Sweet Tooth 2023 Short Film Intro By Tamil | ஒரு விபரீத விளையாட்டு

எட்டு வயது நிரம்பிய சிறுமி தனது அழகுக்கலை நிபுணரான தாயுடன் அன்றைய நாளில் ஒரு பணக்கார வீட்டிற்கு வேலைக்காக செல்கிறாள் . இருவரும் அறிமுகமாகி அம்மா தனது பணியை செய்ய ஆரம்பிக்க சிறுமியை அங்குள்ள குழந்தைகள் விளையாடும் அறைக்கு அழைத்து செல்கின்றனர் . அங்கே ஏற்கனவே மூன்று சிறுமிகள் விளையாடிக்கொண்டு இருக்கின்றனர் . ஒரு விபரீத விளையாட்டு துவங்க அங்கே தோற்றுவிட்டால் Tooth ஐ பந்தயம் கட்டி ஆட வேண்டும் , போட்டியில் பங்குபெற பணம் இல்லாததால் ஏற்கனவே விழும் நிலையில் ஆடிக்கொண்டிருந்த முதல் பல்லை கொடுத்து விளையாட்டில் கலந்துகொள்கிறாள் சிறுமி . வென்றால் 30 யூரோ தோற்றால் பல்லை பிடுங்குவார்கள் .




Sweet Tooth 2023 ‘Les Dents du bonheur’ Directed by Joséphine Darcy-Hopkins

அங்கே பணிக்கு சென்ற அம்மாவிற்கு 20 யூரோ தான் சம்பளம் பேசுவார்கள் என நினைக்கிறன் . சரி இதில் சிறுமி தோல்வியை சந்திக்க மீண்டும் இரண்டாவது பல்லை வலுக்கட்டாயமாக பிடுங்க முடிவில் அங்கே என்ன ஆனது வெற்றி பெற்று 30 யூரோ வை வென்றாரா ? இல்லையா அங்கே என்ன அது என்பது இந்த குறும்படம்.
ஒரு வித்தியாசமான அதே நேரத்தில் சமத்துவம் பாகுபாடு Bullying குறித்த ஒரு குறும்படம். சமீபத்தில் பார்த்ததில் இது சிறப்பு . இந்தியாவில் எங்கும் காண கிடைக்காது பிரான்சில் உள்ளவர்கள் Arte தளத்தில் பார்வையிடலாம்.

Post a Comment

Previous Post Next Post