The Masterpiece (2024,Spain) - Short Film Intro By Tamil | மாஸ்ட்டர் பீஸ் ஓவியம்

Sundance Film Festival 2024 ல் திரையிடப்பட்டு SHORT FILM GRAND JURY PRIZE விருதை வென்றுள்ள இந்த குறும்படம் நிச்சயம் குறும்படப் பிரியர்களில் சிறந்த பட்டியலில் இணைய அதிகமாகவே வாய்ப்பிருக்கிறது . 

பணக்கார குடும்பத்தை சேர்ந்த தம்பதியினர் பழைய பொருட்கள் மற்றும் உபயோகிக்காமல் வைக்கப்பட்டு இருக்கும் சில பொருட்களை மறுசுழற்சி மையத்திற்கு அருகில் இருப்பவர்களிடம் எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள், அங்கே சலிப் மற்றும் அவரது மகன் யூசப் இருவரும் உள்ளனர் . அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று அந்த பொருளை வெளியே எடுத்து வந்து வைக்கிறார்கள் . 




கொஞ்சம் பிரம்மாண்டமான பெரிய வீடு சில கலைப்பொருட்கள் , ஓவியங்கள் நிறைந்துள்ளன. அங்கே சென்ற இருவருக்கும் மேலும் சில பொருட்கள் கிடைக்கின்றன. Salif & Yusaf இவர்களிடம் ஒரு ஓவியம் இருப்பதை பார்த்த அவர்கள் 100 யூரோ வை கொடுத்து தரும்படு கேற்கிறார்கள் . 

பல கோடிகள் மதிப்புள்ள ஓவியம் இந்த வீட்டின் அளவிற்கு சமமாகும் என பணக்கார தம்பதிகள் பேசிக்கொண்டு இருக்க முடிவில் என்ன ஆனது என்பதே இந்த குறும்படம் . படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல தனித்த சிந்தனையுள்ள ஒரு விஷயத்தை பற்றி பேசுகிறது. Background Music சிறப்பு

Post a Comment

Previous Post Next Post