Zero To Hero (2021) / Chi-Man Wan - Netflix 94 வது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட ஹாங்காங் நாட்டு சார்பில் அனுப்பிவைக்கப்பட்டு இருக்கும் படம் Zero To Hero . பிறக்கும் போதே உடலில் பிரச்னையுடன் பிறக்கும் ஒருவரை கண்டு பரிதாபப்படும் உலகில் நீயும் அனைவருக்கும் சமம் உன்னாலும் முடியும் . நீ சாதாரணமாக இல்லை அசாதாரணமாக இருக்க வேண்டும் . என தாய் மகனிடம் கூறுகிறார் . அதற்க்கு பிறகு மகன் ஓட ஆரம்பிக்கிறார் . பல வெற்றிகளை வாங்கி தருகிறார் . ஹாங்காங்கின் பாராலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கம் வென்ற தடகள வீரரான Mom's Wonder boy என்றழைக்கப்பட்ட So Wa Wai பற்றிய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்.
தான் இது . மஞ்சள்காமாலையுடன் பிறக்கும் இவருக்கு இரண்டு மூட்டுகளிலும் பிரச்னை . பிறகு மூளையிலும் பிரச்னை , காதுகேளாமை . டி36 என்ற பிரிவில் எப்படி இவர் தொடர்ந்து 6 தங்க பாதங்களை வென்றுள்ளார் . மொத்தமாக 12 . 2008 ல் இவர் வைத்த ரெக்கார்ட் ஐ இன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை என தகவல் . இவரின் முதுகெலும்பாக பக்கபலமாக தாயின் பயணமும் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் . ஸ்போர்ட்ஸ் ட்ராமா என்றாலே நம்மை அதிக உணர்ச்சி வச பட வைக்கும் . எப்படியாவது ஜெயித்து காட்டிவிடு என நம்மை அறியாமலே சொல்வோம் . தாராளமாக பார்க்கலாம் ஒருமுறை Netflix

Post a Comment