ஜன்னல் ஓர இருக்கைகளும் பின்னே செல்லும் மரங்களும் , எதிரில் அமர்ந்திருக்கும் அறிமுகமில்லா முகங்களும் நம்முடைய ரயில் பயண நினைவுளில் நீங்கா நினைவிருப்பவை . ஒவ்வொருவருக்கும் பல விதமான நிகழ்வுகள் அவர்களுடனான மகிழ்ச்சியான தருணங்களும் நினைவில் இருக்கலாம் . அதுபோலத்தான் இந்த குறும்படமும்.
முதியவரான ஜுவான் தன்னுடைய ரயில் பயணத்தில் முன்பின் அறிமுகமில்லா ஒரு இளம் பெண்ணை சந்திக்கிறார் , அவர்களிடம் தன்னைப்பற்றியும் காதல் மனைவியை பற்றியும் , இதற்கு முன்பு அவர் ரயில்வே துறையில் வேலை செய்தது பற்றியும் இப்போதுள்ள வளர்ச்சியையும் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்.
BISFF #1
Autumn Otoño (2024) Directed by Anabel DíezLuis García-Jurado Centurión
முதல் குறும்படமே நன்றாக இருந்தது.
எட்டு நிமிட குறும்படத்தில் பலரையும் நினைவில் கொண்டுவர வைத்துள்ளார் இயக்குனர்.
இறுதி காட்சிகள் நன்றாக இருந்தது. வாய்ப்புள்ளவர்கள் காணலாம்.
ஸ்பானிஷ் மொழியில் சில குறுந்திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு :
பெங்களூரு சர்வதேச குறுந்திரைப்பட விழா துவங்கியது , ஆன்லைன் வாயிலாகவும் பார்க்கலாம் , இந்த மாதம் 18 க்குள் முடிவடையும் என நினைக்கிறன் விருப்பமுள்ளவர்கள் மேலும் தகவல்களுக்கு அவர்களின் தளத்தில் தெரிந்துகொள்ளலாம் . அடுத்தடுத்த பதிவுகளில் நான் ரசித்த குறும்படங்களை பற்றி பதிவு செய்கிறேன் அனைத்தும் அங்கே மட்டுமே காணக்கிடைக்கும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
நன்றி
#ShortFilm | #Spain | #Spanish | #BISFF | #MoviesMuseum
Post a Comment