இன்றைய பயணத்திற்கு தயாராகிக்கொண்டு இருக்கிறாள் . அங்கே பயணிக்க வந்துள்ள ஒரு குடும்பத்தில் சிறுவன் ஒருவன் வனினாவை பார்த்து சிரிக்கிறான் . அதற்கு காரணம் அவள் பற்களில் ஒட்டியிருக்கும் காரை மற்றும் ப்ரெசஸ் தான் . தனது சக பணிப்பெண்ணுடன் பேசிக்கொண்டே இருக்கையில் , இன்று நீங்கள் வேலை செய்ய வேண்டாம் என சொல்ல அவர் அதனை கேர்க்கவில்லை . ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் வனினா இதற்கெல்லாம் காரணம் என் அம்மா தான் அவள் என்னை சரியாக கவனித்துக்கொண்டு இருந்தால் எனக்கு இப்படியெல்லாம் ஆயிருக்காது , என புலம்பிக்கொண்டு இருக்கிறாள் . பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர் தான் அவர் .
நீங்கள் யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாத நிலையில் தான் வனினா அங்கே உங்களோடு பயணித்துக் கொண்டு இருக்கிறாள் .
நான் மேற்சொன்ன "Magnetic Fields " ற்கும் இந்த குறும்படத்திற்கும் தொடர்பு இருக்கிறது பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் , நல்ல குறும்படம் .
பெங்களூரில் நெருங்கிய நண்பரின் நண்பர்கள் சிலர் ஏர்போர்ட்டிலும் , ஹோட்டல்களிலும் உயரிய பொறுப்பில் இருக்கின்றனர் . சில நேரத்தில் அவர்களை சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும் . ஒருமுறை விமான பணிப்பெண் ஒருவரிடம் பேசுகையில் நீங்கள் எப்படி அன்றாட நாள்களில் சந்திப்பவர்களை எதிர்கொள்கிறீர்கள் ஜாலியான வாழ்க்கை , பறந்து கொண்டே இருக்கலாம் , எப்போதும் முகத்தில் புன்னகை . புது புது மனிதர்கள் , என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அவர்களிடத்தில் ஒரு மென்சோகமான வருத்தமான நிலையை சொல்லக்கேட்டு உணர்ந்தேன் .
அந்த பெண் சொன்ன அந்த சம்பவமும் இந்த குறும்படமும் எனக்கு கொஞ்சம் பொருந்தச்செய்தன .
உண்மையில் இங்கே எல்லோருக்கும் பிரச்னை இருக்கிறது , அது அன்பை தேடுவதில் தொடங்கி , பல ஏக்கத்தில் வந்து முடிந்திருக்கிறது . அப்படி அந்த பெண் அங்கே சொன்ன ஒரு நிகழ்வு எனக்கு இந்த குறும்படம் பார்க்கும் பொது கொஞ்சம் உணர்ந்துகொள்ள முடிந்தது . இனி யாரிடத்திலும் உங்களுக்கென்ன கவலை ஜாலியான வாழ்க்கை போன்றவற்றை சொல்லக்கூடாது என என்னிடம் முடிவெடுத்துக்கொண்டேன் . இன்றுவரை யாரிடமும் ஜாலியான வாழ்க்கை என சொல்வதில்லை .
இந்த குறும்படம் locarno திரைப்படவிழாவில் முதன் முறையாக திரையிடப்பது . இன்னும் மக்கள் பார்வைக்கு வரவில்லை , நான் Virtual Festival லில் பார்த்தேன் , தற்போது Expire ஆகி விட்டது , Vimeo அல்லது Youtube ல் வந்தால் தெரியப்படுத்துகிறேன் .
சில திரைப்படவிழாக்களில் கலந்துகொண்டுள்ளது , Toranto மற்றும் Athens திரைப்படவிழாக்களில் சிறந்த Performance பெண் கதாபாத்திரத்திற்காகவும் நல்ல குறும்படத்திற்காகவும் வென்றுள்ளது . அந்த காதாபாத்திரத்தை ஏற்று நடித்த Lena Papaligoura சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் .
நன்றி
Post a Comment