The Wonderful Flight (2015, Mongolia ) - Short Film Intro By Tamil | மறக்கமுடியாத கடைசிப் பயணம்

8 வயது நிரம்பத்தக்க இருக்கும் தனது சகோதரனுக்கு தீடீரென காது கேற்காமல் போகிறது , இசையில் ஆர்வமுள்ள இசைப்பயிலும் மாணவராக இருக்கிறார் அவர்  . இதை தெரிந்துகொண்ட தாய்  அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில்  இவரின் பிரச்சனையை தீர்க்க வளர்ந்த நாடுகளில் தான் வசதி உள்ளது இங்கே அதற்கு வாய்ப்பில்லை என்கிறார்  மருத்துவர் .  வளர்ந்த நாடுகள் என்றால் என்ன என கேற்கும் அண்ணனுக்கு அமெரிக்கா  என பதில் தருகிறார் . 






ஆசிரியராக பணிபுரியும் தாய் வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பிவிட , இழந்த செவித்திறனை மீண்டும் கொண்டுவர அண்ணனும் அவரது நண்பர்களும் சில முயற்சிகளை கையில் எடுக்கிறார்கள் . அதிகமா சத்தத்தை எழுப்புகிறார்கள் , வெடி வைக்கிறார்கள் . காரின் முன் தலைவலியை வைத்து ஹாரன் சத்தத்தை அடிக்கிறார்கள்  ஒன்றும் பலனில்லை . இறுதியில் என்ன ஆனது , சகோதரனுக்கு செவி திறன் வந்ததா ? குணப்படுத்த முடிந்ததா ? என்பதுதான் ஒரு குறும்படம் .. 

Beaks போல ஒரு ஜாலியான குறும்படமாக நகரும் என பார்த்தேன் . 
முடிவில் நீங்கள் யாரும் கொஞ்சம் கூட யூகிக்க முடியாத ஆச்சர்யம் அதிர்ச்சி . ! 
சரி நேரமிருப்பவர்கள் ஒரு பதினைந்து நிமிடம் அந்த குறும்படத்தை  பார்த்துவிட்டு மேற்படி படிக்கவும் ஸ்பாய்லர் அலர்ட் . 




உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டும் , இப்படி நடந்திருக்கலாம் என ஒரு யூகம் தான் இந்த குறும்படம் . 

இத பார்த்துக்கொண்டிருக்கும் போதே அதெப்படியடா சாத்தியப்படும் என்ற கேள்விகளோடு தான் பார்த்தேன் . மங்கோலிய தலைநகரில் ராணுவ விமானப்படை விமானத்தின் சக்கர பகுதியில் எப்படி இவர்கள் சென்றிருப்பார்கள் , அவ்வளவு எளிதில் இப்படி திசை திருப்பிவிட முடியுமா ? இது எப்படி நடந்திருக்கும் போன்றவைக்கு போதிய தகவல்கள் நான் தேடியவரை கிடைக்கவே இல்லை  . 


1996 ஆம் ஆண்டு மங்கோலிய சிறுவர்கள் இரண்டு பேர் அமெரிக்க விமானப்படை விமானத்தில் கிட்ட தட்ட ஐந்து மணி நேரத்திற்குள் மேல் பயணம் செய்து  ஒருவர் இறந்தும் மற்றொருவர் உயிருக்கு போராடிக்கொண்டு மீற்றதும் உண்மை சம்பவம் . முடிவில் இருவரும் இறந்தனர்  .  ஆனால் அவர்கள் எப்படி அதில் வந்தார்கள் என்பதெல்லாம் இன்றுவரை தெரிந்துகொள்ள முடியாத விஷயம் . அவர்களின் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம் தான் இது .  

மங்கோலியாவின் சில நல்ல படங்களையும் Feel Good படங்களையும் பார்த்துள்ளேன் , இது கொஞ்சம் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது ..

நன்றி 


Post a Comment

Previous Post Next Post