மனிதர்களை புரிந்துகொள்வது எளிது, அடுத்து என்ன செய்விருக்க போகிறார்கள் அவர்களின் கருத்து எதை நோக்குகிறது என்பதையெல்லாம் சிறுது நேரம் அவர்களோடு செலவிட்டாலே சற்று கண்டறிய முடியும்.
2022 ஒரு உக்ரைன் படம் . உக்ரைன் போர் சமயத்தில் போரினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கதை அதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. Reflection என்ற படம் தான் அது , அந்த படம் எடுப்பதற்கு இயக்குனருக்கு முக்கிய காரணமாக ஒரு சம்பவம் இருந்தது. ஒருநாள் அவர்களுடைய அடுக்குமாடி குடியிருப்பில் கண்ணாடியில் புறா ஒன்று வேகமாக பறந்து வந்து மோதி இறந்துவிடும். புறாவிற்கு ஜன்னல் கண்ணாடிகள் வானத்தை போலவே ஒரு பிரதிபலிப்பை தந்திருக்கும். அதை தொடர்ந்து மனிதர்களின் எண்ணங்கள் அவர்களின் குணம் போர் சமயத்தில் எதை செய்வார்கள் என தொடரும் அந்த படம்.
மனிதன் பொதுவாகவே சுயநலக்காரன். தன் வசதிக்கு ஏற்ப தன்னகப்படுத்திக்கொள்வதில் கெட்டிக்காரர் . தன்னை சுற்றி என்ன நடக்கிறது எவன் எப்படி போனால் நமக்கு என்ன. அப்படி இயற்கைக்கு எதிராக மாரி பல்வேறு மாற்றங்களை நிகழ்த்திவிட்டு இருக்கிறார்கள் .
சரி மேல் சொன்னவை க்கும் இப்போது இந்த குறும்படத்திற்கும் என்ன தொடர்பு ?? இருக்கிறது . இங்கு ஐஸ்லாந்தில் ஒரு காஃபி கடையில் துவங்கிகிறது இந்த குறும்படம் , இங்கே சக ஊழியர்கள் மற்றும் கஸ்டமர் என சந்தித்து தொழில் நிமித்தமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அருகில் ஒரு கண்ணாடி ஜன்னல் அதன் மேலே ஒரு Seagull - நீள் சிறகு கடற்பறவை ஒன்று வேகமாக வந்து மோதுகிறது பிறகு அங்கிருந்து நாயகி வெளியே சென்று அந்த பறவையாய் பார்த்து என்ன செய்தார் என்பதே இந்த ஐந்து நிமிட குறும்படம் .
என்ன செய்திருப்பார் என உங்களால் யோசிக்க முடியும் அது பார்வையாளர்களின் பார்வைக்கே என இயக்குனர் விட்டுள்ளார். கான்ஸ் ல் Cannes Film Festival 2023 | Special Mention: Short Film
Post a Comment