நான் மிகவும் நேசிக்கும் திரைப்பட இயக்குனர் Zhang Yimou !

நான் மிகவும் நேசிக்கும் திரைப்பட இயக்குனர் பட்டியல் என எடுத்து பார்த்தல் முதலில் நினைவில் வரும் இயக்குனராக இருப்பவர் Zhang Yimou தான் , அவரின் ஒருசில படங்கள் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமானவை . குறிப்பாக நிறைய சீன படங்களை தேடிப் பார்க்கும் ஆர்வத்தை துவக்கி வைத்தவர் . இவருக்கு வயது இப்போது 71 , சீனாவின் ஐந்தாம் தலைமுறை இயக்குனர்  . இவரின் பெரும்பாலான படங்கள் உலக திரைப்பட விழாக்களிலும் , திரையரங்குகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .  இவரின் இயக்கத்தில் வெளிவந்து நான் பார்த்த எந்த ஒரு திரைப்படமும் என்னை ஏமாற்றியது இல்லை எல்லாம் ஒரு விதத்தில் எனக்கு மிகவும் பிடித்த பட்டியலில் தான் வைத்துள்ளேன் . 
இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான Full River Red (2023)  இந்த திரைப்படம் போன வாரம் வரை நம்பர் 1 திரைப்படமாக உலக அளவிலும் , சீனாவிலும் கொடி கட்டி பறந்துகொண்டிருந்தது  . கிட்ட தட்ட 5000 கோடிகளை கடந்துள்ளதாக தகவல். இன்றும் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது . கூடிய விரைவில் டிஜிட்டல் வெளியீடாக வரலாம் . பார்க்க ஆர்வமாக உள்ளேன் , விரைவில் பார்த்துவிடுவேன் என நம்புகிறேன் . இயக்குனரை பற்றியும் அவரின் The Flowers Of War , மற்ற திரைப்படங்கள் குறித்து ஜா தீபா அவர்கள் - மனதை உருக வைக்கும் Director Zhang Yimou! - காரணம் என்ன? -  PT Prime Theater என்ற Youtube  வீடியோ ஒன்றை உங்கள் பார்வைக்கு பகிர்கிறேன் .  

"இன்டர்நெட்"  என்ற இந்த ஆல்பம் கிரியேட் செய்த  சமயத்தில் நான் பார்த்த எனக்கு பயனுள்ள  Youtube விடீயோக்களை பற்றியும் சேனலை பற்றியும் சிறிய போஸ்டாக போடவேண்டும் என்றுதான் துவங்கினேன் .  ஆனால்  Youtube ல் பெரும்பாலான மற்ற பொழுதுபோக்கு வகையும் , தொழில்துறை தொடர்பான Update , tutorial போன்றவை தான் அதிகம் பார்த்துள்ளேன் .   Apps stats அடிப்படையில் கடந்த சில மாதங்களாக  அதனை  குறைவாகவே பயன்படுத்தி வந்துள்ளேன்  . இனி வரும் நாள்களில் நான் Youtube பில் பார்த்த எனக்கும் உங்களுக்கும் பயனுள்ள விடியோக்களை இந்த Album ல் பதிவிடுகிறேன் . நன்றி 

வருகின்ற நாள்களில் நான் பரிந்துரைக்கும்  பத்து படங்களை நம்முடைய  #Handpicked டெலிக்ராம் குழுவில்  ல் காணலாம் . 

To Live , Not One Less , Road Home , Story Of Qiu ju , Hero , The Flowers Of War , One Second , Cliff Walkers , Curse Of The golden flower , House fo the flyimg Dragons   


Post a Comment

Previous Post Next Post