Save Sandra (2021, Flemish) / Belgium / Jan Verheyen, Lien Willaert உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நோய்களுக்கு எதிராக போராடுவது தான் பெரும் பிரச்னை . புற்றுநோய், குடல் தொடர்பான நோய்கள், மூளை, உடல் தசைகள் சம்மந்தப்பட்ட ,இதயம் இன்ன பிற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த நவீன உலகில் பெரும் வளர்ச்சியான மருத்துவத்தின் ஒரு குறிப்பிட்ட MLD என்ற அரிய தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகளின் மருந்துக்காக போராடும் ஒரு குடும்பத்தை பற்றிய கதை தான் இந்த திரைப்படம் . மருந்துகளை தேடி மக்களின் போராட்டமும் நிறையவே உண்டு .
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசுகிறது . 6 வயது குழந்தை சாண்ட்ரா பக்கவாதம் இடது காலில் வலி , மற்றும் மூளை தொடர்பான மெட்டாக்ரோமாடிக் லுகோடிஸ்ட்ரோபி (எம்எல்டி) பாதிக்கப்பட்டு இருக்கிறாள் . அவளுக்கு தேவையான மருந்தின் ஒரு டோசின் தொகை கிட்ட தட்ட 15000 ஈரோ வரும் என்கிறார்கள் . ஆனால் அவரின் குடும்பத்தால் இந்த தொகையை நிச்சயம் ஏற்பாடு செய்ய இயலாது . இந்த செய்தியை அறிந்த பலரும் அந்த குழந்தைக்காக பணம் திரட்டுகின்றனர் . அவர் எதிர்பார்த்ததை விட பணம் வந்து சேர்க்கிறது . இருந்தும் ஒரு சிக்கல் . புதிதாக பல பிரச்னைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்குகின்றனர் . காத்திருக்க வேண்டிய சூழல் . மற்றொரு நாட்டில் இருந்து இங்கு இறக்குமதி செய்வது சட்டவிரோதமானது. மருந்துகளின் விலை காப்புரிமை இன்னும் கூடுதல் தொகை . அதையும் மீறி சட்ட விரோதமாக அதிக விலை கொடுத்து சந்தையில் வாங்கினாலும் அவளை காப்பாற்ற முடியாது என்ற சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள் .
மருத்துவ அரசியல் . தனது குழந்தைக்கு தினமும் தந்தை சில கதைகளை சொல்கிறார் . அதை எல்லாம் ஸ்டாப் மோஷன் அழகான அனிமேஷன்களுடன் பின்னிப் பிணைந்து சிறப்பாக காட்சி படுத்தி இருந்தனர் . இந்த நோயினால் போராடும் மகள் மற்றும் குடும்பத்தின் கதையாக மற்றும் நின்றுவிடாமல் மருத்துவ துறையின் பொறுப்புக்கள் , மருந்துகளின் விலை . எதிர்கொள்ளும் சிக்கல்கள் அனைத்தையும் மிக அழுத்தமாக சொல்கிறது . என் குழந்தையை காப்பாற்ற நான் எதையும் செய்வேன் என தந்தையின் முயற்சி போராட்டம் மருந்து அரசியல் கவனிக்கவேண்டிய ஒரு படம் .
ஒரு குடும்பத்தின் நிஜ வாழ்க்கையில் இப்படி பட்ட சம்பவம் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் அப்படியே பிரதிபலிதாக தோன்றியது . முடிவில் உண்மை குடுபத்தின் சில கோப்பு காட்சிகள் இடம்பெற்று இருந்தன . . நான் ஐரோப்பா திரைப்பட விழா SA . Festival Scope தளத்தில் பார்த்தேன் .

Post a Comment