Dwelling Among the Gods (2024) Serbia | Afghanistan – இறந்த சகோதரனை புதைக்க நடந்த ஒரு போராட்டம்

Afghanistan-ல போர் காரணமாக “இங்கே இருந்தால் உயிர் போகும்”ன்னு உணர்ந்து பயணப்படும் ஆப்கானிய பெண்ணின் குடும்பம்  , அங்கிருந்து செர்பியா வந்து ஜெர்மனி போகிறார்கள் , தனக்கு முன்பே சென்ற சகோதரன் நீரில் மூழ்கி இறந்த தகவல் ஒரு இக்கட்டான சூழலில் இந்த பெண்ணை கொண்டு நிறுத்துகிறது , குடும்பமா? சகோதரனா? என்ன செய்வது? 


நாள்தோறும் refugee பற்றிய செய்திகள் வருகிறது.  இங்கிருந்து வந்தனர் , இப்படி ஆனது , இத்தனை பேர் ஆற்றில் மூழ்கினர், இத்தனை பேர் கடலில் மூழ்கினர், இத்தனை இறந்தனர் அடையாளம் தெரியாதோர் ஏராளம் ,  அதுபோல இறந்த தன்னுடைய சகோதரன் உடலை புதைக்க , அதாவது அவன் முழு அடையாளத்தோடு தகுந்த ஆதாரங்களோடு புதைக்க போராடும் ஒரு பெண்ணின் பயணம் தான் இந்த படம். அவள் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிரச்னைகள் , சிஸ்டெம் கேற்கும் கேள்விகள் முடிவென்ன என்பதே இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவானது.


உங்களுக்கு தெரியும் Refugee ன்னா அகதி உயிர் ஆபத்து காரணமாக, தன் நாட்டை விட்டு வெளியே ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்களை சொல்வாங்க, குறிப்பா உயிருக்கு ஆபத்து இருக்கலாம்: போர் இன / மத / சமூக துன்புறுத்தல் அரசியல் அடக்குமுறை , நிலையான ஆச்சியின்மை , உயிருக்கு நேரடியான அச்சுறுத்தல் இப்படி பல காரணத்துனால வேற நாட்டுக்கு குடியேறுவது , இவர்கள் சார்ந்த எத்தனையோ படங்கள் இருக்கு , சட்டத்திற்கு புறம்பான முறையில் வருபவர்கள் சார்ந்த படங்களும் இடையிடையே அவர்கள் தங்கி இருக்கும் படங்களும் டாக்குமெண்டரிகளும் நிறையவே உண்டு.


ஒரு இளம் Afghan பெண். மூன்று குழந்தைகள். அவளுடைய கணவன் மற்றும்  அவள் மேற்கொள்ளும் ஒரு பயணம். குறிப்பாக ஒரு நெருங்கிய இழப்பு. ஆம் அவளுடைய இளைய சகோதரன் மூன்று வாரங்களுக்கு முன் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற தகவல் கிடைக்கிறது 

அந்த “இறந்திருக்கலாம் ” என்ற uncertainty-யிலிருந்தே இந்த படத்தின் உண்மையான துயரம் தொடங்குகிறது. இறந்தது அவன்தானா என்பதை உறுதி படுத்துவதற்க்கே அவர்கள் சில முயற்சிகளை கையில் எடுக்க வேண்டும் , ஆமாம் அதைத்தான் அந்த நாட்டோட சிஸ்டம் சொல்லுதாம் , இப்போ இறந்தவரின் உடலை பார்க்க வேண்டுமா ? DNA டெஸ்ட் வேண்டும், அதுவும் அக்காவை விட தந்தையுடையது வேண்டும்   அவரின் தந்தை ஆப்கானில் இருக்கிறார். அங்கோ போர் நடக்கிறது. இந்த சூழலில் அது எடுத்து வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விடும் , அங்குள்ளவர்கள் நாங்களே அடையாளப்படுத்த முடியாதவர்கள் பட்டியலில் புதைத்து விடுகிறோம் என்கிறார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து   இதற்கு பிறகு அவள் என்ன மாதிரியான முயற்சிகளை கையில் எடுத்தால் தனது சகோதரனை அவன் பெயரோடு  அடக்கம் செய்தார்களா என்பதே இந்த திரைப்படம்.


என் சகோதரனை பெயருடன் புதைக்க விடுங்கள். என அவள் முயற்சி என்ன ஆனது ?” ஒரு மனிதன்: நாடில்லாமல் ஆவணமில்லாமல் அடையாளமில்லாமல் இறந்துவிட்டால், அவனுக்கு: பெயர் கூட தேவையில்லையா? Dwelling Among the Gods இந்த கேள்விக்கு முழுமையான பதிலை சொல்லவில்லை. ஆனால் அதை நம்மிடம் விட்டு விடுகிறது. 

** ஸ்பாய்லர்ஸ் **

இதன் மையம் ஒரு உடலை  புதைப்பது மட்டுமல்ல , ஒரு பெயர் இந்த படம் சொல்லும் கதை மிகவும் எளிமையாகத் தோன்றலாம்: “ஒரு பெண், தன் சகோதரனின் உடலை அடையாளம் கண்டு, அவனை பெயருடன் புதைக்க போராடுகிறாள்.” ஆனால் இந்த எளிய வாக்கியத்துக்குள் மறைந்திருப்பது ஒரு கொடூரமான உண்மை. ஒரு மனிதன் இறந்த பிறகும், அவனை “அவன் தான்” என்று நிரூபிக்க வேண்டிய நிலை. 

ஒரு கட்டத்தில் கணவனின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் அங்கிருந்து புறப்பட , கணவனும்  இவள் மேல் கோபப்படுகிறார் refugee camp-ல நீண்ட நாட்கள் தங்க முடியாது uncertainty அதிகம் குழந்தைகளின் எதிர்காலம் அதனால், சகோதரனுக்கான burial முடிந்ததும், குடும்பம்  Germany-க்கு செல்லும் முயற்சியை மீண்டும் எடுக்கலாம் என்கிறாள்.

இரண்டு உலகங்கள் – இரண்டு வலிகள் இந்த படம் ஒரே பக்கம் மட்டும் நமக்கு காட்டுகிறது  ஒருபுறம்: Europe paperwork rules borders அந்த பெண் போரட்டம் இன்னொரு புறம்: Afghanistan இன்னும் நடக்கும் போர் ஒரு தந்தையின் helplessness அந்த தந்தை: தன் மகனை மண்ணில் புதைக்க கூட நேரில் வர முடியாத நிலை தொலைபேசியில் மட்டும் துயரம் இந்த பக்கத்தை தனியாகவே ஒரு படமாகவே எடுக்கலாம் . 


John Doe என்ற பெயரின் பயங்கரம் இந்த உலகில் இதுவரை எத்தனையோ  பேர் John Doe அல்லது Jane Doe என்ற பெயரில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை யாராலும் சரியாகக் கணக்கிட முடியாது. அவர்கள் எல்லாருக்கும்: ஒரு பெயர் இருந்திருக்கும் ஒரு குடும்பம் இருந்திருக்கும்  ஒரு கனவு இருந்திருக்கும் , எத்தனை யோ நினைவுகள்  ஆனால் இறுதியில்: ஒரு எண்ணாக ஒரு unknown body-ஆ ஒரு unmarked grave-ஆ அந்த எண்ணிக்கையில் இன்னொருவராக இருந்தா எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அந்த இளைஞன் இந்த படத்தில் எங்கும் வர மாட்டான் எந்த ஒரு  பிளாஸ்ஷ்பேக் காட்சிகளும்  இல்லை , ஆனால் அவரை படம் முழுக்க உணர முடிகிறது.


அந்த DNA sample வருவது: ஒரு போர் நடக்கும் நாட்டிலிருந்து communication சிக்கல்களுடன் delay, anxiety, fear-உடன் அந்த sample வந்த பிறகே system சொல்கிறது இன்னுமொருமுறை எடுக்க வேண்டும் , அடக்கடவுளே ! அந்த இரண்டாவது முறைக்கு ஒப்புக்கொள்ள மேலும் பிரச்னை , கணவனோ சண்டை செய்கிறான் , முடிவில் மீண்டுமொரு முறை எடுக்க  ஒப்புக்கொள்கிறது: “ஆம். இவன் அவளுடைய சகோதரன் தான்.” என நிரூபிக்க மீண்டுமொருமுறை , அந்த சிஸ்டம் அந்த  ஒரு காகிதம் சொன்ன பிறகே ஒப்புக்கொள்ளும் ஆகையால். 



Refugees வாழ்க்கை அவர்கள் ஒன்றும் வேறு மனிதர்கள் இல்லை வேறு இனங்கள் இல்லை Migration என்பது மனித வரலாற்றின் ஒரு பகுதி. நாம் settled-ஆ வாழ்கிறோம் என்பதே ஒரு accident. இந்த படம் easy watch அல்ல இந்த படம் entertain செய்யாது . உங்களை Distract செய்யாது . ஆனால்: honest-ஆ இருக்கும் sincere-ஆ இருக்கும் பார்த்த பிறகு மனசை விட்டு போக மறுக்கும் படம் முடிவு: ஒரு பெயரின் மதிப்பு இந்த உலகில்: ஒரு birth certificate ஒரு passport ஒரு ID card இவை இல்லாமல் வாழ முடியும். ஆனால்: ஒரு பெயர் இல்லாமல் ஒரு உறவு இல்லாமல் ஒரு மரியாதை இல்லாமல் இறப்பது மிகப் பெரிய துயரம். Dwelling Among the Gods ஒரு மனிதனுக்கு பெயர் உடன் புதைக்க போராடும் பெண்ணில் முயற்சி  என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அமைதியாக சொல்கிறது , பலபேரின் இழப்புகளை  ஆழமாகச் சொல்லும் படம். Final Thought இது refugee film அல்ல. இது political film அல்ல. இது ஒரு சகோதரி தன் சகோதரனுக்காக செய்த கடைசி போராட்டம். அந்த போராட்டம் நம்மை பார்க்க  வைக்கிறது.


Making எனக்கு இந்த படம் பார்க்கும் போதே  நிஜமாகத் தெரிந்தது, கூடவே நம்மையும் பயணம் செய்ய வைத்தது . இந்த படத்தின் making மிகவும் restrained. தேவையில்லாத காட்சிகள் இல்லை  Music melodramatic  இல்லை இந்த எல்லாம் சேர்ந்து ஒரு docu drama போல உண்மையான காட்சிகளை கொடுப்பதற்கு இணையாக இருந்தது. அதனால் தான் இந்த படம் “cinema” மாதிரி தெரியாமல் “நிஜம்” மாதிரி எனக்கு தெரிகிறது. 


Fereshteh Hosseini இந்த படத்தில் நடித்த அந்த ஆப்கான் பெண் ஏற்கனவே இவங்கள சில படங்களில் பார்த்துள்ளேன் . Rona, Azim’s Mother 2018 மற்றும் Yalda 2019 வெகு இயல்பான உண்மைக்கு நிகரான காட்சிகள்.
 இப்போதைக்கு இந்த திரைப்படம் பெஸ்டிவல் கிடைத்தால் பார்க்கலாம். Public எங்கும் வெளியாகவில்லை, நான் Festival Private Scr ல் பார்த்தேன். 


பல நாட்களுக்கு முன்பு பார்த்த ஒரு படம் நியாபகம் வந்தது நேரமிருப்பவர்கள் அவசியம் பாருங்கள் .  
அதை பற்றி இங்கே எழுதி இருக்கிறேன் பாருங்கள்..

Post a Comment

Previous Post Next Post